Updates from ulagam RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ulagam 3:22 pm on December 28, 2009 Permalink | Reply
    Tags: எழுத்தானி, , , கட்டற்ற   

    வணக்கம்,

    எழுத்தாணி – ஒரு புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள்

    பயன்படுத்திப்பாருங்கள். உங்கள் கருத்தினை அனுப்புங்கள்

    எழுத்தாணியை கீழ் இறக்க

    http://api.ulagam.net/download/ezhuthaani.exe

    எடுத்தக்காட்டு:

    அறம் செய விரும்பு
    aRam ceya virumpu

    குறிப்பு: இது முதல் பதிப்பு. கோளாறுகள் இருக்கும்.

     
    • ரவி 9:23 am on December 30, 2009 Permalink | Reply

      முயற்சிக்கு வாழ்த்துகள் பாலா. எழுத்தாணி என்று எழுதுவது சரியாக இருக்கும்.

  • ulagam 1:20 am on July 6, 2009 Permalink | Reply
    Tags: , ஓட்டு   

    2009க்கான பட்ஜெட் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

    http://balachandar.net/poll337-2009-07-06.html

     
  • ulagam 1:33 am on June 13, 2009 Permalink | Reply
    Tags: , பன்பலை,   

    தமிழ் வானொலி விட்ஜெட்
    ———————————————–
    நண்பர்களே!

    நெடுநாட்களுக்குப்பிறகு புதிய சேவையுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வானொலி பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இப்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நிறைய பன்பலைகள், சாதாரண அலைவரிசைகள் எனப்பல வானொலிகள் தங்களது சேவைகளை அளிக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க, இணையத்திலும் நாம் பற்பல வானொலி சேவைகளை கண்டிருக்கிறோம். கேட்டிருக்கிரோம். ….

    வானொலி விட்ஜெடினை பெற

    http://tinyurl.com/lab4oc

     
  • ulagam 8:53 pm on May 28, 2009 Permalink | Reply
    Tags: சிறுமி, சிறுவர், , ஸ்பெல்லிங் பீ   

    ”ஸ்பெல்லிங் பீ” என்ற போட்டியில் இந்திய-அமெரிக்க சிறுமி முதலிடம் பெற்றுள்ளார். அமெரிக்கர்கள் ஆங்கிலத்தினை வளர்க்க இது மாதிரியான நிகழ்ச்சியினை நடத்துகிறார்கள். தமிழில் இந்த மாதிரியான நிகழ்ச்சி எந்த ஒரு தொலைக்காட்சி நடத்தினால் எவ்வாறு இருக்கும்?

    1. சிறுவர் / சிறுமிகள் தமிழ் சொற்களை நன்கு கற்பார்கள்.
    2. சிறுவர் / சிறுமிகளிடம் தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வம் மென்மேலும் வளரும்.
    3. தமிழ் தெரிந்தால் பேரும் புகழும் வாங்கலாம் என்ற என்ற எண்ணம் அவர்களுக்கு வரும்.

     
    • yemkay 12:01 am on May 29, 2009 Permalink | Reply

      விசய் டிவியில் ”தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு” என்று ஒரு நிகழ்ச்சி வருகிறது.

      • ulagam 6:48 am on May 29, 2009 Permalink | Reply

        எம்கே,
        அது பேச்சுப்போட்டி. சொற்போட்டி அல்ல. ஸ்பெல்லிங் பீ என்பது ஆங்கில சொற்போட்டி.

      • ரவி 7:19 am on May 29, 2009 Permalink | Reply

        எனக்கு இந்த நிகழ்ச்சியில் விருப்பம் இல்லை. தமிழ் என்றாலே இலக்கியம், மேடைப்பேச்சு என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்குவது போல இருக்கிறது.

    • ரவி 7:18 am on May 29, 2009 Permalink | Reply

      நல்ல யோசனை பாலா.

      http://freerice.com போல ஒரு தளம் இருந்தா நல்லா இருக்கும்.

