Updates from சந்தோஷ் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சந்தோஷ் குரு 9:36 am on January 25, 2010 Permalink | Reply  

    ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பகுதி எனக்கு பிடித்திருந்தது. அனைவரும் பொன்னியின் செல்வன் தரும் படிமத்தை வைத்துக்கொண்டு சோழர்களை (செல்வாவின் பாணியில் ச்ச்சோளர்கள் :-) ) இழிவுபடுத்திவிட்டனர் என்று காட்டுகத்தல் கத்திக்கொண்டு இருக்கின்றனர். கல்கி சோழர்களை, திரைப்பட இயக்குநர் விக்கிரமனின் படத்திலுள்ள நல்லவர்கள் போல படைக்க creative liberty இருக்கும் போது, செல்வா அவருடைய பாணியில் செய்தால் மட்டும் பொங்குவது எதற்காக?. நம் காலத்து தமிழ்த் தாத்தாவான சுஜாதா கூட கணையாழியின் கடைசிப்பக்கங்களில், சோழர்கள் பற்றிய நம் படிமம் சரியா என்று பல ஆண்டுகளுக்கு முன்னே எழுதியிருக்கிறார், Burton Stein என்பவரின் புத்தகத்தினை பற்றி விவரிக்கும் போது. நம் மனத்தில் உள்ள கற்பனையான சோழர் பிம்பத்தினை வேறு ஒருவர், தன் கற்பனையால் மாற்றினால், வெகுண்டு எழுபவர்களுக்கும் , சத்ரபதி சிவாஜி-வரலாற்று ஆய்வு-வன்முறை-கலகம் என்று இறங்கும் சிவசேனைகளுக்கும் என்ன வேறுபாடு?

     
    • புருனோ 5:06 pm on January 25, 2010 Permalink | Reply

      சுஜாதாவின் நடுநிலைமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது !!

      அதாவது அவர் எந்த நிலை என்பது அயோத்தியா மண்டபம் போன்ற கதைகளின் மூலம் தெளிவானது தானே

      இந்த கட்டுரையிலும் கடைசிவரியில் அவர் என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்.

      லெமூரியா சரடு !!

      ஏன் இந்த அவசரம். இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார் :) :) :)

      லெமூரியா என்பது உண்மையில்லை என்று வலிந்து நிருபிக்க அவருக்கு என்ன அவசரம் :) :) என்ன ஆத்திரம் :) :)

    • புருனோ 5:10 pm on January 25, 2010 Permalink | Reply

      அடுத்தாக, சோழர்கள் ” விக்ரமன் பட நல்லவர்கள்” என்று கல்கியும் கூறியதில்லை, அகிலனும் கூறியதில்லை, பாலகுமாரனும் கூறியதில்லை.

      சொல்லப்போனால் சோழர்களை பற்றி சுஜாதா கூட ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில் கூட அவர்களை விக்ரமன் பட நல்லவர்களாக காட்ட வில்லை

    • புருனோ 5:17 pm on January 25, 2010 Permalink | Reply

      தேவதை என்று ஒரு படம் வந்தது. அது கூட வரலாறும் சமகாலமும் சார்ந்த படம் தான்.. அதை யாரும் இந்த அளவு போட்டு தாக்க வில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

      அருந்ததி என்று ஒரு படம் வந்தது..அது கூட பேண்டசி தான். முதுகெலும்பை வைத்து தான் கொல்ல முடியும் என்று கதை இருந்த போது கூட யாரும் லாஜிக் கேள்வி கேட்க வில்லை

      ஆனால் இந்த படத்தை ஏன் போட்டு பிராண்டுகிறார்கள் என்றால், இங்கு ஒன்றுமே புரியவில்லை

      புதை குழியை ஹெலிகாப்டர் வைத்து தாண்ட முடியாதா போன்ற கேள்விகளை வேண்டுமானால் பேண்டசி என்று ஒதுக்கி விடலாம். ஆனால் அதை விட பல அடிப்படை அபத்தங்கள் உள்ளன

      முடிந்தால் யாராவது விளக்கவும்

      1. ஆண்ட்ரியாவை ஏன் அழைக்கிறார்கள்

      2. ரிமா ஏன் பார்த்திபனுடன் உடலுறவு வைக்க விரும்புகிறாள் (எப்படியும் படை வைத்து தானே அழிக்க போகிறார்கள்)

      3. ஏன் மேஜர் ரவி மட்டும் சேட்டலைட் போன் வைத்துள்ளார். அனைவரும் ஆளுக்கொன்று வைத்திருக்கலாமே

      இது போன்ற பல அபத்தங்கள் உள்ளன

      • சந்தோஷ் குரு 10:03 pm on January 25, 2010 Permalink | Reply

        // 1. ஆண்ட்ரியாவை ஏன் அழைக்கிறார்கள் // – ஏன்னா அவருக்குத்தான் அந்த பாண்டிய தளபதி எழுதிய குறிப்பினை interpret பண்ணும் திறமை உள்ளது.

        // 2. ரிமா ஏன் பார்த்திபனுடன் உடலுறவு வைக்க விரும்புகிறாள் // – Why not? பார்த்திபனின் நம்பிக்கையினை பெறுவதற்காக இருக்கலாம் இல்லையா? 300 என்ற படத்தில் கன்னி ஒருத்தியை நிர்வாணமாக்கி, அவள் மூலம் வருங்காலத்தை பற்றி அறிவார்கள் Spartanஇன பெருசுகள். அப்போது ஏன் நிர்வாணம் என்று கேட்பதில்லை. ஏன் என்றால் அது ஒரு கற்பனையோ அல்லது எதோ ஒரு தொன்மமோ அல்லது ஒரு எழவோ.

