உளறல் அப்படின்னா?

தமிழ் Twitter போல ஒரு முயற்சி.

நீங்க என்ன செய்யுறீங்க, நினைக்கிறீங்கன்னு 2, 3 வரிகளில் எது வேணா எழுதலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

1. எப்படி சேர?

http://www.ularal.com/wp-login.php?action=register போய் ஒரு நிமிடத்தில் பயனர் கணக்கு தொடங்கலாம்.

2. எப்படி என் படத்தைக் காட்ட?

Gravatar தளத்தில் உங்கள் மின்மடல் இருந்தால், உங்கள் படம் இங்கு தானாகவே தெரியும்.

3. ஆங்கிலத்திலும் உளறலாமா?

முடிஞ்சளவு தமிழ்ல உளறுங்க. அப்பப்ப ஆங்கிலத்துல உளறினாலும் சரி தான்.

4. இங்க நான் உளறுவதை வேற தளங்களுக்கு பெயர்த்து எடுக்க முடியுமா?

உங்கள் உளறல்கள், அவற்றுக்கான மறுமொழிகளை மட்டும் xml கோப்பு வடிவில் பெயர்த்து எடுத்து வேறு தளங்களுக்குக் கொண்டு செல்லலாம். உங்கள் உளறல் உங்களுக்கே சொந்தம் :)

5. Twitterல எழுதினா இங்கயும், இங்க எழுதினா அங்கயும் வர்ற மாதிரி செய்ய முடியுமா?

இங்க நீங்க எழுதிற உளறல்களுக்குத் தனி ஓடை உண்டு. அதை http://twitterfeed.com/ போன்ற சேவைகள் மூலம் டுவிட்டரில் வரச் செய்ய முடியும். டுவிட்டர்ல இருந்து இங்க வர வைக்க வழி இருப்பா பார்ப்போம்.

6. என்னுடைய பேரை எப்படி மாத்துறது?

http://www.ularal.com/wp-admin/profile.php போய் முதலில் நீங்கள் காட்ட விரும்பும் பெயரை nickname என்பதில் சேர்த்துச் சேமியுங்க. பிறகு, Display name publicly as என்பதில் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்து திரும்பவும் சேமியுங்க.

7. தலைப்பை எப்படி மாத்துறது?

முகப்புப் பக்கத்துல இருக்க உளறல் பெட்டில இருந்து எழுதினா தலைப்பு தானா வரும். நீங்க விரும்புற தலைப்பைக் கொடுக்கணும்னா http://www.ularal.com/wp-admin/post-new.php பக்கத்தில் இருந்து எழுதலாம்.

8. மறுமொழிகளை மட்டுறுத்தலாமா?

இப்போதைக்கு மட்டுறதுத்தல் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன். உங்க உளறலுக்கு வர்ற மறுமொழிகளை மட்டும் உங்களால நீக்கவும் திருத்தவும் முடியும்.

**

அன்புடன்,

ரவி.

Related posts