Updates from rozavasanth RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • rozavasanth 11:29 pm on November 9, 2009 Permalink | Reply  

    இன்று ஒரு சந்திலிருந்து காரில் OMRக்குள் நுழையும் போது, முதல் வழிப்பாதையில் யாரோ அசந்தர்ப்பமாய் காரை ஏனோ நிறுத்தியிருந்தார்கள்.  மெதுவாக இன்னும் உள்ளே சாலையின் நடுவழியில் நுழைய நினைத்து,  ஜாக்கிரதையாக  காரின் மூக்கை மட்டும் சற்று திருப்பியிருந்தேன்; பின்னால் வரும் வாகனங்களை ரியர் கன்னாடியில் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் ஒரு இன்ச் கூட நடுவழிக்குள் நுழையவில்லை. எல்லோரும் இதை கவனித்து போக்கை அட்ஜஸ்ட் செய்துகொள்ள, வேகமாய் டூவீலரில் வந்த ஒரு அப்பாவி மட்டும், நேராக வந்து திகிலில் முன் ப்ரேக்கையும் சேர்த்து பிடித்து(என்று நினைக்கிறேன்) skidஆகி விழுந்தார்.  விழுந்ததற்கு என் செய்கை நிச்சயம் ஒரு  காரணம்; சாலையில் வேறு ஒருவரும் கூட காரணம். ஆனால் விழுந்ததற்கான தவறு என்னுடையதல்ல என்றே நினைக்கிறேன். 

     

    சில விநாடிகளில் பல டூவீலர்கள் ஒரு ஆட்டோ நிறுத்தப்ப்பட்டு என்னை அந்த சம்பவதற்கு முழு காரணமாக்கிவிட்டார்கள். என் காரில் ஒட்டியிருந்த Lபோர்டு வேறு வசதியாக போனது. ஒருவன் என் லைசென்ஸை காண்பிக்க கேட்டான். தனக்கு நன்றாக கார் ஒட்டத்தெரியும் என்று சொல்லிவிட்டு நான் செய்ததுதான் தப்பு என்றான்.  ”நான் இன்னும் ஒண்ணுமே செய்யவில்லையே” என்றேன். பின்னார் வந்த ஒருவன் நான் அந்த ஆளை  தட்டிவிட்டதாக நினைத்து கத்தும் போது முன்னால் கத்தியவன் போய்விட்டிருந்தான். 

     

    சிலர் (சம்பவத்திற்கு காரணமான காரும்) கிளம்பி போன பிறகுசில நிமிடங்களில் அங்கே இருந்தவர்களுக்கு நடந்ததே தெரியவில்லை. நானும் கத்தி கொண்டிருக்க ஒருவன் என் காரின் கதவை திறந்து ஓங்கி அடித்தான். அவனை அடிக்கும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டேன். நேரே அடிபட்ட ஆளிடம் (நகத்தில் மட்டும் ரத்தம்) போய்  நான் சிகிச்சைக்காக அழைத்து செல்கிறேன். எதுவும் செய்ய தயராக இருக்கிறேன். என்னை நம்பி காரில் ஏறும்படி கேட்டேன். அப்போதுதான் அந்த ஆள் தவறு என் மேல் இல்லை என்றார்.  ̀யாரோ செய்த தப்பு இப்படியாகி விட்டது’ என்று அவர் சொன்னது எனக்கு இன்னமும் புரியவில்லை.  (நான் முன்பே திட்டம் போட்டு இவ்வாறு செய்ததாக அவர் சொல்வாரோ என்கிற அளவுக்கு பயந்திருந்த நான்), அந்த ஆள் எனக்கு சாதகமாக பேச தொடங்கியவுடன், மற்றவர்களை தைரியமாக திட்ட தொடங்கினேன். “நாங்க பப்ளிக் எங்களுக்கு கேக்க உரிமை இருக்கு என்றான் ஒருவன். “அடிப்பட்ட ஆளே ஒண்ணும் சொல்லலை, உங்களுக்கு என்னய்யா மயிறு!  என்ன நடந்ததுன்னாவது தெரியுமா?” என்று நான் கத்த, ஒருமையிலிருந்து முதன் முறையாக என்னை  ̀ஸார்’ போட்டு பேசத்தொடங்கினான். பப்ளிக் எவ்வளவு பெரிய மொள்ளமாறி என்று நான் அவர்களை பார்த்தே கத்த துவங்கினேன். (அது சரி என்று இப்போது தோன்றவில்லை). இவ்வாறாக எனக்கு சாதகமகி விட்ட நிலமையில், சிகிச்சைக்கான என் அழைப்பை அடிபட்ட ஆள் ஏற்காமல் 200ரூபாய் மட்டும் வாங்கி கொள்ள, எனக்குள் இருந்த மன அலைக்கழிப்பை இங்கே எழுதுவதன் மூலம் கரைத்துக்  கொள்கிறேன்.  

