The Amazing Spiderman

The Amazing Spiderman பார்த்தேன். திரும்ப முதல்ல இருந்து புரோட்டா சாப்பிடும் விளையாட்டு மாதிரி, இந்தக் காலத்துக்கு ஏற்ப அறிவியல் ஏரணங்களுடன் சிலந்திமனிதன் உருவாகும் விதத்தைச் சொல்கிறார்கள். போன சிலந்திமனிதனை விட இவர் இன்னும் இளமையாக, துடிப்பாக இருக்கிறார். சோகப் பாட்டு பாடாமல் நேரடியாக காதலியிடம் உண்மையையும் காதலையும் ஒரு சேர சொல்லும் காட்சி அருமை. பார்க்கலாம்.