உளறல்

புருனோ

  • 07:36:31 pm on October 28, 2008 | # |

    பலர் தமிழில் எழுதும் போது T என்பதை தமிழில் எழுத ”ட” உபயோகிக்காமல் ”ற” உபயோகிக்பது ஏன்

    Related posts

     

Comments

  • mayooresan 11:55 pm on October 28, 2008 | #

    எனக்கு அப்படித் தெரியவில்லையே? உதாரணம் சொல்வீங்களா?

    Take - டேக்
    Tea - டீ

  • ரவி 5:16 am on October 29, 2008 | #

    வெற்றி, பெற்றோர் என்று எழுதுவதை ஆங்கிலத்தில் vetri, petrOr என்று எழுதுவது போல் ஆங்கிலத்தில் tr என்று வரும் இடங்களில் இலங்கைத் தமிழர் இப்படி எழுதுவதுண்டு.

    பெட்ரோல் - தமிழக வழக்கு
    பெற்றோல் - இலங்கை வழக்கு.

    மற்றபடி எல்லா இடங்களிலும் t - > ற என்று யாரும் எழுதுவதில்லை.

  • புருனோ 12:55 am on October 30, 2008 | #

    இல்லை ரவி,

    tr என்றில்லாமல் வெறும் t வரும் இடங்களில் கூட நான் ”ற்” உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன்

    உதாரணம் TDTA என்பதை தமிழில் றி.டி.றி.ஏ என்று எங்கள் ஊர் பக்கம் எழுதுகிறார்கள்.

    அடுத்த முறை இணையத்தில் ஒரு வாசிக்கும் போது சுட்டி தருகிறேன்

  • mayooresan 10:35 pm on November 2, 2008 | #

    TDTA என்பதை நீங்கள் சொல்வது போல் எழுதினால் டி.டீ.டி.ஏ என்றல்லவா எழுதவேண்டும். குளப்பமாகிவிடுமே!!!!!!!

  • ரவி 8:52 pm on November 7, 2008 | #

    முதல் மறுமொழியை எழுதிய பிறகு தான் இன்னும் பல இடங்களிலும் t->ற வருவது நினைவு வந்தது. இலங்கைத் தமிழரிடம் தான் இந்த வழக்கம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் சொல்லித் தான் தமிழ்நாட்டிலும் இருப்பது தெரியும். ஒரு வேளை தென்தமிழ்நாடு இலங்கை அருகே இருப்பதால் இந்தத் தொடர்போ?

    metre - மீற்றர்
    test - ரெஸ்ற்

    என்று எழுதுவதைக் கண்டிருக்கிறேன். இறுதியில் வரும் tக்கு றகரமும் முதலில் வரும் tக்கு ரகரமும் பயன்படுத்துகிறார்கள் என்பது என் புரிதல்.

    இலங்கைத் தமிழர்கள் டகரத்தை எல்லா இடங்களிலும் d கொண்டே குறிப்பிடுகிறார்கள்.

    குட்டி - kuddy என்று எழுதுகிறார்கள். kutty என்றில்லை. எனவே tஐக் குறிப்பிட ரகர, றகரங்களை நாடுகிறார்கள் போலும்.

    தமிழ்நாட்டுக் குழந்தைகளும் ரகரத்தை டகரமாக குளறி ஒலிப்பதைக் கவனிக்கலாம். எனவோ t - r ஒலித்தொடர்புகள் ஏதும் உண்டோ என்னவோ

Leave a Comment

Subscribe without commenting