உருமி
உருமி (தமிழ்) பார்த்தேன். இனி நல்ல ஒளிப்பதிவாளர்கள் படம் எடுத்தாலே கொஞ்சம் யோசித்துத் தான் பார்க்க வேண்டும் போல. படத்தில் ஒன்ற விடாத அளவுக்கு, தேவையே இல்லாமல் வரிசையாக நட்சத்திர நடிகர்கள் வருகிறார்கள். ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி நடக்கும் மொக்கையான திரைக்கதை. எந்த வகையிலும் சிலிர்ப்படைய வைக்காத கதை. ஒவ்வொரு காட்சியையும் விளம்பரப் படம் போல் எடுத்து கடுப்பேற்றுகிறார்கள். படத்துக்குத் தமிழில் வசனம் எழுதியவர் செந்தமிழ், பேச்சுத் தமிழ் என்று மாற்றி மாற்றி எழுதிக் குழப்புகிறார். பிருத்விராசு, ஆரியா ஆகியோர் பேசும் செந்தமிழ் வசனங்கள் சிரிப்பையே வரவழைக்கின்றன.