National Geographic இதழ் படிக்க முயன்றேன். ஒரு பக்கத்தைப் படிக்க விக்கிப்பீடியாவைப் பார்த்து, அதில் உள்ள இணைப்புகளைப் பார்த்து என்று ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிறது. இது எல்லாம் ஒரு புத்தகமா? விகடனை எல்லாம் மொத்தப் புத்தகத்தையுமே அரை மணி நேரத்தில் புரட்டி விடலாம்.
Updates from ரவி RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
The Great Debaters பார்த்தேன். என்னா படம்டா சாமி. Denzel Washington மாதிரியான நடிகர்கள் திறமையான இயக்குநர்களாக இருப்பதும் நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுப்பதும் அருமை. மேற்கத்தைய ஆட்கள் எந்த அளவு காட்டான்களாக இருந்தார்கள் என்று அறிய முடிகிறது. படத்தின் கதையைப் படித்த பிறகும், தலை கீழாக ஓட்டிப் பார்த்த பிறகும் கூட விறுவிறுப்பாகப் பார்க்க முடிகிறது. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
-
ரவி
தோனி பார்த்தேன். நல்ல கருத்து. சுமாரான படம். இந்தப் படம், தாரே சமீன் பர் இரண்டிலுமே வழக்கமான பள்ளிக்கல்வியில் சுமாராக இருக்கும் எல்லா குழந்தைகளுக்குமே ஆடல், பாடல், ஓவியம், விளையாட்டு போல் ஏதோ ஒரு திறமை இருக்கும் என்கிறார்கள். அந்தத் திறமையை ஊக்குவி என்பதோடு படத்தை முடித்து விடுகிறார்கள். ஆனால், பாதி பேருக்குத் தனக்கு எது ஒத்து வரும் எனப் புரியவே கல்லூரிப் படிப்பு முடிந்து சில ஆண்டுகள் போய் விடுகிறது. எனவே, உண்மையான கல்வியின் நோக்கம் இன்னும் ஆழமானதாக இருக்க வேண்டும்.
-
ரவி
Ra One பார்த்தேன். என்ன கொடுமை சரவணன் இது?
-
ரவி
Unstoppable பார்த்தோம். விறுவிறுப்பான படம். உண்மை நிகழ்வை நல்ல மசாலா தூவி எடுத்துள்ளார்கள்.
-
ரவி
The Dirty Picture பார்த்தோம். சிலுக்கு மாதிரி கவர்ச்சி காட்ட நமீதா போன்ற நடிகைகள் போதும். ஆனால், சிலுக்கு என்ற நடிகையின் வாழ்க்கை, மன நிலையைக் காட்ட தேர்ந்த நடிகை தேவை. வித்யா பாலன் துணிச்சலாக நடித்துப் பட்டையைக் கிளப்புகிறார். நல்ல திரைக்கதை. அருமையான உரையாடல்கள். தமிழ்நாட்டில் நடப்பதாக உள்ள கதையில் வட நாட்டு முகங்களைக் காணத் தான் இடிக்கிறது.
-
ரவி
ரிச்சுர்டு இசிட்டால்மேன். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் பேர் கூடி இருப்பார்கள். இவ்வளவு கூட்டம் வரும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நிறைய கல்லூரி இளைஞர்கள். ஆசிரியர்கள் அழைத்து வந்திருக்கக்கூடும். மூன்று மணிக்குத் தொடங்க வேண்டிய கூட்டும் நான்கு மணிக்குத் தொடங்கி ஆறு மணிக்கு மேல் நீண்டது. அவரது பேச்சில் கவர்ந்த விசயங்கள்:
- வெட்ட வெளி அரங்கில் மிகத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு பட்டாம்பூச்சி அவரைக் கடந்து போனது. அதைக் கண்டு குழந்தை போல் மகிழ்ந்து பேசினார். இதற்கும் அவரது அறிவார்ந்த கேள்வி நோக்குக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா? (inquisitive geek என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது?)
- ஒரு மாணவர் இது மகாத்மை காந்தி பிறந்த மண் என்று பேசத் தொடங்கினார். இடைமறித்த இசிட்டால்மேன், “நான் இதை டாக்டர் அம்பேத்கார் பிறந்த மண் எனச் சொல்வேன்” என்றார் !
- கேள்வி: “பணியாற்றும் பெருநிறுவனங்கள் கட்டற்ற மென்பொருள்களை வாடிக்கையாளருக்குத் தருவதில்லை. பெரும்பான்மையோர் இத்தகைய நிறுவனங்களிலேயே வேலை செய்கிறார்கள். என்ன செய்யலாம்?”. பதில்: “வேலையை மாற்றிக் கொள்ளுங்கள்”
-
ரவி
இராபின் குக் எழுதிய Death Benefit படித்தேன். இரண்டு ஆய்வாளர்கள் குருத்தணு ஆய்வு மூலம் மனித உறுப்புகளை ஆய்வகத்தில் தயாரித்து வழங்கும் நுட்பத்தில் தேர்கிறார்கள். இதே வேளை, இரண்டு தொழிலதிபர்கள் வயதானவர்களின் ஆயுள் காப்பீடுகளை மலிவு விலையில் வாங்கி இலாபம் அடைய முனைகிறார்கள். குருத்தணு ஆராய்ச்சி வயதானவர்களை விரைவாக இறக்க விடாமல் (!) இதற்கு இடராக இருக்கும் என்பதால் ஆய்வாளர்களைத் தந்திரமாகக் கொல்கிறார்கள். அதே ஆய்வகத்தில் படிக்கும் ஒரு பெண் இதனைக் கண்டுபிடிக்கிறாள்.. வார்ப்புருக் கதை. 400 பக்கங்களை நான்கு மணி நேரத்தில் படித்து முடித்தேன்.
-
ரவி
Moneyball பார்த்தோம். Baseball ஒரு Money ball என்பது தான் படத்தின் கதை. ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற 250 ஓட்டங்கள் தேவை என்றால், நூறும் இரு நூறும் அடிக்கக்கூடிய நட்சத்திர ஆட்டக்காரர்கள் தேவை இல்லை; 25 ஓட்டங்கள் அடிக்கக்கூடிய 10 ஆட்டக்காரர்கள் போதும் என்கிற அடிப்படையில் ஒரு புதிய அணியை உருவாக்குகிறார்கள். இந்த அணி 20 தொடர் வெற்றிகளைப் பெற்று அமெரிக்க அளவில் சாதனை செய்கிறது. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் பல வகையிலும் நம்மை மாறுபட்டுச் சிந்திக்கத் தூண்டுகிறது.
Matt Damon, Brad Pitt முதலிய ஆட்கள் சண்டைப் படங்களில் நடித்தாலும் இது போன்ற கதை சார்ந்த படங்களிலும் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்துவது அருமை.
-
Indrakumar
I had the Money Ball yet to see it.. I like your view on Money ball thanks for a nice outline about the movie..
-
ரவி
நன்றி இந்திரக்குமார்.
-
-
-
ரவி
Contagion பார்த்தோம். உண்மையில் ஒரு கொள்ளை நோய் எப்படி பரவுகிறது, அதனை மக்கள்-அரசு-ஊடகங்கள்-நல நிறுவனங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்று மிக இயல்பாகவும் பரபரப்பாகவும் காட்டும் படம். ஏதோ ஒரு கற்பனை எதிரி, சதி வேலையால் இம்மாதிரி ஆவதை விட இயல்பாகவே இது மாதிரி ஆனால் நம் கதி என்ன என்று சிந்தித்தாலே பொறி கலங்குகிறது
கட்டாயம் காண வேண்டிய படம். பார்த்து முடித்தவுடன் உங்களை கைகளை அடிக்கடி கழுவிச் சுத்தமாக இருக்க முனைவீர்கள்
யான் பார்க்கவில்லை. ஆனால் கேள்விப்பட்டேன். ஆமா… நூடுல்ஸ்ல தயிர் ஊத்தி சாப்பிட்டங்களாமே?! உண்மையா?