Updates from தமிழினியன் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • தமிழினியன் 7:00 pm on May 12, 2011 Permalink | Reply
    Tags: , , கலப்பு மனம், மூடநம்பிக்கை எதிர்ப்பு   

    அழகர்சாமியின் குதிரை மூலக்கதையிலிருந்து அங்கங்கே விலகியிருந்தாலும் அது துருத்திக் கொண்டிருக்காமல் இயல்பாய் இருப்பது படத்திற்கான அழகு. அழகான இடம் அழகர்சாமியின் காதலும் அவனுக்கான பாடலும், கொஞ்சம் எதிர்மறையான அம்சம் ராமகிருஷ்னனுடைய காதலுக்கான பாடல். 80களின் காலத்தைப் படம்பிடிக்கும் போது சமகாலம் அங்கங்கே எட்டிப்பார்த்துவிடுவது என்னமோ போலிருக்கிறது. இளையராஜா என்னுடைய தலைமுறைக்காகவும் தன்னுடைய முழு உழைப்பைக் கொட்டிக்கொண்டிருக்கிறார், ஆனால், அது படத்திற்குப் பயன்பட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். முதலில் வரும் பின்னணி இசையில் மணிதன் அதகளப்படுத்துகிறார் என்றால், அழகர்சாமி பௌர்னமிக்குஅம்சங்கள்ள் குதிரையுடன் திரும்பி வருவதாக வாக்கு கூறிய பிறகு அந்தப் பெண் அவனைத் தேடி ஓடும் இடத்தில் தவிப்பை காட்சியை விட செவிக்குள் வந்து இசைத்துவிட்டுப் போகிறார். இறுதியில் குதிரை கெட்டவர்களை அனைவரையும் தண்டிப்பதெல்லாம் இது என்னமோ பள்ளி மாணவர்கள் போட்ட நாடகமோ என்ற விளைவைத் தந்துவிடுகிறது.

    படத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியத் தகவல், கோடங்கி, குறி சொல்லும் மந்திரவாதி, இவர்களது மூடப்பழக்கங்கள் எல்லாம் பகடி செய்யப்படுவதும், இறுதிக்காட்சியின் கலப்புமனத்தை ஆதரிக்கும் காட்சியும் பாரட்டப்படவேண்டிய .

     
  • தமிழினியன் 11:10 am on March 20, 2011 Permalink | Reply  

    exam படம் பார்த்தேன், கதையளவில் அற்புதம் ஆனால், தந்த விதத்தில் சொதப்பிவிட்டார்கள். இன்னொரு 12angry men போல்வந்திருக்க வேண்டிய படம் மொக்கையாகிவிட்டது. பட்டென முடிந்திருக்க வேண்டிய இடத்தை கோட்டை விட்டுவிட்டு நீதி பேசுகிறேன், போதனை சொல்கிறேன் பேர்வழி என்று இழு இழு என்று இழுத்துத் தொலைத்துவிட்டார்கள். லொயோலாவில் இருந்த காலங்களில் ஒரு நாளைக்கே இரண்டு மூன்று படங்கள் பார்த்ததுண்டு. இப்போதெல்லாம் ஒரு வாரத்துக்கு ஒரு படம் தான், அதுவும் சமயத்துல இப்படி கடுப்பேத்திடுது.

    சென்ற ஞாயிறு My cousin Vinny பார்த்தேன். ரொம்ப மொக்கை போட்டுகிட்டு சுத்திகிட்டு இருக்குற பசங்களுக்கெல்லாம் அப்படி ஒரு பெண் நண்பி கிடைக்கனும்னு சாபமா குடுக்கலாம் :)

     
    • ரவி 5:30 pm on March 20, 2011 Permalink | Reply

      அன்பு இளவலே, உளறலுக்கு வருக :)

      இணையம் வந்த பிறகு, உலகப் படம் பார்க்கும் வழக்கம் கன்னா பின்னாவென்று பரவி இருக்கிறது என நினைக்கிறேன்… உங்கள் நண்பர்களும் அப்படித் தானா…

      • தமிழினியன் 7:00 pm on March 20, 2011 Permalink | Reply

        கிட்டத்தட்ட எல்லோருமே அப்டித்தான்… திரைப்பட விழாவுக்கு எல்லாம் கும்பலா கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு போயிருக்கோம்.

        • ரவி 9:04 pm on March 20, 2011 Permalink | Reply

          ஓ.. திரைப்பட விழாவுக்குப் போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால், கணினியில் இருக்கிற படங்களைப் பார்க்கவே நேரம் / ஆர்வம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் :(

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel