Updates from நாகு RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • நாகு 9:08 pm on February 18, 2009 Permalink | Reply  

    உலகத்திலேயே சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட மக்கள் பாகிஸ்தானிகள்தான்…

    http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=879

     
  • நாகு 8:22 pm on January 11, 2009 Permalink | Reply
    Tags: , ரசிகாஸ், ராகா   

    ஒவ்வொரு முறை ராகா, ரசிகாஸ் போன்ற ஈறு கெட்ட வார்த்தைகளை கேட்கும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தமிழ் வார்த்தைகளை உபயோகிப்பதற்கு வெட்கமா/தயக்கமா, இல்லை வார்த்தை முடிவை விட்டு விட்டால் அவை ஆங்கிலம் ஆகிவிடும் என்ற கனவா?

    ராகா, ரசிகா – எனக்குத் தெரிந்து எந்த மொழியிலும் இல்லை(ராகா மட்டும் கன்னடத்தில் உண்டு. ஆனால் நம்மவர்களுக்கு கன்னடர்களின் மீது அவ்வளவு கரிசனமா?)

    ராகம் என்று சொல்லுங்கய்யா. ரசிகாஸ் என்று கொலை செய்வதற்கு பதில் அதே அர்த்தத்திற்கு ஆங்கிலத்தில் எண்ணற்ற வார்த்தைகள் இருக்கின்றன.

     
    • ரவி 2:10 am on January 12, 2009 Permalink | Reply

      குட்டீஸ், சுட்டீஸ் என்று எழுதி சிறுவர்மலர் போன்ற அச்சூடகங்கள் தொடங்கி வைத்த போக்கு !

      அப்புறம் ராகா, ராகம், ரசிகர் எதுவமே தமிழ் இல்லை ! பண் என்பது ராகத்துக்கு இணையான தமிழ்ச் சொல் என்று நினைக்கிறேன்.

  • நாகு 8:33 pm on January 8, 2009 Permalink | Reply
    Tags: , படங்கள்,   

    தமிழ் செய்தித்தாள் இணையத்தளங்களாகட்டும்,  தமிழ் செய்தி தளங்களாகட்டும் – பெண்கள்/நடிகைகள் பட கேலரி இல்லாத தளம் ஏதாவது இருக்கிறதா? சில தளங்களில் அந்த மாதிரி பக்கங்களில் விளம்பரங்கள் கூட இல்லை. தமிழர்கள் அவ்வளவு ஜொல்லு பார்ட்டிகளா?

     
    • ரவி 10:39 am on January 9, 2009 Permalink | Reply

      //தமிழர்கள் அவ்வளவு ஜொல்லு பார்ட்டிகளா?//

      சந்தேகமா :) இந்த ஆண்டு கூகுளில் ஐசுவர்யா ராயை விட நமிதாவைத் தான் கூடுதலா தேடி இருக்காங்க.ஆனா, எனக்கு என்ன கடுப்புன்னா, இந்த மாதிரி படம் போடுற இதழ்கள், பட விமர்சனம் வரும்போது மட்டும் உத்தமர்கள் மாதிரி தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள்.

    • புருனோ 2:03 pm on January 9, 2009 Permalink | Reply

      உண்மை

      பாய்ஸ் படத்தை பற்றி ஒரு வரியில் விமர்சித்த அந்த விகடன் இதழின் பிற பக்க படங்கள் “தூ” என்று தான் கூறும்படி இருந்தது

    • ரவி 11:59 am on January 10, 2009 Permalink | Reply

      பல கருத்துகணிப்புகளில் சென்னை தான் காமப் படங்கள் பார்க்கும் இந்திய நகரங்களில் முன்னணியில் இருப்பதாக வேறு சொல்கிறார்கள். செய்தித் தளங்களில் படங்கள் இருப்பதற்கு வாசகர்களை மட்டும் குறை சொல்ல இயலாது. ஒரு பிபிசி போல தரமான செய்திச் சேவையை மட்டும் நம்பி இயங்கும் நிறுவனங்களையும் நாம் உருவாக்க முனையவில்லை.

  • நாகு 8:04 pm on December 3, 2008 Permalink | Reply  

    கேரள முதல்வர் அப்படி என்ன தப்பாக சொல்லிவிட்டார் என்று அனைவரும் குதிக்கிறார்கள்? ஒரு சாதாரண மக்கள் வீட்டு சாவுக்கோ ஒரு நாட்டுக்காக உயிர் கொடுத்ததற்காகவோதான் (அரசியல்வாதி) நாய்கள் சாதாரணர் வீட்டை மிதிக்கும். இல்லாவிட்டால் ஏன் (அரசியல்வாதி) நாய்கள் உங்கள் வீட்டுக்கு எல்லாம் வரும் என்று சரியாகத்தானே சொல்லியிருக்கிறார். உண்மையை சொன்னாலே நம் நாட்டில் இந்த கதிதான்.

     
  • நாகு 6:12 am on November 11, 2008 Permalink | Reply
    Tags: ,   

    எப்படி ஒரு ப்ரைம்டைம் நிகழ்ச்சிகளில் இந்த மாதிரி ஒரு கொச்சையான பச்சையான கூவலுடன் ஆரம்பிக்கிறார்கள்? மதுரைமுத்து போன்ற காமெடியன்களால் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தாலும், தமிழக நகைச்சுசை உணர்வு குறித்து கவலையாக இருக்கிறது…

     
    • bsubra 7:33 am on November 11, 2008 Permalink | Reply

      கலக்க/அசத்தப் போவது யாரு? – இந்த நிகழ்ச்சி சீரியல் விரும்பிப் பார்ப்போர் பலரை கவர்ந்திருக்கிறது :(

      சூப்பர் 10 போன்றவையும் ஆங்காங்கே எப்பொழுதாவது சிரிப்பை வரவைத்தாலும், பிற இடங்களில் திராபை உவ்வேக்.

  • நாகு 6:06 am on November 11, 2008 Permalink | Reply
    Tags: , எந்திரமயமாக்கல், கோவில்   

    ரவி – அந்த கோவில்மணி மத்தளம் மாதிரி விஷயங்களை எப்படி மக்கள் சகித்துக்கொள்கிறார்கள்? பத்து நிமிஷங்களுக்கு மேல் தாங்கமுடியவில்லை. எப்படி ஒவ்வொரு முறை போகும்போதும் அனைத்துக் கோவில்களிலும் ஒரே சத்தத்தை தாங்க முடிகிறது? இன்னும் கொஞ்சம் நாள் போனால், மெக்டோனால்ட் மாதிரி franchise ஆரம்பித்து எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் வந்துவிடும்.

     
    • bsubra 7:35 am on November 11, 2008 Permalink | Reply

      மேல்மருவத்தூர் சக்தி பீடங்கள், திருமலா-திருப்பதி தேவஸ்தானக் கோவில்கள் இந்த ஃப்ரான்ச்சைஸை முயன்றாலும், மூலஸ்தானத்திற்கு பவர் ஜாஸ்தி.

    • ரவி 3:39 pm on November 11, 2008 Permalink | Reply

      எத்தனை நிமிசம், எத்தனை கோயிலில் என்ன மெட்டில் இசைக்கிறது என்பது ஒரு இதுவே இல்லை. மனிதன் மனமுருகி இசைப்பது தானே பக்தி? இது எதற்கு ஒப்புக்கு எந்திர இசை? பிறகு சூடம் காட்ட, மந்திரம் சொல்ல, கருவறை தூய்மைப்படுத்த, அர்ச்சனை செய்ய எல்லாவற்றுக்கும் எந்திரம் கண்டுபிடிக்கலாமோ :)

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel