Updates from மணிகண்டன் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • மணிகண்டன் 5:54 pm on January 7, 2010 Permalink | Reply
    Tags: 3idiots   

    3 idiots படம் பார்த்தேன். பரவாயில்லை. இந்த பட கதை கிரெடிட்டுக்கு எதுக்கு அடிச்சிகறாங்கன்னு தோன்றியது :) -

     
  • மணிகண்டன் 9:26 pm on December 15, 2009 Permalink | Reply  

    Just started seeing the movie :) - spell bound with IR’s first song. Eventhough i heard the tune for thousand times in tamil, “halke sae bole” is just amazing

     
    • மணிகண்டன் 9:33 pm on December 15, 2009 Permalink | Reply

      இந்த விமர்சனங்கள் படிச்சுட்டு படம் பார்ப்பது மரண கடுப்பா இருக்கு ! அதுவும் குறிப்பா பின்னணி இசையை மட்டுமே கேட்கும் நிலையில் உள்ளேன். வித்யா பாலன் மற்றும் அமிதாப் காட்சிகள் மிகவும் அழகாக இருக்கிறது.

      • மணிகண்டன் 9:37 pm on December 15, 2009 Permalink | Reply

        வித்யா பாலன் மற்றும் அபிஷேக் அறிமுக காட்சி / கலி முடி இத்திபாக் சே வழக்கம்போன்ற காட்சியமைப்பு. ஆனாலும் இசை மற்றும் வித்யாபாலன் தனித்து நிற்கின்றனர்.

        • மணிகண்டன் 9:42 pm on December 15, 2009 Permalink | Reply

          இது போன்ற அம்மாக்கள் இருந்தால் நமது ஊரில் நடக்கும் “பல தற்கொலைகள்” நடக்காது. ஆனால் வசனம் மிகைபடுத்தல் ரகம். “தும்ஹே பச்சா சாஹியே யா நஹி சாஹியே” எரிச்சல் :) -

          • மணிகண்டன் 9:44 pm on December 15, 2009 Permalink | Reply

            நோயை பற்றி விளக்கும் டாக்டர் படபடவென்று ஆங்கிலத்தில் விளக்குவது / அதற்கான அவரது முகபாவம் ஆஹா :) -

            • மணிகண்டன் 9:48 pm on December 15, 2009 Permalink

              குழந்தையின் நோயை பற்றி வித்யாபாலனிடம் ஒரு பெண்ணின் விசாரிப்பு. அதைப் பார்த்தவுடன் என்னுடைய நண்பரின் மனைவி ஞாபகத்திற்கு வந்தார். அவரும் இப்படித்தான் இறுகிப்போன மனநிலையில் எளிதாக பதிலளிப்பார்.

            • மணிகண்டன் 9:59 pm on December 15, 2009 Permalink

              அமிதாப்பச்சனின் உடல்மொழி மொழி ரியலி சூப்பர்ப். அதுவும் பத்திரிகை மக்களிடம் தப்பித்து வந்தவுடன் வீட்டில் வேகவேகமாக நடந்துக்கொண்டே பேசுவது வாவ்

            • மணிகண்டன் 10:05 pm on December 15, 2009 Permalink

              அபிஷேக்கின் அப்பா “ஆர் யூ கேய்” என்று கேட்கும் வசனம் :) - அமிதாப்/ வித்யாபாலன் தவிர மற்ற அனைத்தும் அசிங்கமாக :) - இருக்கிறது !

            • மணிகண்டன் 10:19 pm on December 15, 2009 Permalink

              படத்தில் வரும் அரசியல்வாதியின் குனாதசியங்கள் சித்தரிப்பு / பிரஸ் / தொலைக்காட்சி சேனல்கள் குறித்தான காட்சிகள் ரசிக்கும்படி எடுத்திருக்கலாம்.

            • மணிகண்டன் 10:26 pm on December 15, 2009 Permalink

              குழந்தையை உட்கார வைத்துவிட்டு வராமல் ஏமாற்றும் அபிஷேக்கின் மேல் எரிச்சல் வருகிறது :) -

            • மணிகண்டன் 11:04 pm on December 15, 2009 Permalink

              தாரே ஜாமீன் பர் பார்க்கும்பொழுது வராத ஒருவித உணர்வு பா பார்க்கும் பொழுது எனக்கு வருகிறதே ! படம் எடுக்கப்பட்டுள்ள விதமா அல்லது நான் அப்பாவான பின் பார்ப்பதாலா ?