     
    • ரோசா இந்த சீண்டல் தேவையா 1:45 am on November 11, 2009 Permalink | Reply

      ****
      (நான் முன்பே திட்டம் போட்டு இவ்வாறு செய்ததாக அவர் சொல்வாரோ என்கிற அளவுக்கு பயந்திருந்த நான்)
      ****

      நல்லவேளை அவரது மூக்கு தப்பித்தது.

    • rozavasanth 6:46 pm on November 12, 2009 Permalink | Reply

      /நல்லவேளை அவரது மூக்கு தப்பித்தது./ ஆமாம், அதை விட அப்படி ஒரு சூழலில் தைரியமாக உண்மை பேசிய ஒருவரை முத்தமிடாமல் வந்து விட்டேனே என்று இப்போது வருந்துகிறேன்.

  • rozavasanth 12:52 pm on December 5, 2008 Permalink | Reply  

    பாதிப்பு இன்னும் விலகாததால் இங்கு. டீவியில் என்னவோ ஒரு 3654ந்தர கன்னடப்படத்தில் ஒரு காட்சி. ̀நின் ஹசிரு ஏனு’ என்று கேட்க அந்த ஆசாமி முழிக்கிறான். ̀உன் பேரு என்ன?’ என்று கேட்க  ̀பழனிச்சாமி’ என்கிறான். தொடர்ந்து கன்னடத்தில் நீண்ட வசனம்.  ̀இங்கே இருக்கர வடக்கத்தியான் எல்லாம் கன்னடத்திலே பேசறான். இங்கேயே பிறந்து வளர்ந்த உனக்கு ஒரு அட்சரம் கன்னடம் தெரியாதா?’  

     

    காய்கறிகாரனிடமிருந்து கண்டக்டர் வரை ஹிந்தி மட்டுமே பேசும் வட நாட்டுக்காரர்கள் எல்லாம் கன்னடம் கற்றுக்கொள்ள தமிழன் மட்டும் இன்னமும் ஒரு எழுத்து கூட கன்னடம் பயிலாமல் கர்நாடகத்தில் வசிபதாக இந்த நாதேரிகளுக்கு யார் ஞானம் அளித்தது?

     
  • rozavasanth 11:36 am on November 18, 2008 Permalink | Reply  

    (முடிந்தால் ரோஹு அல்லது வவ்வால் போன்ற உதிராத) 1 கிலோ மீனை கழுவி, பின் வினிகரில் கழுவி, மஞ்சள் + மிளகாய் பொடி உப்பு போட்டு 1/2மணி வைத்து, பின் லேசாக எண்ணெயில் வறுத்தெடுக்கவும்; 1+1/2கப் தயிரில் பொடியாய் நறுக்கிய 2வெங்காய்ம், மஞ்சள் பொடி, பூண்டு+இஞ்சி கலவையில் வறுத்த மீனை போட்டு 1/4மணி வைக்கவும்; எண்ணெயில் நீளமாய் நறுக்கிய வெக்காயம், லவங்க பட்டை, பிரிஞ்சி இலை, கிரம்பு, ஏலக்காய்(எல்லாம் 1 அல்லது 2), கீறிய 2 மிளகாய், பழுப்பாக வறுத்த பின், மீன் கலவையை போட்டு மெல்லிய தீயில் 15-20 நிமிடங்கள் வைத்தால் சுவையான தஹி மாசி தயார். கூட பியர், விஸ்கி அல்லது வெறும் சப்பாத்தி அது உங்க விருப்பம்.

     
    • அல்வாசிட்டி விஜய் 11:43 am on November 18, 2008 Permalink | Reply

      //பியர், விஸ்கி அல்லது வெறும் சப்பாத்தி// கூப்பிட்ட நாங்களும் வந்திருப்போமில்ல

    • rozavasanth 11:10 am on November 20, 2008 Permalink | Reply

      எப்போ ரெடின்னு சொல்லுங்க, திரும்ப செய்துவிட்டு கூப்பிடறேன்.

