நந்தலாலா

நந்தலாலா பார்த்தேன். இது போன்ற மாறுபட்ட படத்தைத் தயாரிக்கத் துணிந்த ஐங்கரன் நிறுவனம் பாராட்டுக்குரியது. படத்தின் துவக்கத்தில் பெயர் வரும் நீரோட்டக் காட்சியும், கடைசியல் மலைப்பாம்பு வரும் காட்சியும் அருமை. மற்றபடி, படம் பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. கொஞ்சம் மாறுபட்டு எடுத்தாலும் “ஆகா உலகப்படம், தமிழ்த்திரையின் முதல் படம்” என்ற வகை விமர்சனங்கள் எல்லாம் “காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு” வகை தான். இளையராசா ஒரே பின்னணி இசையை பல ஆண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கிறார். குழப்பமான, முரணான பாத்திரப்படைப்பு. ஆழம் இல்லாம நிகழ்வுகள். அன்னைவயல், தாய்வாசல் போன்ற சிறுபிள்ளைத் தனமான பெயரிடல்கள். கதை எந்த ஊரில் நடக்கிறது என்ற தெளிவின்மை. மசாலாத்தனமான, தமிழ்த் திரை இலக்கணம் மீறாத முடிவு. சப்பானியப் படத்தின் தூண்டுதலில் எடுத்தும் நன்றி தெரிவிக்காதது மிகப் பெரிய நேர்மையின்மை. எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் ஒரு முறை பார்க்கலாம்.