        3. சாட்டிலைட் போன் என்று explicitஆக சொல்லலையே. அவர் போன் (ஐபோன் போல உள்ளது) செய்கிறார், சாட்டிலைட்டினைக் காட்டுகின்றார்கள், simple GPSஆக கூட இருக்கலாமே. மற்ற மூவர், பாம்பினில் இருந்து தப்பிக்கும் போது எடுத்தவர மறந்துவிட்டார்களோ என்னவோ :-)

        • புருனோ 5:56 am on January 26, 2010 Permalink | Reply

          ரிமா, பார்த்திபனின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு ராணுவம் மூலம் தான் போரிடுகிறார்கள்

          அப்படி இருக்க ஏன் உடலுறவிற்கு அழைக்க வேண்டும்

          வெறுமனே தூது என்று சொன்னால் போதுமே

    • புருனோ 5:18 pm on January 25, 2010 Permalink | Reply

      படம் வெளிவந்தபின்னர் இது தான் இந்த என் படத்தின் கதை என்று சமீபத்தில் எந்த இயக்குனராவது கூறியதாக நினைவுள்ளதா

      அந்த அளவு ஜெர்க் அடிக்கும் திரைக்கதை இது

    • ரவி 5:24 pm on January 25, 2010 Permalink | Reply

      சோழர்களை எப்படி காட்டுகிறார்கள் என்பது எனக்குப் பிரச்சினை இல்லை. twist வைக்கிறேன் பேர்வழி என்று தொடர்பே இல்லாமல் இருக்கும் இரண்டாம் பாதி, இரண்டாம் பாதியின் சொதப்பலான திரைக்கதை, கதைக்குத் தேவையில்லாத வன்முறை / காமம் தான் எரிச்சல் அடைய வைத்தது.

      சோழர்கள் – பாண்டியர்கள் – கார்த்தி என்று எவர் பக்கமும் மனம் சாயாமல் போனதே இயக்குநரின் தோல்வி.

      முதல் 20 நிமிடத்தில் சோழர்களை அறிமுகம் செய்து, கார்த்தியை அவர்கள் அணியில் சேர்த்து, சோழர்களை வளமானவர்களாகவும் காட்டி இருந்தால் படம் ஓடி இருக்கும். The Last Samurai போல. எப்படி வேண்டிமானாலும் எடுக்க செல்வாவுக்கு உரிமை உண்டு. ஆனால், எதை எடுத்தாலும் ஒழுங்கா எடுத்தா தான் படம் ஓடும் :)

    • புருனோ 6:29 pm on January 25, 2010 Permalink | Reply

      //. எப்படி வேண்டிமானாலும் எடுக்க செல்வாவுக்கு உரிமை உண்டு. ஆனால், எதை எடுத்தாலும் ஒழுங்கா எடுத்தா தான் படம் ஓடும்//

      கண்ணாபின்னாவென்று வழிமொழிகிறேன்

      படம் வெளிவந்தபின்னர் இது தான் இந்த என் படத்தின் கதை என்று சமீபத்தில் எந்த இயக்குனராவது கூறியதாக நினைவுள்ளதா

      அது தான் செல்வராகவன் தன் படத்திற்கு தானே தந்த விமர்சணம் !!!

  • சந்தோஷ் குரு 2:16 pm on January 12, 2010 Permalink | Reply
    Tags:   

    இந்தியாடுடே இதழில் கமலஹாசன் பரிந்துரைத்த சிலபடங்களை பார்க்க துவங்கியுள்ளேன். Red Cliff (மொத்தம் நான்கு மணி நேரம் ஓடும் இரு பாகங்கள் கொண்ட படம்) என்ற திரைப்படம் பார்த்தேன். பல மசாலா படங்கள் கொடுத்த John Woo இயக்கியிருக்கிறார். தமிழில் ”மகா யுத்தம்” என்ற பெயரில் சென்னையில் ஓடுகிறது. முடிந்தால் கண்டிப்பாக பார்க்கவும், நல்ல ஒரு வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படம். நம் தொன்மத்தில் கூறும் சக்ரவியூகம் போல சீனாவில் உள்ள யின்-யாங் போர் உத்தி இந்த படத்தில் பயன்படுத்துகிறார்கள். கலக்கலாக உள்ளது. நம்மூர் ஷங்கரின் பிரம்மாண்டம் எல்லாம் John Woo முன்னால் பச்சா :-) .

     
    • ரவி 10:53 am on January 16, 2010 Permalink | Reply

      கமல் பரிந்துரைத்த முழுப் பட்டியல் கிடைக்குமா?

      • சந்தோஷ் குரு 1:35 pm on January 19, 2010 Permalink | Reply

        அது இந்தியாடுடே இதழ் அல்ல, சண்டே இந்தியன்

        What kind of world cinema do you like?

        If I mention only Citizen Kane, I would be leaving out Seventh Seal. Even if I select 60 films like Citizen Kane and Seventh Seal, I would still be leaving out some great modern films. There is a film called Magnolia, an American classic. And No Country for Old Men. Then there is Goya’s Ghosts. It was widely seen only in Europe, not in other parts of the world. There is another American movie called One False Move, which was released 15 years ago and it hardly had any takers. There are so many other movies. John Woo’s Red Cliff is such a grandiose movie.

        (அவருடைய நேர்காணல் இங்கே)

  • சந்தோஷ் குரு 11:39 am on January 9, 2010 Permalink | Reply
    Tags:   

    கடந்த இரண்டு நாட்களாக என் நண்பன் மூலம் (அவனுக்கு தெஹல்கா வழியாக) அறிமுகமான, குழலி மாணிக்கவேல் என்ற எழுத்தாளரின் எழுத்துக்கு அடிமையாகியிருக்கிறேன். வழக்கமான பாணி சிறுகதை அல்ல இவருடையது, இருந்தும் மறுபடி மறுபடி வாசிக்கவைக்கும் வசீகரம் கொண்டிருக்கிறது இவர் எழுத்து. இவருடைய இரு சிறுகதைகளும் (1,2), வலைப்பதிவு மட்டுமே எனக்கு அறிமுகம். ஆனால் கண்டிப்பாக இவருடைய முதல் சிறுகதை தொகுப்பினை படித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கேன்..

     
    • ரவி 10:02 pm on January 11, 2010 Permalink | Reply

      பேரிலேயே ஒரு ஈர்ப்பு இருக்கே ! இன்னும் ஆங்கிலச் சிறுகதைகள் படிக்கத் தொடங்கல. நல்லா புரியுற மாதிரி எழுதுற நாலு பேர் சொல்லுங்க :)

      • புருனோ 2:30 am on January 12, 2010 Permalink | Reply

        O.Henry
        Conan Doyle
        Jeffrey Archer
        Fredrick Forysth

        என்று ஆரம்பிக்கலாம்

  • சந்தோஷ் குரு 11:23 am on January 9, 2010 Permalink | Reply
    Tags:   

    The Baader Meinhof Complex என்ற ஜெர்மன் மொழிப்படம் பார்த்தேன். நம் மாவோயிஸ்ட் இயக்கம் போல, பல ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியினை உலுக்கிய ரெட் ஆமி ஃபேக்‌ஷன் (RAF) பற்றிய திரைப்படம். அருமையாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமான புகழுரை. வரலாற்றை முடிந்தவரை நடுநிலையாகவும், ஆச்சரியம் குறையாமல் தந்த ”ஒக்காமக்கா” திரைப்படம். Downfall படத்தில் ஹிட்லராக வந்து அசத்திய Bruno Ganzயை ஒரு காவலதிகாரியாக இதில் கண்டது நல்ல ஆச்சரியம்.

     
  • சந்தோஷ் குரு 10:08 pm on January 4, 2010 Permalink | Reply
    Tags:   

    இந்த வருட புத்தகக் கண்காட்சியில் “குடிபோதை: புனைவுகள் தெளிவுகள்” என்ற கட்டுரைத் தொகுப்பினை வாங்கினேன். புத்தக அட்டையில் ஆசிரியர்கள் பெயர் எதுவும் இல்லை. வீட்டுக்கு வந்தவுடன் அதைப் பார்த்து மறுகணமே, என் மனைவியும், என் தம்பியும், “யாரு உன் சாரு நிவேதிதா எழுதுன புக்கா” என்று கேட்கிறார்கள். சாருவின் ஒரு எழுத்தும் முழுதாக படிக்காதவர்கள் அவர்கள். எப்படி இப்படி ஒரு இமேஜ் பில்டப் பண்ணினாரு சாரு.

     
  • சந்தோஷ் குரு 2:44 pm on September 29, 2009 Permalink | Reply
    Tags:   

    பொக்கிஷம் படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. இந்த படத்தைப்பற்றி விரிவாக எழுத ஆசை எனக்கு. நிசமாலுமே சேரன் கோடம்பாக்கத்தின் ஒரு அபூர்வ படைப்பாளிதான்.

     
  • சந்தோஷ் குரு 1:55 pm on September 29, 2009 Permalink | Reply
    Tags: ,   

    கமலின் ஐம்பதாண்டு திரையுலக பிரவேசத்தை முன்னிட்டு, கமலதாரா ஸ்தோத்திரம், ஹாசர் அந்தாதி, கமலா சகஸ்ரநாமம் வெளியீட்டு விழா. உபயம்: விஜய் டி.வி. மறக்காமல் இன்று இரவு 8:30க்கு பாருங்கள். இல்லையென்றாலும் பரவாயில்லை இரவு 10:30க்கு ஒரு தடவையும், மறுநாள் காலை 11:00க்கும், மதியம் 2:30க்கும் கூட பார்க்கலாம். அதையே ஒரு மாதம் கழித்து “கமல் – விஜய் கோல்டன் மொமண்ட்ஸ்” என்று நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். உலக நாயஹ நமோ நமோ.

     
  • சந்தோஷ் குரு 12:50 pm on September 10, 2009 Permalink | Reply
    Tags:   

    ரீதிகௌளை பித்து கொஞ்ச நாட்கள் முன்பு பிடித்திருந்தது. மறுபடியும் அது துவங்கியுள்ளது. நான் அறிந்த ரீதிகௌளை ராக திரைப்பாடல்களை இங்கு பதிகிறேன். உங்களுக்கு வேறு பாடல்கள் தெரிந்தால் பின்னூட்டவும்.

    கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்
    கல்கோண உதட்டுக்காரி – ஒரு பொண்ணு ஒரு பையன்
    அழகான ராட்சசியே – முதல்வன்
    சுடும் நிலவு – தம்பி
    சின்ன கண்ணன் அழைக்கிறான்
    தீண்ட தீண்ட – துள்ளுவதோ இளமை
    தலையை குனியும் தாமரையே – (படம் பெயர் எனக்கு தெரியவில்லை)
    ராமன் கதை கேளுங்கள் – சிப்பிக்குள் முத்து

    ஜெயா தொலைக்காட்சியில் ரீதிகௌளை பற்றிய ஒரு அறிமுகம்

     
  • சந்தோஷ் குரு 1:49 pm on September 7, 2009 Permalink | Reply
    Tags:   

    சென்னையில் இருந்து சோளிங்கர், அங்கிருந்து பெங்களூருக்கு நான் செலவழித்த பேருந்து கட்டணம் மொத்தம் 180 ரூபாய். பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து என் வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்கு அளித்த கட்டணம் 150 ரூபாய் :-)

     
    • ரவி 3:12 pm on September 7, 2009 Permalink | Reply

      அரிசி கிலோ ஒரு ரூபாய். சிறுநீர் கழிக்க 2 ரூபாய்.

    • R.Arokiasamy 10:20 pm on September 16, 2009 Permalink | Reply

      govt. gives 1rs. rice. but urinal 2rs .its too bad.

  • சந்தோஷ் குரு 3:49 pm on September 4, 2009 Permalink | Reply  

    நெருங்கிய நண்பனொருவன் ”வாழும் கலை” வணிகர் ரவிசங்கரின் தீவிர பக்தன். சில நாட்களாக ஆளை காணவில்லை, இரண்டு நாட்கள் முன்பு பார்த்தால் மொட்டை அடித்து கொண்டு இருக்கிறான். என்னவென்று விசாரித்தால், அவன் பூணூல் அணிந்து பார்ப்பனனாக மாறிவிட்டானாம் (அவன் பார்ப்பனனும் அல்ல, பூணூல் அணியும் பழக்கமும் அவனுக்கு இல்லை). ஏனென்று கேட்டால், ருத்ரமும் காயத்ரி மந்திரமும் கற்றுக்கொள்ள ஆசை வந்தது, cross belt இல்லை என்றால் கற்றுக்கொள்ள கூடாதாமே, அதனால் மாறிவிட்டேன், கோத்திரமும் மாறிவிட்டது என்கிறான். நான் அதிர்ச்சியினை சமாளித்துக்கொண்டு, உங்க ரவிசங்கர் ருத்ரம், மந்திரம் எல்லாம் சொல்வரா என்றேன். “ஆம்” என்றான். அவர் பூணூல் அணிகிறாரா என்றேன். டேய் அவர் எல்லாம் செயிண்ட்டுடா அவர் எதுக்கும் அதையெல்லாம் போடணும்னு என்னை மடக்குகிறான்.

