அண்ணா அசாரே ஊழல் எதிர்ப்புப் போராட்டம்
இன்று , அண்ணா அசாரேயின் உண்ணா நோன்பை ஆதரித்து மெழுகுவர்த்தி வெளிச்ச ஊர்வலம் என்று கூப்பிட்டார்கள். எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. இந்தக் காலத்தில் உண்ணா நோன்புப் போராட்டம் என்பது உண்மையாளர்களின் உயிரையும் உடல்நலத்தையும் காவு வாங்குவதில் தான் போய் முடியும். எகிப்து போல இங்கு மக்கள் புரட்சி வராதா என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு மேல் பொறுக்க முடியாது, இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சமூகம் முழுக்க கொடுங்கோலாட்சியின் பாதிப்புகள் தெரியும் வரை பரவலான ஒரு மக்கள் போராட்டம் என்பதும் அதன் வெற்றி என்பதும் சாத்தியப்படாது என்று நினைக்கிறேன்.
Hari 10:47 am on April 8, 2011 Permalink |
There is no sound or excitement in Tamilnadu about Anna Hazare’s fasting. May be people knew where it will end.
If we benefit from an act which became possible by corruption, does it mean we support corruption. For e.g if a hotel paid bribe to start a business, does patronising that hotel means we support corruption?
ரவி 5:16 pm on April 8, 2011 Permalink |
ஊழல் வேறு இலஞ்சம் வேறு.
ஒரு திட்டத்துக்கு ஒதுக்கப்படும் பணத்தில் ஒரு பகுதியைச் சுருட்டுவது ஊழல்.
பணமே தேவைப்படாத ஒரு பணிக்குப் பணம் கொடுத்து முடிக்கச் செய்வதும், தன்னிடம் உள்ள குறையை மறைக்க பணம் தருவதும் இலஞ்சம்.
நாடு இப்ப இருக்கிற நிலைமையில் ஏதாவது ஒரு வகையில் எங்காவது இலஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு பெரிய தொழிலும் நகராது என்று நினைக்கிறேன்.
தவறுகளை மறைக்க இலஞ்சம் தரும் நிறுவனங்களைப் புறக்கணிப்பது வேண்டுமானால் நடைமுறையில் சாத்தியம் ஆகலாம். எடுத்துக்காட்டுக்கு, மாசு உண்டாக்கும் ஆலைகளின் பொருட்கள்.