http://www.nytimes.com/2008/07/24/movies/24supe.html (தலைப்பில் எப்படியோ உம்மைத் தொகையைக் கொண்டுவந்த சாமர்த்தியத்தைப் பார்த்தீர்களா?)
Updates from சாத்தான் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
சாத்தான்
-
சாத்தான்
லேட்டஸ்ட் ஆனந்த விகடனில் வந்திருக்கும் ஒரு துணுக்கிலிருந்து (பக்கம் 12): “அங்கிள் சாம் என்றால் [அப்துல்] கலாம் பாஷையில் ‘அமெரிக்கா’ என்று அர்த்தம்.” நம் தமிழ் இதழியலாளர்களின் பொது அறிவு பிரமிக்கவைக்கிறது. (இட்டாலிக்ஸ் என்னுடையது. அதை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.)
-
சாத்தான்
ஆனந்த விகடன் சைஸையும் வடிவமைப்பையும் மாற்றினாலும் இப்போதும் ‘ஷ’வுக்கு மட்டும் வேறு எழுத்துருவைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வளவு பெரிய நிறுவனத்தால் தான் விரும்பியபடி ஒரு எழுத்துருவைக் கூட உருவாக்கத் தெரியாதா?
-
சாத்தான்
யாஹூவையும் ஜிமெயிலையும் விட்டுப் புதிதாக வேறு மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்திப் பார்ப்போமே என்று aol.in மின்னஞ்சல் ஐ.டி. ஒன்று உருவாக்கினேன். அது பாதி நேரம் லோக்கல் கூரியர் மாதிரி அடுத்த நாள்தான் வருகிறது. பாதி நேரம் இந்திய அஞ்சல் சேவை மாதிரி காணாமல் போகிறது.
-
சாத்தான்
பெங்களூரில் தொடர் குண்டுவெடிப்பு. 3 பேர் மரணம், பலர் காயம். முதல் குண்டுவெடிப்பு மதியம் சுமார் 1.30 மணிக்கு.
-
சாத்தான்
சீன நாட்டில் நம் நாட்டை விட அதிகம் பேர் இருக்கிறார்கள். இங்கிருக்கும் மக்கள்தொகைப் பிரச்சினை அங்கும் தாண்டவமாடுகிறது. அப்படியும் இந்த ரேஞ்சுக்கு அவர்களால் எப்படித் தொழிற்பட முடிகிறது?
-
சாத்தான்
இந்த வலையகம் அருமையான ஐடியா. நான்கு வரிகளுக்கு மேல் எழுத நேரமும் பொறுமையும் இல்லாமல் நாள்பட்ட ரைட்டர்ஸ் பிளாக்கில் சிக்கிக்கொண்ட என்னைப் போன்ற அக்கேசனல் வலைப்பதிவர்களுக்கு இது நல்ல இடம். வெப்மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்!
-
ரவி
நன்றி சாத்தான்.
-
சாத்தான்
படத்தை மாற்ற வழியுண்டா?
-
ரவி
http://en.gravatar.com போய் இங்கு நீங்கள் எந்த மின்மடல் கொடுத்து பதிந்தீர்களோ அதே மின்மடல் கொடுத்து உங்கள் படத்தைப் பதிவேற்றுங்கள்.
-
சாத்தான்
நன்றி!
-
mayooresan 3:24 am on July 25, 2008 Permalink |
ஜிமெயிலை விட நல்லதா எதுவும் இருப்பதா எனக்கு தெரியல
ரவி 3:28 am on July 25, 2008 Permalink |
இந்திய அஞ்சல் சேவைல இன்னும் மடல்கள் காணாமப் போகுதா? தனியார் அஞ்சல்லயும் நிறைய காணாமப் போன அனுபவம், கேள்வி !
சாத்தான் 6:18 am on July 25, 2008 Permalink |
இந்திய அஞ்சல் சேவை இப்போது அவ்வளவு மோசமாக இல்லை என்று நினைக்கிறேன். நான் யாருக்கும் நத்தைக் கடுதாசியெல்லாம் போடுவதில்லை. கூரியர் மிஸ் ஆனதில்லை. மின்னஞ்சலைப் பொருத்தவரை ஜிமெயில் மாதிரி வராது.
ரவி 6:21 am on July 25, 2008 Permalink |
நான் +2 முடித்து BITS Pilaniயில் சேர Professional courier மூலம் விண்ணப்பத்துக்கான வரைவோல அனுப்பினேன். அதை அவர்கள் சேர்க்கவும் இழுக்காமல் பொறுப்பான பதிலும் தராமல் இழுத்தடித்தார்கள். அப்புறம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு 8 ஆண்டு கழிச்சு பத்தாயிரமோ எவ்வளவோ கொடுத்தாங்க !!
சாத்தான் 6:38 am on July 25, 2008 Permalink |
சுவையான தகவல்! நுகர்வோர் நீதிமன்றத்துல அவ்வளவுதான் தேறும் போல!