    எங்க போய் முட்டிகிறதுன்னு தெரியல.

     
    • ரவி 4:21 pm on September 4, 2009 Permalink | Reply

      //எங்க போய் முட்டிகிறதுன்னு தெரியல.//

      மோதி விளையாடு படம் ஓடும் திரையரங்க வாசலில் :)

  • சந்தோஷ் குரு 1:53 pm on September 4, 2009 Permalink | Reply
    Tags: குறும்பதிவு   

    அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், இயக்குநர் சேரனிடம் \ஒருவர் “நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு, கடின உழைப்புக்குபின் பொக்கிஷம் போல ஒரு படம் எடுக்குறீங்க. ஆனா எவனோ ஒருத்தன் ப்ளாக்குல பொக்கிஷம் வந்து இந்த கொரியன் படம் மாதிரியும் தாய்வான் படம் மாதிரியும் இருக்குன்னு எழுதுறானே” என்று ஆவேசமாகக்கேட்டதைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. இதைபோலவே கந்தசாமி கந்தல் ஆனதும் இதனால் தான் என்றும் பேச்சு நிலவுகிறது (எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை).

    பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்களையும், சம்பந்தப்பட்ட செய்திகளும், பில்டப்புகளும் பெரும்பாலும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களின் marketing எந்திரங்களுக்கு கட்டுக்குள் உள்ளது. வலைப்பதிவுகள் அந்த கட்டுக்குள் இல்லை என்பதாலையா. அப்படி என்றால் இனி வருங்காலங்களில் பணம் செலவழித்து இவர்களே வலைப்பதிவு, பின்னூட்டம் என்று பல்கிபெருகி market செய்ய முயல்வார்கள் என்று எண்ணுகிறேன்.

     
    • என். சொக்கன் 2:36 pm on September 4, 2009 Permalink | Reply

      சாத்தியமுள்ள கற்பனைதான்!

      ஒரு கோரிக்கை – இந்த உளறல் டாட் காம் URL எல்லாம் ரொம்ப நீளமா இருக்கு – ட்விட்டர்ல நேரடியா பேஸ்ட் செய்யமுடியலை, இதுக்கு ஏதாச்சும் செய்யக்கூடாதா?

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

      • ரவி 3:18 pm on September 4, 2009 Permalink | Reply

        சுட்டிக்காட்டியதற்கு நன்றிங்க. prakash சொன்னபடி tweetmeme button நீட்சி போட்டிருக்கேன்.

        wp.me shorturl ( http://en.blog.wordpress.com/2009/08/14/shorten/ ) வசதி விரைவில் தனித்தள வலைப்பதிவர்களுக்கு கிடைத்தால், உடனே உளறலில் செயல்படுத்தி விடுவோம்.

    • prakash 3:04 pm on September 4, 2009 Permalink | Reply

      //இனி வருங்காலங்களில் பணம் செலவழித்து இவர்களே வலைப்பதிவு, பின்னூட்டம் என்று பல்கிபெருகி market செய்ய முயல்வார்கள் என்று எண்ணுகிறேன்//

      அப்படிச் செய்தால், அது ஒரு கம்பெனியின் பி.ஆர். ரிலீஸ் போலத்தான். கால்காசுக்கு மதிப்பில்லை. என்ன செய்வார்கள் என்றால், influence உள்ள வலைப்பதிவாளர்களை விலைக்கு வாங்க முயல்வார்கள். இப்பவே, IT products, gadgets ஸ்பேசில், இவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. pay-per-post, pay-per-review என்கிற மாடல்களில்.

      insider information இன் படி, கந்தசாமியும், பொக்கிஷமும், வலைப்பதிவு விமர்சனங்களால், பெருத்த அளவு டேமேஜ் அடைந்தது உண்மைதான். ஆனால், watchable என்கிற அளவில் இருக்கும் படங்களை, வலைப்பதிவு விமர்சனங்கள் கவிழ்த்து விட முடியாது. உதாரணம், தசாவதாரம், அயன்.

      • ரவி 3:22 pm on September 4, 2009 Permalink | Reply

        //insider information இன் படி, கந்தசாமியும், பொக்கிஷமும், வலைப்பதிவு விமர்சனங்களால், பெருத்த அளவு டேமேஜ் அடைந்தது உண்மைதான்.//

        அட :) அந்த அளவுக்கு தமிழ் வலைப்பதிவுகளுக்கு செல்வாக்கு இருக்கா ! ஆர்க்குட், டுவிட்டர் பங்களிப்பும் இருக்கலாம். செல்பேசி, குறுந்தகவல் பெருக்கத்தால் முதல் காட்சி முடிந்தவுடனே அவரவர் நண்பர்களுக்குத் தெரிவித்து விடுவது முக்கிய காரணமா இருக்கலாம்.

        //watchable என்கிற அளவில் இருக்கும் படங்களை, வலைப்பதிவு விமர்சனங்கள் கவிழ்த்து விட முடியாது. உதாரணம், தசாவதாரம், அயன்.//

        + 1. உண்மை. எல்லா படத்தையும் ரொம்ப அறிவாளித்தனமா உலகத் திரைப்பட அளவுக்கு விமர்சிப்பது தப்பு. அயன், தசாவதாரம் படங்களுக்கு இரு வகையான விமர்சனங்கள் வந்தன. நானே தமன்னாவுக்காக ரெண்டு முறை பார்த்தேன் :)

        அப்புறம், எங்க அக்கா பையனுக்குப் பிடிக்காத ஒரே நடிகர் கமல். பிடிக்காத ஒரே படம் – தசாவதாரம். ரசினி அளவுக்கு கமல் இளைஞர்கள், குழந்தைகளைக் கவரவில்லையோ?

      • சந்தோஷ் குரு 3:33 pm on September 4, 2009 Permalink | Reply

        // insider information இன் படி, கந்தசாமியும், பொக்கிஷமும், வலைப்பதிவு விமர்சனங்களால், பெருத்த அளவு டேமேஜ் அடைந்தது உண்மைதான்//

        உண்மையிலே ஆச்சரியமாத்தான் இருக்கு. அவ்ளோ influence வலைப்பதிவுகளுக்கு இருக்கா என்ன. சில நூறு ப்ளாக் வாசகர்களா சில கோடி மக்களின் ரசனையினை influence செய்கிறார்கள்.

      • ரவி 4:28 pm on September 4, 2009 Permalink | Reply

        //அப்படிச் செய்தால், அது ஒரு கம்பெனியின் பி.ஆர். ரிலீஸ் போலத்தான். கால்காசுக்கு மதிப்பில்லை. என்ன செய்வார்கள் என்றால், influence உள்ள வலைப்பதிவாளர்களை விலைக்கு வாங்க முயல்வார்கள்.//

        இதுவும் ஒரு கட்டத்துக்கு மேல மக்கள் கண்டு கொள்வாங்க. இணையம் இப்ப ரொம்ப decentralised ஆகிட்டிருக்கு. ஓரளவுக்கு மேல ஒரு சில ஆட்கள் மட்டும் செல்வாக்கு செலுத்த இயலாது.

    • prakash 3:07 pm on September 4, 2009 Permalink | Reply

      //ட்விட்டர்ல நேரடியா பேஸ்ட் செய்யமுடியலை// சொக்கன், அப்படியே எடுத்து ஒட்டினா, டிவிட்டர், தானாவே, bit.ly shortening service மூலமா சுருக்கிக்குமே,

      @ரவி : twitthis plugin மாதிரி ஒண்ணு போட்டுவிட்டா வசதி.

      • என். சொக்கன் 5:46 pm on September 4, 2009 Permalink | Reply

        நான் ட்விட்டர் நேரடியாக அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்துகிறேன். ஆகவே, சுருக்கம் ‘Submit’ செய்தபிறகுதான் நடக்கும், அதற்குமுன்னால் உளறல் URLகள் 140 எழுத்து தாண்டிவிடுவதால் நாமே சுருக்கவேண்டியிருக்கிறது

    • ரவி 4:22 pm on September 4, 2009 Permalink | Reply

      உண்மையில் வலைப்பதிவில் எழுதுபவர்களாவது அவை நாகரிகத்துக்காக கொஞ்சம் பார்த்து எழுதுகிறார்கள். மொக்கையான படங்களுக்குத் திரையரங்கில் பார்வையாளர்கள் கொடுக்கும் விமர்சனங்களை மானமுள்ள இயக்குநர்கள் கேட்க முடியாது :) சில மொக்கைப் படங்களை சகித்துக் கொள்ள முடிவதே பார்வையாளர்கள் இப்படி மாற்றி மாற்றி ஓட்டிக் கொண்டு பார்ப்பதால் தான் :)

    • ரவி 4:26 pm on September 4, 2009 Permalink | Reply

      //இந்த கொரியன் படம் மாதிரியும் தாய்வான் படம் மாதிரியும் இருக்குன்னு எழுதுறானே//

      டிவிடி, தனியார் தொலைக்காட்சிகள் வரவுக்குப் பிறகு நிறைய உலகப் பட அறிமுகம் பரவி இருக்கு. நாள்கூலித் தொழிலாளிகள் கூட காட்சிக் கோணத்தை அலசி எது உண்மை, எது வரைகலைன்னு பேசுறதைக் கேட்டிருக்கேன்.

      //அவ்ளோ influence வலைப்பதிவுகளுக்கு இருக்கா என்ன.//

      செல்வாக்கு இருக்குன்னு சொல்ல முடியல. வலைப்பதிவுகள், ஆர்க்குட் குழும உரையாடல்களை சமூக மனநிலையின் எதிரொலிப்புன்னு வேணா சொல்லலாம். இணையம் வர வரைக்கும் அப்படி பதிவாகும் சுதந்திரமான ஊடகம் எதுவும் பெரிசா இருக்கல.

    • karthi 4:46 pm on September 4, 2009 Permalink | Reply

      வலைப்பதிவுகளுக்கு செல்வாக்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்த தாக்கம் நகர் புரங்களை கொஞ்சம் அதிகமாகவும் ..கிராம புரங்களை கொஞ்சமாகவும் தாக்கும். “யான் பெற்ற இன்பம் ” என்பதுபோல் மக்கள் செல்போன் மூலம் “பாக்கவே செய்யாதே சுத்த வேஸ்ட் ” என்று கமெண்ட் உடனே கொடுக்கிறார்கள் .. மேலும், படம் ரொம்ப நல்ல இருந்தால் மட்டுமே தியேட்டார்ரில் போயி படம் பார்க்கிறார்கள். இதற்கு விமர்சனம் உதவுகிறது.

      • ரவி 3:20 pm on September 7, 2009 Permalink | Reply

        நல்ல படம் இன்னும் நல்லா ஓடவும் மட்டமான படம் சீக்கிரமாவே ஊத்திக்கவும் எல்லா வகையான விமர்சனங்களும் உதவுதுன்னு வைச்சுக்கலாமா :)

        வெளிநாட்டு திரையரங்க வருவாயில் இணைய விமர்சனங்கள் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தலாம்னு நினைக்கிறேன். அங்க இணையம் பரவி இருக்கு. வழமையான தமிழ்நாட்டு ஊடகங்கள் ஏற்படுத்தும் பரபரப்பு குறைவு. 10 அல்லது 20 டாலர் கட்டி படம் பார்க்கும் முன் கண்டிப்பா ஒரு முறை விமர்சனம் படிக்கத் தோணும்.

      • கலை 5:56 pm on September 7, 2009 Permalink | Reply

        சிலபேர் ரொம்ப மொக்கையாவே படம் இருக்கும்னு நிச்சயமா தெரிஞ்சிருந்தாலுமே கூட, அதை சொல்லிட்டே, அப்புறமா திரையரங்கில போய் படம் பார்க்கிறாங்களே :)

        • ரவி 8:08 pm on September 7, 2009 Permalink | Reply

          என்ன பண்ணுறது சில பேர் வாழ்க்கை அந்தப் படத்தை விட மொக்கையா இருக்கலாம் :)

    • கார்த்திக் 6:42 pm on September 5, 2009 Permalink | Reply

      இதுல, ராம நாராயணன் ஒண்ணு கண்டுபிடுச்சுட்டாரு. நிறைய படங்கள, ஒரே நேரத்துல வெளிடுறதால தான் தோல்வியடையுதாம்.

      தரமான படமெடுத்தா எல்லா படமும் தான் ஓடும். இல்லையா?

      • ரவி 3:18 pm on September 7, 2009 Permalink | Reply

        அவர் சொல்லுறதுல ஒரு இது இருக்கு. என்ன மொக்கை படம் போட்டாலும் பார்க்க என்றே சில கூட்டம் இருக்கு. 2 வாரம் படம் ஓடினா கூட போட்ட காசை எடுத்துடலாம். எடுத்துக்காட்டுக்கு, பொழுது போக்குக்கு வேற வழி இல்லாத மக்கள் தொகை மிகுந்த திருப்பூரில் வார இறுதிகளில் எல்லா திரை அரங்குகளும் நிறையும். ஆனா, ஏகப்பட்ட படங்கள் வந்து குவியுறதால் இந்த வருவாயும் சிதறது. திரைப்படச் சந்தையும் supply and demand விதிகளுக்கு உட்பட்டது தானே.

  • சந்தோஷ் குரு 11:12 pm on September 3, 2009 Permalink | Reply
    Tags:   

    Quick Gun Murugun படம் பார்த்தேன். ஒரு சப்பை படத்தினை அச்சு ஊடகம் மூலம் எப்படி எல்லாம் பில்டப் கொடுத்து ஏற்றிவிடவேண்டும் என்பதற்கு காட்டு இத்திரைப்படம். தொலைக்காட்சியில் வரும் ஒரு மணி நேர லொள்ளு சபா நிகழ்ச்சியிலே ஒரு பத்து நிமிடம் சிறப்பாக சில சமயம் இருக்கும், ஆனால் இந்த ஒன்றரை மணி நேர திரைப்படத்தில் பத்து நிமிடம் தான் நிஜமாகவே சிரிப்பை வரவழைக்கின்றது.

    ரம்பாவை நீண்டநாள் கழித்து திரையில் பார்த்தது தான் ஆறுதல். சண்முகராஜா, நாசர் போன்றோரை வீணடித்துள்ளனர். லொள்ளு சபா குழுவினருக்கோ அல்லது விவேக், வடிவேலுவுக்கு காமெடி ட்ராக் எழுதுபவர்களுக்கோ இந்த மாதிரி கதையினை திரைக்கதையாக்க சொல்லியிருந்தால் அடிபின்னியிருப்பார்கள். இதே கதைக்கருவினை க்ரேஸி மோகனிடம் கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும். ம்ம்ம்ம். என்ன அவர்களுக்கு ஏற்ற விளம்பரத்தை கொடுக்க Forbes India இதழில் Non-formula home-grown cinema என்று அரைப்பக்கத்துக்கு எழுதவோ , Channel Vயிலோ, தெரிந்த ஆட்கள் இருக்கவேண்டுமே.

    இந்த படத்திற்கு The Good, the Bad and the Idly என்று ஒரு சீக்வல் வேற வருதாம். இந்த கலியுலகத்தை கடவுளான ”குமுதம் நித்யானந்த ஸ்வாமிகள்” தான் ரக்‌ஷிக்க வேண்டும்.

     
    • ரவி 9:32 am on September 4, 2009 Permalink | Reply

      //ஒரு சப்பை படத்தினை அச்சு ஊடகம் மூலம் எப்படி எல்லாம் பில்டப் கொடுத்து ஏற்றிவிடவேண்டும் என்பதற்கு காட்டு இத்திரைப்படம். //

      + 1

      //விவேக், வடிவேலுவுக்கு காமெடி ட்ராக் எழுதுபவர்களுக்கோ இந்த மாதிரி கதையினை திரைக்கதையாக்க சொல்லியிருந்தால் அடிபின்னியிருப்பார்கள்.//

      வடிவேலு QGMஆ நடிச்சிருந்தா கலக்கலா இருந்திருக்கும்.

      //ரம்பாவை நீண்டநாள் கழித்து திரையில் பார்த்தது தான் ஆறுதல்.//
      ;)

      http://www.ularal.com/quickgun-murugan/

  • சந்தோஷ் குரு 2:45 am on August 24, 2009 Permalink | Reply
    Tags: , ,   

    Sankat City என்ற இந்தி திரைப்படம் பார்த்தேன். கொஞ்சம் slapstick வகை நகைச்சுவை என்றாலும் நல்ல பொழுதுபோக்கு படம் இது. ஆனால் இந்த படம் வந்ததற்கான சுவடே காணவில்லையே.

     
    • prakash 6:14 am on August 24, 2009 Permalink | Reply

      inox இலே போடுவதாக இருந்தது. குறைந்த பட்சம் எண்ணிக்கை ஆடியன்ஸ் கூட இல்லாததால் ஷோ கான்சல் செய்யப்பட்டது.

  • சந்தோஷ் குரு 2:43 am on August 24, 2009 Permalink | Reply
    Tags: , விழா   

    பெங்களூரில் நடக்கும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்கள் எனக்கு எப்போதுமே அந்நியமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் கொழுக்கட்டை, விடுமுறை என்று வீட்டிலே கொண்டாடிவிட்டு இங்கே பந்தல், பண வசூல், தோட்டாதரணி செட் போன்ற தற்காலிக கோவில்கள் என்று இருப்பதை பார்த்தால் விந்தையாக உள்ளது. இது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை

     
    • ரவி 4:34 am on August 24, 2009 Permalink | Reply

      பிள்ளையார் பிறந்த நாள் உட்பட பல திருநாள்களைத் தமிழர்கள் கொண்டாடும் விதத்தில் ஏற்கனவே அண்டை மாநில, வட நாட்டுத் தாக்கம் நிறைய வரத் தொடங்கி விட்டது. முக்கிய காரணம் செயற்கைக்கோள் தொலைக்காட்சி. உண்மையில், இதன் வரவுக்குப் பிறகு எல்லா கொண்டாட்டங்களுமே “முழு நாள் தொலைக்காட்சி காணும் விடுமுறை” நாட்களாக மாறி வருகின்றன :(

  • சந்தோஷ் குரு 9:45 am on August 13, 2009 Permalink | Reply
    Tags:   

    BitTorrent வந்தாலும் வந்தது வீட்ல பாக்குற படம் எது இந்தியால ரிலீஸ் ஆச்சு ஆவலைன்னே தெரியலன்னு வூட்டுக்காரம்மா புகார் கொடுக்குறாங்க. Slumdog Millionaire, காஞ்சிவரம், The International, Before the Rains னு ஒரு பெரிய பட்டியலே நீளுது :)

     
    • ரவி 8:42 am on August 17, 2009 Permalink | Reply

      இந்திய அகலப்பட்டை இணைய வேகத்துக்கு bittorrent பயன்படுத்த பொறுமை இலைல. இப்பல்லாம் இறுவட்டு கிடைச்சா வாங்கிடுறேன்..