      தமிழ் சொற்கள் பழகுவதற்கான ஒரு விளையாட்டு முயற்சி –

      http://www.thiruthamizh.com/index_files/Page545.htm

      http://koodal1.blogspot.com/2007/05/blog-post_03.html

      http://www.hindu.com/2006/05/10/stories/2006051011240400.htm

  • ulagam 12:03 am on May 18, 2009 Permalink | Reply  

    சர்வம் படம் பார்த்தேன். ஏண்டா பார்த்தேன் என்றாயிற்று. ஒரு கதையும் இல்லை. ஒன்னும் இல்லை. திரைக்கதையை வைத்து படத்தினை நகர்த்த முயன்றுள்ளனர். ஆர்யாவுக்கு இது நல்ல ரிப்பிரஷ். திரிஷா அழகாக வந்துள்ளார். ஹாரி பாட்டர் போல் சிறுவன் படு சுட்டியாக உள்ளான்.
    தேர்வு: **
    பாடல்கள்: ஒன்றும் நல்லா இல்லை. அவ்வப்பொழுது இளையராச அவர்களின் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்

     
  • ulagam 11:59 pm on May 17, 2009 Permalink | Reply
    Tags: , ,   

    இன்று
    ——
    பங்கு சந்தை 2000 புள்ளிகளை தாண்டி உயர்ந்தது..மத்தியில் காங்கிரஸின் ஆட்சி மறுபடியும் வந்ததால் இந்த உயர்வு. நிலையான ஆட்சி அமைய மக்கள் வாக்களித்துள்ளனர்
    ——
    பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? இலங்கை அரசு 25 வருட போரை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதா..? எதுவும் தெரியவில்லை. பல இடங்களில் வெவ்வேறு செய்திகள்.
    ——

     
  • ulagam 2:06 am on May 8, 2009 Permalink | Reply
    Tags: , ஒக்கனெக்கல், காவிரி   

    இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று நானும் எனது அறைநண்பர்களும் ஒக்கனெக்கலுக்கு செல்கிறோம். அது பற்றி உங்களுக்கு தெரிந்த விடயங்களை கூறுங்கள்.

     
  • ulagam 8:41 am on May 7, 2009 Permalink | Reply
    Tags: கிறுக்கல்...   

    எனையாலும் அழகே.. தமிழே…
    என்னவென்று உன்னை நான் வர்ணிப்பது
    நினைக்கும்பொழுதெல்லம் உன் சிரிப்பொலி
    முத்துக்களாய் சிதறுகின்றது…

    உன்னருகில் நானிருந்தால் என்னையே
    நான் மறந்து விடுகிறேன்.
    உன்னை விட்டு சென்றாலும் என் மனம் உன்னை சுழலும்.
    கதிரவனை பூமி சுற்றுவது போல!

    உனது புன்னகை பொன்னகைக்கு ஈடாகுமா?
    மின்னுவதெல்லாம் பொன்னல்ல ஆனால் பெண்னே
    நீ மின்மினுத்துக்கொண்டு என்னை சுண்டி இழுக்கிறாய்

    என்னிடம் வந்துவிடு!
    என்னை சரணடைந்து விடு!
    எனது பிறவி பூர்த்தியடைய…..!

    பி.கு: காதலன் தன் காதலியை நினைத்து கிறுக்கியிருக்கும் ஒரு வகையான கிறுக்கல்

     
  • ulagam 9:45 pm on May 3, 2009 Permalink | Reply
    Tags: ,   

    பங்குச்சந்தையில் எப்படி பங்குகளை வாங்கவும் விற்கவும் பற்றி எங்கு தெரிந்துகொள்வது? ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்டிடம் கணக்கு வைத்துள்ளேன். எவ்வாறு அதனை பயன்படுத்துவது என்பது பற்றி யாராவது கூறமுடியுமா?

     
    • ரவி 9:49 pm on May 3, 2009 Permalink | Reply

      ஏற்கனவே பங்கு வணிகத்தில் இருக்கும் ஒரு நண்பரைப் பிடியுங்கள். அது தான் சிறந்த வழி :)

    • புருனோ 8:58 am on May 5, 2009 Permalink | Reply

      உங்களுக்கு ஏழரை சனியோ அஷ்டம சனியோ நடக்கவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள் :) :) :)

      • ulagam 9:08 am on May 6, 2009 Permalink | Reply

        இன்னும் தெரியல… கற்றது கையளவு… கல்லாலது உலகளவு… :)

  • ulagam 8:34 am on May 3, 2009 Permalink | Reply
    Tags: கனவு, கலாம், அக்னிச் சிறகுகள்   

    அக்னிச்சிறகுகள் படித்துக்கொண்டிருக்கிறேன். அப்துல் கலாமின் வாழ்க்கையை இப்பொழுது தான் நன்கு தெரிந்துகொள்ள ஆரம்பித்துளேன். அவர் வடிவமைத்த ஹோவர் ரக விமான தொழில்நுட்பத்தினை இன்னும் நமது இந்திய இராணுவம் பயன்படுத்தாமல் அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது வருத்ததிற்குறிய விடயமாகும்

