30 நாட்கள்
தொடர்ந்து 30 நாட்கள் ஒரு விசயத்தை விடாது செய்தால், புதிய பழக்கத்தை உருவாக்கலாம் என்கிறார்கள். Matt Cutts இது போல் செய்து பார்க்கும் பிரபலங்களில் ஒருவர்.
சரி, நாமும் ஒரு 30 நாட்கள் அரிசி சோறு சாப்பிடாமல், எடையைக் குறைப்போம் – வயிற்றைக் காப்போம் என்று 15 நாட்கள் தாக்குப் பிடித்தேன். அதற்கு மேல் முடியவில்லை
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
- 30 நாட்கள் தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்வது.
- 30 நாட்கள் தொடர்ந்து புத்தகங்கள் படிப்பதற்கு என ஒரு மணி நேரமாவது ஒதுக்குவது.
நாளையில் இருந்து தொடங்கவா?
Hari 2:12 pm on August 11, 2011 Permalink |
For exercise u need atleast 3 months to make it consistent and yield visible results.
ரவி 3:44 pm on August 11, 2011 Permalink |
Can i forget your jogging in Anna University grounds
First let me try the first month
ரவி 7:44 pm on September 3, 2011 Permalink |
உடற்பயிற்சிக் கூடத்துக்குப் போவதுடன் புதிதாகச் சில நூல்களையும் படிக்கத் தொடங்கி உள்ளேன். ஒரு நாள் கூட விடாமல் தொடர்ச்சியாகச் செய்யும் பழக்கம் இன்னும் வரவில்லை. இருந்தாலும் நல்ல மாற்றம் தான்