  • சந்தோஷ் குரு 3:46 am on August 11, 2009 Permalink | Reply
    Tags:   

    வாமனன் படம் பார்த்தேன். பொழுது போகவில்லையென்றால் பாட்டையெல்லாம் ஓட்டி விட்டு, ஒரு முறை பார்க்கலாம். இனிமேல் ரகுமான் அல்லது ஜெயராம் ஒரு படத்தில் நடித்தாலே, அவர்கள் தான் வில்லன் என்று முடிவு கட்டிவிடலாம் போல :)

     
    • ரவி 6:43 am on August 11, 2009 Permalink | Reply

      //ரகுமான் அல்லது ஜெயராம் ஒரு படத்தில் நடித்தாலே, அவர்கள் தான் வில்லன் என்று முடிவு கட்டிவிடலாம் போல//
      :)

      ரியாசு கான் வந்தால் கண்டிப்பாக சாகப் போகிறார் என்பது போலவா :)

      • சந்தோஷ் குரு 12:22 am on August 13, 2009 Permalink | Reply

        கஜினி படத்தில் தான் நம்ம கட்டத்துரை சாவார். வேறெந்த படம் ??

        • ரவி 2:47 am on August 13, 2009 Permalink | Reply

          ஆளவந்தான், அரசாங்கம், ரமணா… முன்னாடி சந்திரசேகர் தான் நிறைய படத்தில சாவார்.

    • ரவி 4:20 pm on September 27, 2009 Permalink | Reply

      உங்க விமர்சனத்தை நம்பி படம் பார்த்தேன். பரவாயில்லை. ஊர்வசி – சந்தானம் நகைச்சுவை ரொம்ப நாள் கழிச்சு விழுந்து விழுந்து சிரிக்க வைச்சது.

  • சந்தோஷ் குரு 3:43 am on August 11, 2009 Permalink | Reply
    Tags: , கர்நாடகா   

    கடந்த வாரம் வட கர்நாடகாவின் பல இடங்களுக்கு சென்றுவந்தேன். வனமும், மலையும், கடலும் நிறைந்த பகுதி அது. ஜோக் அருவியின் கம்பீரமான அழகு ஒரு பக்கம், ஹொரநாடு மற்றும் சிருங்கேரி காடுகள் தரும் பயம் கலந்த கிளர்ச்சி ஒரு பக்கம், ஆர்ப்பாட்டமில்லாத முருடெஸ்வர் கடல், எவ்வளவு முறைச்சென்றாலும் இளமை குறையாமல் ஈர்க்கும் பேலூர்-ஹளபீடு சிற்பங்கள் என்று மூன்று நாட்கள் அருமையாக கடந்தது.

     
    • ரவி 6:46 am on August 11, 2009 Permalink | Reply

      வெளிநாட்டுக்குப் போய் அடிச்சுப் பிடிச்சு இடங்கள் பார்த்தாலும், உள்நாட்டில் உருப்படியா சுற்றுலா போகத் தோண மாட்டேங்குது :( குறைந்தபட்சம் தென்னிந்தியாவையாவது ஒரு சுற்று வரணும்.

  • சந்தோஷ் குரு 11:12 am on July 29, 2009 Permalink | Reply
    Tags: சிந்தனை, idea   

    ஒரு யோசனை: விக்கி போன்ற ஒரு சிறிய தளம் அமைத்து அதில் தற்போது நமது பள்ளி கல்வி பாடங்களுக்கு (syllabus) இணையாக (மாற்றாகவும்) ஒரு alternate syllabusஐ கொண்டு வரவேண்டும். அந்த alternate syllabusன் குறிக்கோள், எளிமையாகவும், ஆர்வமூட்டும் வகையிலும், அதே சமயம் சாரம் குறையாமல் ஒரு பாடத்தை கற்பித்தல்.

    காட்டாக, எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தை எடுத்துக்கொள்வோம் . முத்தொள்ளாயிரமும், தில்லைக் கலம்பகமும், தமிழின் அழகையும் செறிவையும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு உணர்த்துமா அல்லது +1ல் ஃப்ரெஞ்சு எடுத்தால் 200க்கு 190மேல் கிடைக்கும் என்று ஓடவைக்குமா. மதிப்பெண் தான் முக்கியம் என்று ஓடும் மாணக்கரை விட்டுவிடுவோம். தமிழை ஆர்வத்தோடு பயில நினைக்கும் மாணவனுக்கும் கலம்பகமும், திருக்குறளுமே (இருபதும் மனப்பாடம் செய்யவேண்டும்)கூட, குமண வள்ளல் நாடகமும், கொஞ்சம் அதிகப்படி தானே. அதற்கு பதில், மாற்றாக, முக்கியமான ஆனால் கொஞ்சமாக செவ்விலக்கிய அறிமுகம், ஒன்றோ, இரண்டோ எளிய நவீன கவிதைகள் (முகுந்த் நாகராஜன் போன்றோர் எழுதுவது), மிகவும் சுலபமான சரளமான (ஆழம் இல்லாவிட்டால் கூட) கட்டுரைகள், எளிமைப் படுத்தப்பட்ட இலக்கணப் பாடங்கள்.

    இவ்வாரு ஒரு முழுமையான (அல்லது கிட்டதட்ட முழுமையான) ஒரு பாடத்திட்டம் கொண்டுவந்து, அதை பலதுறை அறிஞர்கள், எழுத்தாளர்கள் கொண்டு review செய்து , அதை நமது கல்வித்துறையினரிடம் கொண்டு சேர்த்து, பாடத்திட்டமிடல் செய்யும் போது மாற்றம் கொண்டுவர இயலுமா ??