     
    • ulagam 8:36 am on May 3, 2009 Permalink | Reply

      100 பக்கம் வரை படித்திருக்கிறேன். நிறைய சுவரஸ்யமான விடயங்கள் உள்ளன. கலாமும் என்னை போல் இருந்திருக்கிறார் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது…

    • ulagam 8:39 am on May 3, 2009 Permalink | Reply

      இது வரை படித்ததில், கலாமுக்கு சுற்றும் நல்லவைகளாக அமைந்து விட்டது. அவரது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சகாக்கள், உறவினர்கள். எனவே தான் அவரால் சாதிக்க முடிந்தது. கூ்ட இருப்பவர்களால், நாடே போற்றும் நல்ல மனிதராகவும், விஞ்ஞானியாகவும் அவரால வளர முடிந்தது.

      • ரவி 9:52 pm on May 3, 2009 Permalink | Reply

        கல்லூரிக் காலத்தில் கலாம் மீது மிகப் பெரிய ஈர்ப்பு இருந்தது. இப்போது அந்த அளவு இல்லை. கலாமின் தனி வாழ்க்கை காரணமாக (இசுலாமியர், ஏழை, தமிழர், திருமணம் ஆகாதவர், இராணுவ ஆயுதங்கள், அணு ஆராய்ச்சி என்ற கவரக் கூடிய துறை) அவருடைய சாதனைகளுக்கு ஊடக வெளிச்சம் கிட்டியதே நமக்கு அவர் மீது உள்ள ஈர்ப்புக்கு காரணம். பணியிடச் சாதனைகளை மட்டும் கருத்தில் கொண்டால் நாட்டில் நிறைய கலாம்கள் இருக்கலாம்.

        • புருனோ 9:08 am on May 5, 2009 Permalink | Reply

          கலாமின் வாழ்க்கை கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்பது என் கருத்து.

          முன்னேறுவதற்கு தொழில் திறனுடன் (professional competence) அரசியல்வாதிகள் / அதிகாரிகளுடன் பழகுவதும் (human relations) முக்கியம் என்பது அவரது வாழ்க்கை மறைமுகமாக உணர்த்துவது

          மற்றப்படி (அரச பரம்பரை அப்பா, அரசியல்வாதி மாமனார், நீதிபதி சித்தப்பா போன்ற) எந்த வித பிடிமானமும் ஒருவரால் தனது திறமை மற்றும் செயல்களால் மட்டும் நாட்டின் குடியரசு தலைவராக முடியும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு

          • ulagam 9:09 am on May 6, 2009 Permalink | Reply

            ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் புத்தகம் படிக்கும் பொழுது ஒரு விதமான உணர்வுகள் வருகின்றன. சில விடயங்களை எழுதாமல் பாதியிலேயே விட்ட மாதிரி இருக்கு.

            • புருனோ 10:40 pm on May 6, 2009 Permalink

              முழு உண்மைகளை எழுத முடியாது. நான் எனது கல்லூரி நினைவுகளை (சிறிது கற்பனையுடன்) வலைப்பதிவில் எழுதி வருகிறேன்.

              அதில் வருபவர்கள் அனைவருமே நல்லவர்கள் / அப்பாவிகள் தான்

              மீதியை எழுதி ஏன் பிரச்சனை. சாக்கடையை ஏன் கிளற வேண்டும்

              நானே இப்படி நினைக்கும் போது ஒரு குடியரசு தலைவருக்கு எவ்வளவு பொறுப்பு வேண்டும் :) :) :)

              சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (மற்றும் ஸ்ரீரங்கத்து தேவதைகள் படித்திருக்கிறீர்களா)

          • ரவி 1:36 am on May 7, 2009 Permalink | Reply

            குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்றெல்லாம் யாராவது குறிக்கோள் கொண்டிருப்பார்களா!!! கலாம் குடியரசுத் தலைவர் ஆனது அவரே எதிர்ப்பார்த்திருக்காத ஒரு நிகழ்வாகத் தான் இருக்க வேண்டும். மற்றபடி அவரது திறன்கள், குணங்கள் குறித்து நீங்கள் கூறுவதை ஒப்புக் கொள்கிறேன்.

