இணையச் சண்டைகள்
2006 முதல் இணையத்தில் பல இடங்களிலும் சண்டை போட்டுக் கற்றது:
1. நிரந்ததர எதிரி இல்லை. சிலரோடு வேறு களங்களில் பல கடுமையான சண்டைகள் போட்ட பிறகு, அதே நண்பர்களோடு இன்னும் பெரிய பொது நன்மைக்காக சேர்ந்து பணியாற்ற வேண்டி வந்தது. எனவே, சொற்களை அலந்து கொட்டுவதும், தனிப்பட்ட பகையாக வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும் நல்லது.
2. இணையத்தில் பேசும் விசயத்தை தொலைப்பேசியிலோ, தனி மடலிலோ பேசிக் கொண்டால் காட்டம் குறையும். சண்டையும் சீக்கிரம் முடிவுக்கு வரும். நான்கு பேர் கவனிக்கிறார்கள் என்பதே உசுப்பேத்தி விடும். உசுப்பேத்துவதற்கு என்றே நிறைய பேரும் இருக்கிறார்கள்.
3. கருத்தைத் தாண்டி தனி நபர் தாக்குதலில் இறங்குபவர்களை மொத்தமாக புறக்கணிப்பது நல்லது.
4. மிகவும் உளைச்சலாக இருந்தால், கணினியை விட்டு எங்காவது ஓரிரு நாட்கள் போய் வரலாம். சிறு ஓய்வு கூட நிதானம் தரும்.
5. உத்துப் பார்த்துக் கொண்டே இருந்தால் சிறு விசயம் கூட பெரிதாகத் தெரியும். நான் கடுமையாக சண்டை போட்ட பல விசயங்களை நினைத்துப் பார்த்தால் எனக்கே இப்போது சிரிப்பாக வருகிறது.
புருனோ 11:57 pm on October 22, 2010 Permalink |
ரவி
கருத்தினால் (கருத்து வேறுபாட்டினால்) சண்டை போட்டு ஒருவருடன் மனக்கசப்பு வருவது என்பது ஒரு பக்கம்
உங்கள் அறிவுரைகள் அதற்கு தான் அதிகம் பொருந்துகிறது
–
ஏதோ ஒரு விஷயத்தால் (முக்கியமாக உங்களின் வெற்றி / ஆளுமை / உங்களுக்கு வரும் மறுமொழிகள்) உங்களை பிடிக்காதவர்கள் வம்பிழுத்தால் 2 கருத்து பலன் தராது
–
இது என் கருத்து
ரவி 2:34 pm on October 27, 2010 Permalink |
ஆமாம், தனிப்பட்ட காரணங்களுக்குச் சண்டை போட்ட அனுபவம் இல்லை
குறிப்பு 3 பார்க்க