            • மணிகண்டன் 11:59 pm on December 15, 2009 Permalink

              ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை எழுதவிடாமல் முழுவதும் பார்க்க வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். எனக்கு படத்தை விமர்சனம் செய்ய தெரியாது. அதனால் முயல போவதுமில்லை. இசை எவ்வித உறுத்தலும் இல்லாமல் படத்துடன் ஒன்றியே அருமையாக இருந்தது. அமிதாப் மற்றும் வித்யாபாலன் ஜஸ்ட் அமேஜிங். அதுவும் கண்ணாடியை போடச்சொல்லி அமிதாப் காட்டும் செய்கை அற்புதம். படம் முடிந்தபிறகு மழையில் அபிஷேக் / வித்யா பாலன் காட்சி பழைய கால tragedy படங்களில் தேவலோகத்தில் ஆவியாக கதாநாயகன்/நாயகியை காட்டுவது போல் இருந்தது :) - அம்மா / பையன் அன்னியோன்யத்திர்க்கு அருகில் அபிஷேக் எடுபடவில்லை. பம் மற்றும் அமிதாப் காட்சிகள் கலக்கல்.

    • ரவி 4:24 pm on December 16, 2009 Permalink | Reply

      அடடா இந்த அளவு உருகி இருக்கீங்களே :) தாரே சமீன் பர் பல முறை பார்த்திருக்கேன். இது ஒரு தடவைக்கு மேல முடியாது. உண்மையில் படத்துக்கு மா-ன்னு தான் பேர் வைச்சிருக்கணும்.

      ஒரு வேளை நீங்கள் அறிந்திருக்காவிட்டால் இடுகையை மொத்தமா ஒரே மூச்சில் பெரிசா எழுத

      http://111.118.215.7/~ularal/wp-admin/post-new.php

  • மணிகண்டன் 11:59 pm on September 15, 2009 Permalink | Reply  

    ப்ருனோ, சச்சினின் சதம் குறித்து உங்கள் கருத்து என்ன ? இந்த ஆட்டம் போங்காட்டம் என்று சொல்லி மறுபடியும் ஒரு பைனல் நடத்த சொல்லலாமா ?

     
    • புருனோ 7:33 pm on September 19, 2009 Permalink | Reply

      சச்சின் ஆட வந்து 20 ஆண்டுகள் ஆன பின்னரும், சச்சின் சதமடித்து தான் இந்திய இறுதி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலையில் மீதி 10 பேர் இருப்பது இந்திய அணியின் துர்பாக்கியம் தான்

      கடந்த சில வருடங்களாக நடந்த ஆட்டங்களை எடுத்து பார்த்தால் தெரியும்

  • மணிகண்டன் 3:00 pm on July 14, 2009 Permalink | Reply  

    சுஜாதாவின் கணையாழி கடைசிப்பக்கங்களில் படித்தேனா இல்லை வேறு ஏதோ புத்தகமா என்று நினைவு இல்லை. ஒருமுறை அவரை பேச அழைத்தபொழுது இப்படி ஆரம்பித்துள்ளார். எழுத்தாளனுக்கு பேசுவது என்பது மிகவும் கடினம். எழுதியதை அழித்து அழித்து எழுதியே பழக்கப்பட்டு இருப்பான். ஆனால் பேசுவது அப்படியா ? அவர் கூறியது draft version என்று நினைக்கிறேன்

     
    • ரவி 8:06 am on July 15, 2009 Permalink | Reply

      எல்லா எழுத்தாளர்களும் அழித்து அழித்து எழுதுவார்களா தெரியவில்லை. ஒரு முறை எழுதியதைத் திருத்தாத எழுத்தாளர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். செயமோகன் எழுத்துப் பிழைகளைக் கூட திருத்த மாட்டேன் என்று ஒரு இடத்தில் சொல்லி இருந்தார். பேச்சாளர்களும் முதற்கட்டத்தில் நிறைய முறை அழித்துத் திருத்தித் தான் பேசப் பழகுகிறார்கள்.

  • மணிகண்டன் 1:33 pm on May 6, 2009 Permalink | Reply  

    ப்ருனோ,

    உளறல் ட்விட்டர் போன்ற ஒரு வெப் தளம் என்று நினைத்தேன். நீங்கள் ஏன் பெரிது பெரிதாக பதிவில் போட்ட மறுமொழிகளை இங்கு வெளியிடுகிறீர்கள் ? மற்றவைகளை படிப்பது கடினமாக இருக்கிறதே !

     
    • ulagam 9:16 pm on May 6, 2009 Permalink | Reply

      புருனோ,
      எனக்கும் அதே கேள்வி மனதில் தோன்றியது…
      ஏன் பெரிது பெரிதாக போடுகிறீர்கள்?

      • புருனோ 10:32 pm on May 6, 2009 Permalink | Reply

        உளறல் என்பதே டிவிட்டரை விட பெரிதான வாக்கியங்களை சேமிக்கத்தான். பல நேரங்களில் ஒரு விவாதத்தில் ஒரு மறுமொழி எழுதியவுடன் அங்கு அது நின்று விடுகிறது. ஆனால் இங்கு அது குறித்த மேலும் ஆழமான விவாதம் தொடர்கிறது (சிறிது பின்னோக்கி பார்க்கலாம்

        மேலும் இந்த தளவடிவமைப்பில், யார் யாருக்கு பதில் கூறுவது என்று தெளிவாக தெரிவதால் விவாதிக்க வசதியாக உள்ளது

    • புருனோ 10:33 pm on May 6, 2009 Permalink | Reply

      மறுமொழியில் எழுதிய விவாதங்களை சேமித்து வைக்கவும் இதை நான் பயன்படுத்துகிறேன். சில நேரங்களில் நாம் முன்னர் எழுதியதை மீள்வாசிப்பு செய்ய இது வசதியாக இருக்கிறது. பலரும் அதற்கென தனியாக ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறார்கள். நான் இங்கு எழுதுகிறேன்

    • ரவி 1:35 am on May 7, 2009 Permalink | Reply

      Wat are you doing என்று கேட்டுத் தான் டுவிட்டர் தொடங்கினார்கள். அது இன்று எத்தனையோ நல்ல வகைகளில் பயன்படுகிறது. புருனோ போல் குறிப்பிடத்தக்க மறுமொழிகளைச் சேமிக்க உளறல் பயன்படும் என்பது நானே எதிர்ப்பாராதது. வருங்காலத்தில் உளறலில் ஆட்கள் கூடினால் டுவிட்டர் public timeline போல் உளறல் முகப்பும் நெரிசல் கூடியதாகவிடும். /author/ravidreams என்பது போல் உள்ள அவரவர் பக்கங்களைப் பின்தொடரும் வழக்கம் வரலாம்.

      • ulagam 1:42 am on May 7, 2009 Permalink | Reply

        ரவி, உளறல் இன்னோரு டிவிட்டாராக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்பொழுது இருக்கும் தன்மை நன்றாக உதவுகிறது. டிவிட்டரை போல் உளறல் என்றால் அதற்கு டிவிட்டரை பயன்படுத்தலாமே????

        டிவிட்டருக்கும் உளறலுக்கும் ஒரு வித்தியாசம். அதிக வார்த்தைகள் எழுதலாம். நன்றாக விவாதிக்கலாம். ஆனால் பெரிதாக இரு்ந்தால் வாசிப்பது கடினமாக உள்ளது என்பது எனது கருத்து

  • மணிகண்டன் 1:11 pm on May 3, 2009 Permalink | Reply
    Tags: , பொது,   

    சமீபத்தில் பலரிடம் பேசியபோது அவர்கள் கூற கேட்டது. இந்துமதம் என்ன சொல்லி இருக்குனா, இஸ்லாம் என்ன சொல்லி இருக்குனா, கிறிஸ்துவம் என்ன சொல்லி இருக்குனா,

    அது ஏன் என்கிட்ட மட்டும் எந்த மதமும் நேரடியா பேசமாட்டேங்குது

     
    • ரவி 9:45 pm on May 3, 2009 Permalink | Reply

      குரான், விவிலியம் அடிப்படையில் சொன்னாங்கன்னா தப்பில்லை தானே? ஆனால், கீதை, வேதங்கள் அடிப்படையில் மட்டும் இந்து சமய மேற்கோள்கள் சொல்வது சரியாக இருக்காது. இந்து சமயம் என்பதே கட்டமைக்கப்பட்ட ஒன்று என்கிறார்கள்..

    • புருனோ 9:03 am on May 5, 2009 Permalink | Reply

      The Eye Does Not See What the Mind Does Not Know என்பது வில்லியம் ஆஸ்லரின் கூற்று.

      • மணிகண்டன் 1:30 pm on May 6, 2009 Permalink | Reply

        ரவி,

        குரான் சொல்வது என்னவென்றால், கீதை சொல்வது என்னவென்றால், பைபிள் சொல்வது என்னவென்றால் – இதில் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் இதற்கும் கிருத்துவம் கூறுவது என்னவென்றால், இஸ்லாம் கூறுவது என்னவென்றால், இந்து மதம் கூறுவது என்னவென்றால் – மிக பெரிய வேறுபாடு இருக்கிறது என்பதே என் எண்ணம். மதம் என்பதை அதன் வேத புத்தகம், அதை பயன்படுத்திய விதம், பயன்படுத்தப்படும் விதம், அந்த மதத்தை சார்ந்த மனிதர்கள், அவர்களின் கொள்கைகள், செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்தே கூற முடியும் அல்லவா ?

        • புருனோ 10:38 pm on May 6, 2009 Permalink | Reply

          //ஆனால் இதற்கும் கிருத்துவம் கூறுவது என்னவென்றால், இஸ்லாம் கூறுவது என்னவென்றால், இந்து மதம் கூறுவது என்னவென்றால் – மிக பெரிய வேறுபாடு இருக்கிறது என்பதே என் எண்ணம்.//

          இதை ரவி அழகாக விளக்கி விட்டார்.

        • ரவி 1:41 am on May 7, 2009 Permalink | Reply

          இசுலாமியர், கிறித்தவர்களுள் எவ்வளவு வேறுபாடு இருந்தாலும் பெரும்பான்மையினர்(?) விவிலியம் (பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு), குரானை அவர்கள் சமய நூல்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அச்சமயத்தினருக்காவது, அந்நூல்கள் கூறுவது அச்சமயங்கள் கூறுவதாக ஒப்புக் கொள்வதில் தயக்கம் இருக்காது.

          //மதம் என்பதை அதன் வேத புத்தகம், அதை பயன்படுத்திய விதம், பயன்படுத்தப்படும் விதம், அந்த மதத்தை சார்ந்த மனிதர்கள், அவர்களின் கொள்கைகள், செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்தே கூற முடியும் அல்லவா ?//

          இப்படி இருந்தா நல்லா இருக்கும் தான். ஆனா, இப்படி இல்லையே (தசாவதார இறுதிக் காட்சியில் கமல் சொல்வது மாதிரி படிங்க :) )

    • Anonymous 2:44 am on May 21, 2009 Permalink | Reply

  • மணிகண்டன் 1:39 pm on May 2, 2009 Permalink | Reply  

    விடுமுறையை பயன்படுத்தி மக்கள் பிக்னிக் செல்வது போல், தேர்தல் தினம் வேலைநாள் என்றால் தேர்தலை பிக்னிக் போன்று கருதி மக்கள் வாக்களிக்க வருவார்களா ? மும்பையில் 44 சதவீத வாக்குப்பதிவு.

     
    • ரவி 12:52 am on May 3, 2009 Permalink | Reply

      தனியாரில் பணி புரியும் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களைக் கருத்தில் கொண்டாவது விடுமுறை தேவை தான்.

      • ulagam 9:42 pm on May 3, 2009 Permalink | Reply

        ஓட்டு போடுவதற்கு எதற்கு விடுமுறை? எல்லோரும் ஓட்டு போட்ட பின் வேலைக்கு செல்லலாமே? செல்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை. அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர்களும் வாக்களித்து தங்களது வேலையை செய்கிறார்களே!….

        • ரவி 9:55 pm on May 3, 2009 Permalink | Reply

          பேருந்துகள் அவசியச் சேவையின் கீழ் வரும். அவை மற்ற விடுமுறை நாட்களிலும் கூட இயங்குகின்றன. வாக்குச் சாவடியில் எப்ப எவ்வளவு கூட்டம் இருக்கும்னு தெரியாது. அதற்கேற்ப தனியாரில் நேர அனுமதி பெற்று வந்து வேலைக்குத் திரும்பச் செல்வது சிரமம். ஒருவர் வாக்களிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவது முக்கியம்.

          • மணிகண்டன் 6:31 am on May 4, 2009 Permalink | Reply

            ரவி, நீங்கள் சொல்லுவது எல்லாம் பேச்சளவில் (theoretically!!!) சரி தான். ஆனால் வாக்கு சதவீதம் பார்த்தால் அப்படி தெரியவில்லையே. அலுவலகம் வைத்தால் மக்கள் இதை ஒரு பொழுதுபோக்காக செய்வார்கள் என்ற என் நம்பிக்கை தான் இந்த உளறல். அதை தவிர, தனியாரில் வேலை பார்க்கும் பலரும் சொந்த ஊரிலேயே தனது வாக்குரிமை வைத்துள்ளனர். அவர்கள் ஒரு நாள் விடுமுறைக்காக செல்வார்கள் என்பது சந்தேகம். சனி, ஞாயிறுகளில் தேர்தல் வைக்கலாம். வாக்களிப்பவருக்கு குங்குமம் வார இதழ் பரிசாக தரலாம்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel