அக்னிச்சிறகுகள் படித்துக்கொண்டிருக்கிறேன். அப்துல் கலாமின் வாழ்க்கையை இப்பொழுது தான் நன்கு தெரிந்துகொள்ள ஆரம்பித்துளேன். அவர் வடிவமைத்த ஹோவர் ரக விமான தொழில்நுட்பத்தினை இன்னும் நமது இந்திய இராணுவம் பயன்படுத்தாமல் அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது வருத்ததிற்குறிய விடயமாகும்
Updates from ulagam RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ulagam
-
ulagam
யூடியுப் விழி வழங்கியின் துணையை கொண்டு ஒருவன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்திருக்கிறான். குழந்தையும் பெற்றிருக்கிறான். இப்பொழுது உள்ள தொழில்நுட்பங்கள் எவ்வாறு நன்கு உதவுகிறது என்பதற்கு இது ஒரு எ.க.
-
கலை
என்னுடன் வேலை பார்த்த ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர், இங்கு நோர்வேயில் இருந்தபடியே, ரஷ்யாவில் மனைவிக்கு பிரசவ வலி வந்த நேரத்திலிருந்து குழந்தை பிறந்த நேரம் வரைக்கும் video chat மூலம் மனைவியை, பிரசவத்தை பார்த்தபடியே இருந்தார். இடை இடையே எனக்கும் கூப்பிட்டு காட்டினார்
. இது நடந்தது 2001 அல்லது 2002 இல்.
-
-
ulagam
சென்னையில் இன்று காலை மின்சார ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. வியாசர்பாடி ஜீவா அருகே இந்த கோர விபத்து நடந்தது. 7 பேர் பலி. யார் ரயிலை இயக்கியது? எவ்வாறு இயக்கினார் என்று இது வரை தகவல் இல்லை.
-
ulagam
ரயிலை இயக்க 4 சாவிகள் தேவைப்படுமாம். தொலைக்காட்சியில் ஒரு அதிகாரி கூறினார். இன்று தான் அந்த விவரம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஏன் இந்த மாதிரியான தகவல்களை வெளியிடுகிறார் என்று தெரியவில்லை.
-
-
ulagam
புஷ் முதல் எடியூரப்பா வரை….
கடந்த சில மாதங்களில் பொது மக்கள் எவ்வாறு கொதித்துள்ளனர் என்பதை நாம் நன்கு அறிவோம். இது ஒரு மக்கள் புரட்சிக்கு ஒரு ஆரம்பம் என நான் நினைக்கிறேன். சில சமயங்களில் இது அரசியல் ஸ்டண்டாக கூட இருக்கலாம்….
மேலும் படிக்க http://balachandar.net/blog334-2009-04-28.html-
ரவி
மக்கள் புரட்சியா !!! bush மீது வீசியவருக்கு இருந்த தெளிவு, தீவிரம் மற்றவர்களிடம் இல்லை. யாரு வீசினாலும் குறி பார்த்து வீசச் சொல்லுங்கப்பு
-
ulagam
ஆமாம். அவரிடம் மற்றவர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். லூசு பயலுவோ! எல்லாத்தையும் முன்னாடியே போடுரானுங்க…
-
-
-
ulagam
தேர்தல் ஸ்பெஷல் – இனியாவது சிந்தியுங்கள்…. http://balachandar.net/blog333-2009-04-22.html
-
ulagam
சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் http://balachandar.net/blog327-2009-01-20.html
-
ulagam
பொங்கலோ பொங்கல்! அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் http://balachandar.net/blog325-2009-01-14.html
-
ulagam
அறிவை வாங்கினேன். குருதியை கொடுத்தேன் http://balachandar.net/blog324-2009-01-12.html
-
ulagam
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
ulagam
ஓ போடு: 2009ஆம் ஆண்டின் கனவுக்கன்னி யார்? http://balachandar.net/poll321-2008-12-31.html
-
ரவி
தமன்னா !
