உலகக் கோப்பை கிரிக்கெட்

ஒரு கிரிக்கெட் ரசிகனாக இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது மகிழ்ச்சி. ஆனால், ஊடகங்கள், அரசு துறைகள், அரசியல்வாதிகள், வணிகர்கள் முதலியோர் இந்தியாவின் ஆகச் சிறந்த சாதனை போல, இதனை தேசபக்தி இயக்கமாக மாற்றப் பார்ப்பது கடுப்படிக்கிறது. கிரிக்கெட்டுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் ஏன் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை என்று யோசிக்கத் தொடங்கினால், கிரிக்கெட்டுக்கும் தேச பக்திக்கும் உள்ள தொடர்பு என்ன என்று புலப்படும்.