பில்லா 2
பில்லா 2 பார்த்தேன். ஒரு Godfather அல்லது நாயகன் போல அருமையாக சொல்லியிருக்கக்கூடிய கதை. ஆனால், படத்தில் ஒன்றுமே உருப்படியாக இல்லை. கொஞ்சமும் ஆர்வம் ஊட்டாத, புத்திசாலித்தனம் இல்லாத திரைக்கதை. முதன்மை நடிகைகளைத் தவிர எல்லாருமே அழகாக இருப்பதாக ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தார்.
கொடும் வன்முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாறு, இருநூறு பேராவது செத்திருப்பார்கள். சில கெட்டவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று பார்வையாளன் குழம்பக்கூடாது என்று விளாவாரியாகக் கொல்வதைக் காட்டுகிறார்கள். பல காட்சிகளில் கண்களை மூட வேண்டி வந்தது. திரையரங்கில் பல பேர் குய்யோ முய்யோ என்று அலறிக் கொண்டிருந்தார்கள். என்ன இதுக்கு தணிக்கைச் சான்றிதழ் தருகிறார்கள் எனப் புரியவில்லை. A சான்றிதழ் கொடுத்தும் திரையரங்கு முழுக்க குழந்தைகள். படத்தைப் பார்க்காமலேயே விட்டிருக்கலாம் போல.
கா. சேது 11:01 pm on July 13, 2012 Permalink |
ஆக முதல் நாளே சென்று பார்த்ததால தங்களுக்கு மிக அதிக நுழைவுக் கட்டணம் கழிவடைந்ததுதான் விளைவு.
ரவி 11:35 pm on July 13, 2012 Permalink |
இங்க ஐதராபாதில் உள்ள திரையரங்கில் எல்லா நாளும் ஒரே விலை தான். ஆக, அது பிரச்சினை இல்லை. சில படங்களுக்கு மட்டும் எப்படி இருந்தாலும் சரி என்று இந்த மாதிரி முதல் காட்சிக்குத் துணிய வேண்டியது தான்