ஈகா (நான் ஈ)
ஒரே ஒரு காட்சி தமிழில் படம் ஓட்டும் திரையங்குக்குப் போய் வர கட்டுச் சோறு கட்டிக் கொண்டு தான் போக வேண்டும் என்பதால் ஈகா பார்த்தோம். பார்த்தவர் எல்லாரும் ஆகா ஓகோ என்று எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டிருந்தார்கள். நானி – சமந்தா காதலைத் தனியாக இன்னொரு படமாகவே எடுத்திருக்கலாம். அந்த அளவு துள்ளல். ஒரு இடத்தில் கூட பிசிறு இல்லாத அருமையான கணினி வரைகலை. இயக்குனரை யாரும் மண்டை காய வைத்து விட்டார்களா என்று தெரியவில்லை.. “நான் ஈயை வைச்சுக் கூட வெற்றிப் படம் கொடுப்பேன்” என்று இறங்கி விட்டாரோ
நல்ல துணிச்சலான, கற்பனை வளமுள்ள பொழுதுபோக்குப் படம். ஒரு முறை கண்டிப்பாகப் பார்க்கலாம்.