நேரத்தின் விலை

நம் நேரத்தின் மதிப்பு என்ன? இன்னும் சில நாட்கள் தான் உயிர் வாழ்வோம் என்றால் அதற்கு என்ன விலை தருவோம்? நமக்குப் பிடித்த ஒருவர் அருகில் இருக்க, நமக்குப் பிடித்த ஒன்றைச் செய்ய கடைசியாக ஒரு சில மணி நேரம் தான் கிடைக்கும் என்றால் அதற்கு என்ன விலை தருவோம்?

***

வாரம் ஐந்து நாட்கள், நாளுக்கு 8 மணி நேரமாவது பயன் தரும் வேலை. முழு நேரமும் வேலை பார்த்துக் கொண்டே இருந்தால் ஆலைத் தொழிலாளியாகவே தொடர முடியும். எனவே கற்றல், சோதனை, ஆக்கம் என்பதற்குப் பாதி நேரம் ஒதுக்கினால் ஒரு நாளைக்கு 4 மணி நேரமே மிஞ்சும். ஒரு விருப்பப் பணியில் ( freelance work ) 4 மணி நேரம் வேலை பார்த்தாலும் குறைந்தது 2 மணி நேரம் அளவே வாடிக்கையாளருக்குக் கட்டணம் கூற முடியும் என்று கொள்வோம். ஆக, 4 வாரம் *5 நாட்கள் *2 மணி நேரம் = மாதம் 40 மணி நேரமே கட்டணம் பெறக்கூடியவை.

மணி நேரக்கட்டணம் =

((மாதம் தேவைப்படும் அல்லது ஈட்ட நினைக்கும் தொகை) + பணி தொடர்புடைய செலவு + பிற முதலீடுகள் + வரி) / 40 மணி நேரம்.

எடுத்துக்காட்டுக்கு, செலவுகள் + தேவைப்படும் தொகை = ஒரு இலட்சம் ரூபாய் என்றால் ஒரு மணி நேரப் பணியின் மதிப்பு 2,500 ரூபாய் !