-
ulagam 8:36 am on May 3, 2009 Permalink |
100 பக்கம் வரை படித்திருக்கிறேன். நிறைய சுவரஸ்யமான விடயங்கள் உள்ளன. கலாமும் என்னை போல் இருந்திருக்கிறார் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது…
ulagam 8:39 am on May 3, 2009 Permalink |
இது வரை படித்ததில், கலாமுக்கு சுற்றும் நல்லவைகளாக அமைந்து விட்டது. அவரது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சகாக்கள், உறவினர்கள். எனவே தான் அவரால் சாதிக்க முடிந்தது. கூ்ட இருப்பவர்களால், நாடே போற்றும் நல்ல மனிதராகவும், விஞ்ஞானியாகவும் அவரால வளர முடிந்தது.
ரவி 9:52 pm on May 3, 2009 Permalink |
கல்லூரிக் காலத்தில் கலாம் மீது மிகப் பெரிய ஈர்ப்பு இருந்தது. இப்போது அந்த அளவு இல்லை. கலாமின் தனி வாழ்க்கை காரணமாக (இசுலாமியர், ஏழை, தமிழர், திருமணம் ஆகாதவர், இராணுவ ஆயுதங்கள், அணு ஆராய்ச்சி என்ற கவரக் கூடிய துறை) அவருடைய சாதனைகளுக்கு ஊடக வெளிச்சம் கிட்டியதே நமக்கு அவர் மீது உள்ள ஈர்ப்புக்கு காரணம். பணியிடச் சாதனைகளை மட்டும் கருத்தில் கொண்டால் நாட்டில் நிறைய கலாம்கள் இருக்கலாம்.
புருனோ 9:08 am on May 5, 2009 Permalink |
கலாமின் வாழ்க்கை கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்பது என் கருத்து.
முன்னேறுவதற்கு தொழில் திறனுடன் (professional competence) அரசியல்வாதிகள் / அதிகாரிகளுடன் பழகுவதும் (human relations) முக்கியம் என்பது அவரது வாழ்க்கை மறைமுகமாக உணர்த்துவது
மற்றப்படி (அரச பரம்பரை அப்பா, அரசியல்வாதி மாமனார், நீதிபதி சித்தப்பா போன்ற) எந்த வித பிடிமானமும் ஒருவரால் தனது திறமை மற்றும் செயல்களால் மட்டும் நாட்டின் குடியரசு தலைவராக முடியும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு
ulagam 9:09 am on May 6, 2009 Permalink |
ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் புத்தகம் படிக்கும் பொழுது ஒரு விதமான உணர்வுகள் வருகின்றன. சில விடயங்களை எழுதாமல் பாதியிலேயே விட்ட மாதிரி இருக்கு.
புருனோ 10:40 pm on May 6, 2009 Permalink
முழு உண்மைகளை எழுத முடியாது. நான் எனது கல்லூரி நினைவுகளை (சிறிது கற்பனையுடன்) வலைப்பதிவில் எழுதி வருகிறேன்.
அதில் வருபவர்கள் அனைவருமே நல்லவர்கள் / அப்பாவிகள் தான்
–
மீதியை எழுதி ஏன் பிரச்சனை. சாக்கடையை ஏன் கிளற வேண்டும்
–
நானே இப்படி நினைக்கும் போது ஒரு குடியரசு தலைவருக்கு எவ்வளவு பொறுப்பு வேண்டும்
–
சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (மற்றும் ஸ்ரீரங்கத்து தேவதைகள் படித்திருக்கிறீர்களா)
ரவி 1:36 am on May 7, 2009 Permalink |
குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்றெல்லாம் யாராவது குறிக்கோள் கொண்டிருப்பார்களா!!! கலாம் குடியரசுத் தலைவர் ஆனது அவரே எதிர்ப்பார்த்திருக்காத ஒரு நிகழ்வாகத் தான் இருக்க வேண்டும். மற்றபடி அவரது திறன்கள், குணங்கள் குறித்து நீங்கள் கூறுவதை ஒப்புக் கொள்கிறேன்.
புருனோ 2:00 am on May 7, 2009 Permalink
அவர் குடியரசு தலைவர் பதிவியை குறிவைத்தார் என்று நான் கூறவில்லை