Inception

Inception பார்த்தேன். கல்லூரி நுழைவுத் தேர்வுக்குப் பிறகு இவ்வளவு உன்னிப்பாக ஒரு விசயத்தைச் செய்தது இல்லை :) படம் மொத்தமே கனவுக்குள் கனவுக்குள் கனவு என்று போய்க் கொண்டே இருப்பதால் கொஞ்சம் அசந்தாலும் எது கனவு எது நினைவு என்று புரியாமல் போய் விடும். படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்பு வரும் அனைத்தும் லியனார்டோ சாதாரண மனிதர்களைப் போல் காணும் ஒரு விந்தையான கனவு என்பது தான் எனக்குப் புரிந்தது :) திரையரங்குக்குள் இருக்கும் மலைப்பு வெளியே வந்ததும் காணாமல் போய் விடுகிறது. லியனார்டோவின் முந்தைய படமான shutter islandக்கும் இதற்கும் கூட சில ஒற்றுமைகள் இருக்கின்றன. திரையரங்கில் ஆங்கிலத்திலேயே உரைத் துணை போட்டதும் நன்றாக இருந்தது. ஒரு முறை பார்க்கலாம்.