  • rozavasanth 3:16 am on November 15, 2008 Permalink | Reply  

    ரவி ஶ்ரீனிவாஸ்  `அ.மார்க்ஸின் பொய்கள்’  என்று ஒரு நீண்ட விளக்கப்பதிவு; அதற்கு   ̀ஆஹா! என்ன அழகாய் எக்ஸ்போஸ் செய்திருக்கிறீர்கள்’ என்று பின்னூட்டங்கள். இனி எதையும் படித்து வாசககர்கள் உண்மையை தெளிய வேண்டும் என்கிறார் ரவி; சரி நாமும் தெளிவோம்.  http://ravisrinivas.blogspot.com/2008/11/blog-post_12.html

    அ.மார்க்ஸின் எழுத்து, அரசியல் நேர்மை கொண்ட அளவிற்கு அறிவு நேர்மை கொண்டதில்லை என்றுதான் இப்போதெல்லாம் நானும் கூட நினைக்கிறேன். ஆகையால் அவர் எழுத்தை விமர்சிப்பதும், பிரச்சனைகளை எடுத்துப்போடுவதும் எனக்கும் ஒப்புதலே. ஆனால்   ̀அ. மார்க்ஸ் பொய் சொல்கிறார், அருந்ததி பொய் சொல்கிறார், இன்னும் எல்லோரும் பொய் சொல்கிறார்கள்’ என்று நீண்ண்..ட பதிவில் சுட்டி காட்டும் பொய்கள் என்ன?   ̀நிலம் உண்மையில் குத்தகைக்கு தரப்படுகிறது, தற்காலிக குடியிருப்புகளையே அதில் எழுப்ப முடியும், நிரந்தர கட்டிடங்கள் எழுப்ப அனுமதி இல்லை, ” என்கிற ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்ததாம்(நான் அ.மா. கட்டுரையை படிக்கவில்லை, ரவி சொல்வதை வைத்து). இந்த வகை நேர்மையின்மை எல்லாருடைய எழுத்திலும் பார்க்கலாம், ரவியுடமும் உண்டு; ஜேமோ எழுத்து முழுக்க முழுக்க இதுதான்; நீலகண்டன் போன்றவர்களின் ஒவ்வொரு வரியிலும் பார்க்கலாம். இந்த ஒத்தை பாயிண்டை வைத்து 200 வரிகளுக்கு மேல் ஒரு பதிவு. 200 வரிகளில் ஜல்லியடித்ததற்கு 5 ட்விட்களில் 5 பொய்களை அடுக்கியிருக்கலாம். எழுத நேரமே இல்லாத இந்த வெத்து அறிவு ஜீவி, வெத்து  வார்த்தைகளை 200 வரிகளில் செலவிட்டதை உருப்படியாக 4 வரிகளில் எழுதியிருக்கலாம். விஷயம் இருந்தால்தானே செய்வது. மேலும் அப்படி அறிவு பூர்வமாய் எழுதிவிட்டால் எப்படி ரவி ஶ்ரீனிவாசாக இருக்க முடியும்!

     
  • rozavasanth 1:05 pm on October 25, 2008 Permalink | Reply  

    ட்விட்டரில் எழுதுவது பழகிவிட்ட ஒன்றாகவும், 140 என்பது சவாலாகவும் உள்ளது. சோதனைக்காக எனது கடைசி தொடர் ட்விட்களை இங்கே ஒன்றாக தருகிறேன்.

    சுகுணா திவாகர் கவுண்டமணி பற்றி எழுதிய பதிவை வாய்ப்பாக்கி சில கருத்துக்களை ட்விட்டரில் சொல்லியிருந்தாலும், துவங்கும் போது சுகுணாவுடன் ̀முழுவதும் உடன்படவில்லை’ என்று டிஸ்கி குடுப்பது அகந்தையோவென நினைத்து செய்யவில்லை. பிறகு பலர் என் கருத்தை சுகுணாவின் பார்வையோடு கலந்து கட்டி, கம்பு சுத்தி, நெற்றி என நினைத்து கண்ட இடத்திலும் பொட்டு வைத்த போதும் அலட்டவில்லை. ஆனால் இப்போது சுகுணாவின் 3வது பதிவை படித்து எனக்கே தாங்கவில்லை; கவுண்டரை பற்றி மேலும் எழுதுவது (எனக்கே) காமெடியாகிவிடுமோ என்று அஞ்சுகிறேன். கவுண்டரை பற்றி மீண்டும் எழுதும் முன் சுகுணாவின் மிகை வாசிப்புகளை அவிழ்ப்பதும், பின்னர் கோடு போட்டு ரோடு போடுவதும் சவாலாக இருக்கும்.

     
  • rozavasanth 10:34 am on October 25, 2008 Permalink | Reply  

    ப்ரூனோ, உங்கள் அழைப்புக்கும் அன்பிற்கு நன்றி. இது சோதனை; தொடரப்போகும் சோதனை மேல் சோதனைகளுக்கு நான் பொறுப்பல்ல.

     
    • புருனோ 7:01 pm on October 25, 2008 Permalink | Reply

      நன்றி சார்,

      நான் எழுதும் தத்துவங்களை விட பெரிய சோதனை எதுவும் இருக்காது :)

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel