காதலிக்க மறுத்த மாணவி மற்றும் அவளது தோழியின் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்று விட்டனர். இதே போல் (பெண்கள் மீது ஆசிட் வீசறதை சொல்றேன், போலீஸ் சுடறதைப் பத்தி இல்ல!!!) ஆந்திராவிலேயே பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிட வேண்டியது.
என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் அவர்களை சுட்டுக் கொண்றிருக்கலாம் என்று சில போலி ‘மனித உரிமை’ காப்பாளர்கள் கூவினாலும், இவ்வாலிபர்களைப் போன்ற ஆணாதிக்க அரக்கர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும் என்று தோன்றுகிறது.
“பெண்கள் மீது வன்முறையை பிரயோகித்தால் உனக்கு சாவு தான்” என்ற மெஸேஜ் இந்த ஆணாதிக்க சமுதாயத்தை சென்றடைய இது போன்ற instant தண்டனை தேவை தான், ஒரு சில நாதாறிகள் “Law of the Jungle”, “Human Rights Violation” என்று கூப்பாடு போட்டாலும் !!!
அரவிந்தன் 3:27 am on December 14, 2008 Permalink |
//ஒரு சில நாதாறிகள் “Law of the Jungle”, “Human Rights Violation” என்று கூப்பாடு போட்டாலும் !!!//
இந்த தளத்தின் தலைப்பு போலவே மேற்ச்சொன்ன வரிகள்..
உங்களிடமிருந்து இப்படி ஆத்திரத்தில் அள்ளித்தெளித்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை
anbudan_bala 8:52 am on December 14, 2008 Permalink |
//உங்களிடமிருந்து இப்படி ஆத்திரத்தில் அள்ளித்தெளித்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை
//
It is because of their ‘History’ that such strong words were used by me. These so called activists and liberals value terrorists and criminals’ lives more than the victims’ lives. One can understand the true pain only if he/she is the victim, I think !
ரவி 6:13 am on December 15, 2008 Permalink |
இயற்கையே தானாய் தண்டிப்பதைத் தானே poetic justiceனு சொல்ல முடியும்?
செல்வா 7:53 am on December 15, 2008 Permalink |
‘பாலா உங்கள் வெஞ்சினம் புரிகின்றது, நேர்மையானது. ஆனால் உங்களிடம் வேறு ஒரு தலைப்பில் ஒரு கேள்வி:
//“பெண்கள் மீது வன்முறையை பிரயோகித்தால் உனக்கு சாவு தான்” என்ற மெஸேஜ் இந்த ஆணாதிக்க சமுதாயத்தை சென்றடைய இது போன்ற instant தண்டனை தேவை தான், ஒரு சில நாதாறிகள் “Law of the Jungle”, “Human Rights Violation” என்று கூப்பாடு போட்டாலும் !!!//
“பெண்கள் மீது வன்முறையாக நடந்து கொண்டால் உனக்கு சாவுதான் என்ற செய்தி ஆணாதிக்க சமுதாயத்தை சென்றடைய இதுபோன்று உடனே விழும் தண்டனை தேவைதான்..”
என்பதுபோல எழுதலாமே.. ஏன் இந்த “மெஸேஜ்” , “வன்முறையை பிரயோகித்தல்” போன்ற மிக செயற்கையான சொல்லாட்சிகள்? வன்முறையை பிரயோகித்தல் என்பதைவிட வன்முறையாக நடந்துகொள்ளுதல், வன்முறையைக் கையாளுதல் என்று இயல்பாய் பலவாறு சொல்லலாமே. இவை நட்புடன் உங்களுக்கு தெரிவிக்கும் கருத்துதான். எண்ணிப்பார்க்கத்தான் கட்டாயம் ஏற்க அல்ல. இது என்ன ஒரு குட்டி எண்ணப் பதிவுதானே என நினைக்கலாம், இப்படித்தான் சிறுகச்சிறுக நாம் நம் மொழியையும் நம் பண்பாட்டையும் இழந்துவருகின்றோம். நன்றி
அன்புடன் பாலா 10:06 am on December 16, 2008 Permalink |
செல்வா,
நீங்கள் கூறியது புரிகிறது. ஏற்றுக் கொள்கிறேன். வெஞ்சினத்தினால் கொஞ்சம் செயற்கைத்தனம் ஏற்பட்டிருக்கலாம் !!!
அன்புடன் பாலா 10:08 am on December 16, 2008 Permalink |
ரவி,
இயற்கை போலீஸை கருவியாக பயன்படுத்தி அந்தப் பதர்களுக்கு தண்டனை வழங்கியதாகவும் எடுத்துக் கொள்ளலாம் !!!
புருனோ 12:27 pm on December 16, 2008 Permalink |
பதர்கள் என்பது சரி
ஆனால் தண்டனை சரியா என்று தெரியவில்லை
ரவி 4:29 am on December 17, 2008 Permalink |
//இயற்கை போலீஸை கருவியாக பயன்படுத்தி அந்தப் பதர்களுக்கு தண்டனை வழங்கியதாகவும் எடுத்துக் கொள்ளலாம் !!!//
இதை உறவினர்கள் அமர்த்திய அடியாட்களுக்குப் பதில் சமூகம் அமர்த்திய காவலர்களைக் கொண்டு பழிக்குப் பழி (அல்லது அதற்கும் மேல்) வாங்கியதாகவே பார்க்க இயலும்.
குற்றவாளிகள் தாங்களாகவே எங்காவது தடுக்கி அமிலத் தொட்டியில் விழுந்திருந்தாலோ இயற்கையான (!) சாலை விபத்தில் மாட்டி இருந்தாலோ கவித்துவ நீதி என நினைக்கலாம்.
குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனை எது, தரும் வழிமுறை யாது என்பது விவாதத்துக்குரியது. ஆனால், போட்டுத் தள்ளுவதை எல்லாம் கவித்துவ நீதி என்று பார்க்கத் தொடங்கினால் விபரீதமாகத் தான் போய் முடியும். ஐயத்துக்கு உட்பட்ட வகையில் காவலர்கள் குற்றவாளிகளைக் கொல்லுவதும் குற்றமே. கவித்துவ நீதி என்ற பெயரில் அதைப் புனிதப்படுத்தத் தேவையில்லை.
அன்புடன் பாலா 8:41 am on December 19, 2008 Permalink |
//கவித்துவ நீதி என்ற பெயரில் அதைப் புனிதப்படுத்தத் தேவையில்லை.
//
புனிதப் படுத்தவில்லை! அப்படிக் கூறி தண்டனை நியாயமானது / அவசியமானது (சில நேரங்களில்) என்று என்னைப் போன்றோர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை சமூகத்தில் நிலவுகிறதே