     
    • ரவி 12:15 pm on July 29, 2009 Permalink | Reply

      மாற்றுப் பாடத்திட்டம் என்பது நல்ல யோசனை. விக்கி நூல்கள் தளத்தேயே இதற்குப் பயன்படுத்தலாம்.

      • புருனோ 8:21 pm on July 30, 2009 Permalink | Reply

      • புருனோ 1:42 am on July 31, 2009 Permalink | Reply

        ரவி, ஏன் அந்த மீடியா விக்கி மென்பொருளை உங்கள் அல்லது எனது சர்வரில் நிறுவி இந்த முயற்சியை ஆரம்பிக்கக்கூடாது.

        ஏன் தமிழக அரசிடம் இதற்காக அரசு வழங்கியில் இடம் கோரக்கூடாது

        • ரவி 6:27 am on July 31, 2009 Permalink | Reply

          //ரவி, ஏன் அந்த மீடியா விக்கி மென்பொருளை உங்கள் அல்லது எனது சர்வரில் நிறுவி இந்த முயற்சியை ஆரம்பிக்கக்கூடாது.//

          இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட சிலருக்கு விக்கிமீடியா நடைமுறைகள் மனத்தடையக உள்ளன என்றால், கூடுதல் பங்களிப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றால், செய்யலாம் :)

          //ஏன் தமிழக அரசிடம் இதற்காக அரசு வழங்கியில் இடம் கோரக்கூடாது//

          வழங்கி இட விலை எல்லாம் தற்போது மிக மலிந்து விட்டனவே.. அது ஒரு பிரச்சினையாகத் தோன்றவில்லை.

          • புருனோ 7:37 am on July 31, 2009 Permalink | Reply

            இல்லை ரவி,

            என் வழங்கியில் இருந்தால் உங்களுக்கும், உங்கள் வழங்கியில் இருந்தால் எனக்கும் மனத்தடை வரலாம்

            அடுத்தாக நானோ, நீங்களோ என்று வேண்டுமானாலும் அதை மூடி செல்லலாம்

            எனவே தான் அரசு வழங்கி என்று பரிந்துரைக்கிறேன்

            அரசு வழங்கியில் அனுமதி கிடைப்பது கடினம்
            ஆனால் அனுமதி வாங்கிவிட்டால் அதன் பிறகு நிரந்தரமே

            நான் பாடத்திட்டம் பற்றி மட்டும் சொல்லவில்லை.

            Project Tamil போன்ற தமிழ் சார் திட்டங்கள் அனைத்தும் அரசு வழங்கியின் / அரசு அங்கீகாரத்தின் கீழ் வருவது நலம் என்பது என் கருத்து

            • ரவி 7:45 am on July 31, 2009 Permalink

              தமிழக அரசு வழங்கியில் இருப்பது பிற நாட்டுத் தமிழர்களுக்கு மனத்தடையாக இருக்கலாம். இயன்ற அளவு ஒரு நாட்டரசு சாரா அமைப்புகளை உருவாக்கிக் கொள்வது நல்லது. மற்றபடி, அரசு இத்திட்டங்களுக்கு செய்யக்கூடிய உதவிகள் நிறைய உள்ளன.

      • சந்தோஷ் குரு 5:57 am on July 31, 2009 Permalink | Reply

        நன்றி ரவி. விக்கி நூல்கள் தளத்தை இதற்கு கூட உபயோகிக்கலாமா. http://pbworks.com/ கூட இலவச தளம்தான், அதுவும் வசதியானதே.

        • ரவி 6:28 am on July 31, 2009 Permalink | Reply

          ஆமா santhosh, “Wikibooks is a Wikimedia community for creating a free library of educational textbooks that anyone can edit”. wikiversity திட்டமும் உதவலாம்.

  • சந்தோஷ் குரு 9:57 pm on June 10, 2009 Permalink | Reply
    Tags: தொலைகாட்சி   

    காலையில் நாலு மணி நேரம் ராசிக்கல், நேமாலஜி, ஜோசியம் என்று விளம்பர நிகழ்ச்சிகளை போட்டு காசு சம்பாரித்துவிட்டு, இரவு நீயா நானா, நடந்தது என்ன போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பகுத்தறிவினை புகட்டும் விஜய் டீ.வியினை என்னவென்று சொல்ல!

     
    • கலை 1:09 am on June 11, 2009 Permalink | Reply

      விஜய் டீவி மட்டுமில்லை. பல டீவிக்களும் இதைத்தான் செய்வதுபோல் இருக்கு :)

    • ரவி 1:01 pm on June 18, 2009 Permalink | Reply

      discovery channel, animal planet வகையறா தவிர மற்ற எல்லா தொலைக்காட்சிகளும் ஏதோ வகையில் மூளையை மழுங்கடிக்கத் தான் செய்கின்றன.

  • சந்தோஷ் குரு 10:47 pm on March 10, 2009 Permalink | Reply
    Tags: சுயம்புலிங்கம்,   

    அண்மையில் படித்ததில் மிகவும் பாதித்த கவிதை :

    தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்

    நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்
    எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
    டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
    ஒரு அடி கொடுப்போம்
    வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்
    தீட்டுக்கறை படிந்த
    பூ அழிந்த சேலைகள்
    பழைய துணிச்சந்தையில்
    சகாயமாய் கிடைக்கிறது
    இச்சையை தணிக்க
    இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
    கால் நீட்டி தலைசாய்க்க
    தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
    திறந்தவெளிக் காற்று
    யாருக்கு கிடைக்கும்
    எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது
    எதுவும் கிடைக்காதபோது
    களிமண் உருண்டையை வாயில் போட்டு
    தண்ணீர் குடிக்கிறோம்
    ஜீரணமாகிவிடுகிறது
    எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
    நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.

    - மு. சுயம்புலிங்கம்

    நன்றி: சித்தார்த்

     
    • neotamizhan 1:13 am on March 11, 2009 Permalink | Reply

      நன்றி சந்தோஷ். இடுகைக்கும், உளரலை அறிமுகப்படுத்தியதற்கும்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel