அவன் இவன்

அவன் இவன் பார்த்தேன். தாக்கத்தை ஏற்படுத்தாத பிதாமகன் இரண்டாம் பாகம். தீவிரமான கதைகளில் இருந்து விலகி குறுகிய காலத்துக்குள் வணிக வெற்றி பெறும் படம் ஒன்றைத் தரும் அவசரத்தில் எடுத்திருப்பாரோ? இதே கதையை நந்தா ராசுகிரண், சேது விக்ரம், பிதாமகன் சூர்யா பாத்திரப்படைப்பில் அக்னி நட்சத்திரம் மாதிரி எடுத்திருந்தால் படம் கன்னா பின்னாவென்று ஓடியிருக்கும்.

விசாலின் நடிப்பு கொடுமையாக இருக்கிறது. பாலாவின் மீதுள்ள மதிப்புக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம். ஒரே மாதிரியான கதைகள், மனிதர்கள், காட்சியமைப்புகளில் பாலா சிக்கிக்கொண்டுள்ளார். படம் பார்க்கப் போபவர்களுக்கு ஒரு நற்செய்தி: இந்தப் படத்தில் விசால், ஆர்யா, அவர்கள் காதலிகள் யாரும் இறப்பதில்லை.

எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டு காத்திருந்து படத்தைப் பார்க்கும் கொடுமையை அனுபவிக்க முடியாமல் முதல் நாள் முதல் காட்சி ஐதராபாத் புறநகர் திரையரங்கு ஒன்றில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். அரங்கு நிறைந்து இருந்தது. ஆந்திரா மக்கள் எல்லா படங்களையும் இப்படி பார்க்கிறார்களா இல்லை விசாலுக்கு அவ்வளவு கூட்டமா தெரியவில்லை.

பாலா எடுத்த 5 படங்களில் இந்தப் படத்துக்கு 5ஆம் இடம் :)