            • புருனோ 2:00 am on May 7, 2009 Permalink

              அவர் குடியரசு தலைவர் பதிவியை குறிவைத்தார் என்று நான் கூறவில்லை :) :)

  • ulagam 4:47 am on May 1, 2009 Permalink | Reply
    Tags: பிரசவம், யூடியுப், விழி,   

    யூடியுப் விழி வழங்கியின் துணையை கொண்டு ஒருவன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்திருக்கிறான். குழந்தையும் பெற்றிருக்கிறான். இப்பொழுது உள்ள தொழில்நுட்பங்கள் எவ்வாறு நன்கு உதவுகிறது என்பதற்கு இது ஒரு எ.க.

    http://news.bbc.co.uk/2/hi/technology/8028625.stm

     
    • கலை 4:31 pm on May 1, 2009 Permalink | Reply

      என்னுடன் வேலை பார்த்த ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர், இங்கு நோர்வேயில் இருந்தபடியே, ரஷ்யாவில் மனைவிக்கு பிரசவ வலி வந்த நேரத்திலிருந்து குழந்தை பிறந்த நேரம் வரைக்கும் video chat மூலம் மனைவியை, பிரசவத்தை பார்த்தபடியே இருந்தார். இடை இடையே எனக்கும் கூப்பிட்டு காட்டினார் :) . இது நடந்தது 2001 அல்லது 2002 இல்.

  • ulagam 6:38 am on April 29, 2009 Permalink | Reply
    Tags: , ரயில்   

    சென்னையில் இன்று காலை மின்சார ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. வியாசர்பாடி ஜீவா அருகே இந்த கோர விபத்து நடந்தது. 7 பேர் பலி. யார் ரயிலை இயக்கியது? எவ்வாறு இயக்கினார் என்று இது வரை தகவல் இல்லை.

     
    • ulagam 6:41 am on April 29, 2009 Permalink | Reply

      ரயிலை இயக்க 4 சாவிகள் தேவைப்படுமாம். தொலைக்காட்சியில் ஒரு அதிகாரி கூறினார். இன்று தான் அந்த விவரம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஏன் இந்த மாதிரியான தகவல்களை வெளியிடுகிறார் என்று தெரியவில்லை.

  • ulagam 3:58 am on April 28, 2009 Permalink | Reply
    Tags: செருப்பு, புஷ், ஷூ   

    புஷ் முதல் எடியூரப்பா வரை….
    கடந்த சில மாதங்களில் பொது மக்கள் எவ்வாறு கொதித்துள்ளனர் என்பதை நாம் நன்கு அறிவோம். இது ஒரு மக்கள் புரட்சிக்கு ஒரு ஆரம்பம் என நான் நினைக்கிறேன். சில சமயங்களில் இது அரசியல் ஸ்டண்டாக கூட இருக்கலாம்….
    மேலும் படிக்க http://balachandar.net/blog334-2009-04-28.html

     
    • ரவி 5:29 am on April 28, 2009 Permalink | Reply

      மக்கள் புரட்சியா !!! bush மீது வீசியவருக்கு இருந்த தெளிவு, தீவிரம் மற்றவர்களிடம் இல்லை. யாரு வீசினாலும் குறி பார்த்து வீசச் சொல்லுங்கப்பு :)

      • ulagam 6:08 am on April 28, 2009 Permalink | Reply

        ஆமாம். அவரிடம் மற்றவர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். லூசு பயலுவோ! எல்லாத்தையும் முன்னாடியே போடுரானுங்க…

  • ulagam 11:20 pm on April 22, 2009 Permalink | Reply
    Tags: , ,   

    தேர்தல் ஸ்பெஷல் – இனியாவது சிந்தியுங்கள்…. http://balachandar.net/blog333-2009-04-22.html

     
  • ulagam 4:28 am on January 20, 2009 Permalink | Reply
    Tags: , ,   

    சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் http://balachandar.net/blog327-2009-01-20.html

     
  • ulagam 11:29 pm on January 13, 2009 Permalink | Reply
    Tags: பொங்கல்   

    பொங்கலோ பொங்கல்! அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் http://balachandar.net/blog325-2009-01-14.html

     
  • ulagam 10:40 am on January 12, 2009 Permalink | Reply
    Tags: , , புத்தககாட்சி, இரத்ததானம்   

    அறிவை வாங்கினேன். குருதியை கொடுத்தேன் http://balachandar.net/blog324-2009-01-12.html

     
  • ulagam 12:16 pm on December 31, 2008 Permalink | Reply  

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

     
  • ulagam 5:10 am on December 31, 2008 Permalink | Reply
    Tags: , , கனவு கன்னி   

    ஓ போடு: 2009ஆம் ஆண்டின் கனவுக்கன்னி யார்? http://balachandar.net/poll321-2008-12-31.html

     
  • ulagam 10:12 pm on December 30, 2008 Permalink | Reply
    Tags: ,   

    டாப் மூன்று தமிழ் திரைப்படங்கள் 2008 http://balachandar.net/blog320-2008-12-30.html

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel