உளறல்

புருனோ

  • 11:46:28 am on November 15, 2008 | # |

    //அரசு கல்லூரிகளில் மட்டுமே சாதிவாரியாகவும், இனவாரியாகவும் சண்டை நடைபெறுவது என்ற ஒரு முக்கிய விசயம் வெளிவருகிறது!//
    http://wethepeopleindia.blogspot.com/2008/11/ambedkar-law-college-chennai.html

    மன்னிக்கவும் தல

    இது தவறான வாதம்

    அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக்கல்லூரிகளில் இது கிடையாது.

    தனியார் கலைக்கல்லூரிகளில் கூட சாதி மோதல் உண்டு. ஒரு காலத்தில் சாராயக்கடை ஏலத்தை விட அதிக போலிஸ் பாதுகாப்புடன் தான் நெல்லை ஜான்ஸ் கல்லூரி தேர்தல் நடக்கும்

    Related posts

     

Comments

  • புருனோ 11:50 am on November 15, 2008 | #

    //ஏன் என்றால் தனியார் கல்லூரிகளில் அரசியலுக்கு இடம் இல்லை! அங்கே பெரும்பாலும் மாணவர் தலைவர் தேர்தல் என்ற ஒன்று இல்லை! அரசியல் கட்சி அங்கு அனுமதி இல்லை! கல்லூரி நிர்வாகம் ஓட்டு பொறுக்க விடுவதில்லை! அதனால் அங்கு இது போன்ற விசயங்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன்!!!//

    கோயம்புத்தூரில் ஒரு தனியார் கல்லூரி மாணவர் மன்றத்தின் தேர்தல் செலவு ஒவ்வொரு வேட்பாளருக்கும் லட்சக்கணக்கில் ஆவதாக கேள்வி

    இந்த பிரச்சனையை நீங்கள் அணுகிய விதம் தவறு என்று நினைக்கிறேன்

  • புருனோ 11:50 am on November 15, 2008 | #

    பிரச்சனையின் அடிநாதம் வேறு

    சென்னை மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் அரசியலில் ஈடுபட விரும்பும் மாணவர்களின் சதவிதம் என்ன

    அண்ணா பல்கலைகழகத்தின் இருந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் சதவிதம் என்ன

    சட்டக்கல்லூரியில் இருந்து அரசியலில் ஈடுபட விரும்புபவர்களின் சதவிதம் என்ன என்று பார்த்தால் ஒரு எளிய உண்மை புரியும்.

  • புருனோ 11:51 am on November 15, 2008 | #

    மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போது எதை நோக்கி செல்கிறார்கள் –> பட்ட மேற்படிப்பு அல்லது அரசு பணி அல்லது அயல்நாடு அல்லது அவர்களின் தந்தை (அல்லது மாமனாரின் !!) மருத்துவமனை

    பொறியியல் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போது எதை நோக்கி செல்கிறார்கள் –> ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ அல்லது டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களிலிருந்து பணிநியமண உத்தரவு

    சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரிகாலத்தில் எதை நோக்கி செல்கிறார்கள் –> கட்சியில் பதவி

    வெகு சிலரே எம்.எல் படிக்க வேண்டும், Intellectual Proprietary Law படிக்க வேண்டும், லேபர் லா படிக்க வேண்டும், என்று நினைக்கிறார்கள்

    அதே போல் சில அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளில் காலேஜ் சேர்மன் என்றால் வருங்கால எம்.எல்.ஏ என்ற நிலை இருக்கிறது.

  • புருனோ 11:51 am on November 15, 2008 | #

    //நம் தமிழக அரசியல்வாதிகளின் தங்கள் பிரச்சனைகள்/அடி தடி அழிக்கும் தேவைகளுக்கு இந்த அரசு சார்ந்த கல்லூரிகளை ஒரு ரெக்கூருட்டிங் ஏஜென்ஸிகளா மாற்றிவைத்துள்ளனர் என்றே தோண்றுகிறது!//

    சில மாற்றங்கள்

    1. இது தமிழகத்தில் மட்டும் அல்ல. நாடு முழுவதும் இப்படி தான் இருக்கிறது

    2. ”அரசு சார்ந்த” அல்ல.

    அண்ணா பல்கலைக்கழகம் டிசிஎஸுக்கு
    விப்ரோவிற்கும் ரெக்கூருட்டிங் ஏஜென்ஸியாக இருப்பது போல் சில அரசு மற்றும் சில தனியார் கலைக்கல்லூரிகள் மற்றும் சட்டக்கல்லூரிகள் ரெக்கூருட்டிங் ஏஜென்ஸிகளா இருக்கின்றன என்பது கசப்பான நிஜம்.

  • புருனோ 11:51 am on November 15, 2008 | #

    சமுகத்தின் பிரச்சனைகளின் தாக்கம் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் குறைவே

    அதே போல் சாதியின் தாக்கமும் குறைவு

    ஆனால் கலைக்கல்லூரிகள் மற்றும் சட்டக்கல்லூரிகளின் சமுக பிரச்சனைகளின் தாக்கம் அதிகமாகவே இருந்துள்ளது

    அதே போல் சாதி தாக்கமும்

  • புருனோ 11:52 am on November 15, 2008 | #

    //தேர்தல் என்றதுமே அரசியல் வருதில்ல! அதை மாணவர் மத்தியில் கட்சிகள் சிண்டு முடிவதே காரணம் என்கிறேன் நான்! //

    ஆமாம்.

    //தனியார் கல்லூரிகளில் பெரும்பாலும் நடப்பதில்லை என்று சொன்னால் ஓ.கேவா?? அதே போல அரசு கல்லூரிகள் பெரும்பாலும் என்று சொன்னால் சரியாகிவிடுமா.//

    இல்லை தல

    பெரும்பாலான கலைக்கல்லூரிகள், ஏறத்தாழ அனைத்து சட்டக்கல்லூரிகள்

    பிற பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் நடப்பதில்லை என்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்

    இதை அரசு x தனியார் என்று பிரிக்க முடியாது என்பது தான் என் கருத்து

  • புருனோ 11:52 am on November 15, 2008 | #

    இதை வெறும் பொருளாதார அளவு கோல் வைத்து மட்டும் பார்ப்பது தவறு. உதாரணமாகாக பொதுவாக ஏழை மாணவர்கள் படிக்கும் ஐ.டி.ஐகளில் (அரசு என்றாலும் சரி, தனியார் என்றாலும் சரி) சாதி மோதல் மிக மிக குறைவு (அங்கும் 69 சத இடப்பங்கீடு உள்ளது)

    காரணம் - தெரிந்த விஷய்ம் தான்

  • புருனோ 11:54 am on November 15, 2008 | #

    இது குறித்து வித்தியாசமான அனுகுமுறையில், பல பதிவுகளில் சொல்லப்படாத விஷயங்களை கூறும் ஒரு பதிவு http://vgswami.blogspot.com/2008/11/blog-post.html

  • புருனோ 12:06 pm on November 15, 2008 | #

    சென்னை சட்டக்கல்லூரி கலவரம் - அடித்தது பல சாதி மாணவர்கள். அடி வாங்கியது / கத்தியால் வெட்டப்பட்டதும் பல சாதியினர் என்பது மூன்று நாட்கள் கடந்த பின்னர் இன்று கூட பலருக்கு தெரியவில்லை என்பதை பதிவர் சந்திப்பில் அறிந்து கொள்ள முடிந்தது.

  • புருனோ 12:07 pm on November 15, 2008 | #

    இன்னமும் 20 வருடங்கள் கழித்து நமக்கு நீதிபதியாக போகிறவர்கள் படிக்கும் காலத்தில் விடுதி அறையில் பேனா பென்சில் ஸ்கேலுடன் கத்தியும் உருட்டுக்கட்டையும் வைத்திருந்தனர் என்று நினைக்கும்போது சிறிது கலக்குகிறது

  • ரவி 11:16 pm on November 15, 2008 | #

    மாறுபட்ட உணர்ச்சிவசப்படாத பார்வை. நன்றி.

Leave a Comment

Subscribe without commenting