ஊசரவெல்லி

விமர்சனம் படிக்காமல், எந்த திட்டமும் இல்லாமல் திடீரென்று தோன்றி ஊசரவெல்லி முதல் நாள் காட்சி போய் அமர்ந்தோம். வீட்டுக்கு அருகிலேயே உள்ள ஒற்றைப் படம் காட்டும் பெரிய திரையரங்கம். நுழைவுச் சீட்டின் ஆகக் கூடிய விலையே 55 ரூபாய் தான். இதே வணிக வளாகத் திரையரங்குகளுக்குப் போனால் 150 ரூபாய். இடைவேளையின் போது, அரங்குக்குள்ளேயே வந்து முறுக்கு எல்லாம் விற்கிறார்கள். சின்ன வயதில் படம் பார்த்த நினைவு வந்தது.

துணிந்து Junior NTR படத்துக்குப் போய் அமர்ந்ததில் பெரிய மோசம் இல்லை. அண்மையில் வந்த அவரது படங்களில் பார்க்கக்கூடிய உருவாக்கம், கதை. தமன்னாவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் உள்ள கதை. கதையின் முடிச்சு உண்மையிலேயே இது வரை எந்தப் படத்திலும் பார்த்திராத ஒன்று என்பதால் இறுதி வரை விறுவிறுப்பாகச் சென்றது. நகைச்சுவையும் நன்றாக இருந்தது.

ஊசரவெல்லி என்றால் தெலுங்கில் பச்சோந்தி!