Vicky Donor

Vicky Donor பார்த்தோம். நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் எங்கள் ஆய்வகத்தில் கருத்தடை ஆய்வுக்காக மாணவர்களிடம் இருந்து விந்துகளைப் பெற்றார்கள். ஒரு முறை கொடுத்தால் 500 இந்திய ரூபாய் ( பத்து ஆண்டுகளுக்கு முன்னர்!). நான் நீ என்று போட்டி போடுவோம் :) பழைய நினைவுகளைக் கிளறிய படம் :) ஆனால், இது குழந்தைப் பேறுக்காக விந்து அளிப்பது நல்ல விசயமே என்பதை நகைச்சுவையாக வலியுறுத்துகிறது. கருத்தான பொழுதுபோக்குப் படம். பார்க்கலாம்.