1 ரூபாய் = 1 பைசா
அப்பப்ப தென்படும் குறுஞ்செய்தி ஒன்று இன்று மீண்டும் மண்டை காய வைத்தது.
1 ரூபாய் = 100 பைசா = 10 பைசா X 10 பைசா = 0.1 ரூபாய் X 0.1 ரூபாய் = 0.01 ரூபாய் = 1 பைசா
1 ரூபாய் = 1 பைசா
இந்த நிறுவலில் எங்கு தவறு என்று கண்டுபிடிக்க முடிகிறதா?
Anonymous 6:22 am on July 29, 2010 Permalink |
0.1 ரூபாய் x 0.1 ரூபாய் என பெருக்கும் கான்சப்டே கிடையாது. அப்படியே பெருக்கினாலும் அது 0.01 ரூபாய் squared என்றுதான் உச்சரிக்க இயலும்.
ஆனால் வகுக்க இயலும்.
10 ரூபாயை இரண்டு ரூபாயால் வகுத்தால் விடை ஐந்துதான், ஐந்து ரூபாய் அல்ல. ஏனெனில் ரூபாய் கேன்சல் ஆகிவிடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கார்த்திக் 10:35 am on July 29, 2010 Permalink |
10^2 = 100 but 0.1^2 is not 10
புருனோ 6:54 am on July 31, 2010 Permalink |
1 ரூபாய் = 100 பைசா = 10 பைசா X 10 = 0.1 ரூபாய் X 10 = 1 ரூபாய்
ரூபாய் = ரூபாய் x ரூபாய் என்று வராது :
ருபாய் x ருபாய் = ருபாய்^2
–
இப்படியே யூனிட்களை கணக்கெடுக்காவிட்டால் 1 மீட்டர் = 1 செ.மீ என்று கூட நிருபிக்கலாம்
1 m = 100 cm = 10 cm x 10 cm (ஹாங்… இங்க தான் பிரச்சனை !!!) = 0.1m x 0.1m = 0.01 m (இப்படி வராதே… 0.01m^2 என்றல்லவா வரவேண்டும் ) = 1 cm
எப்படி cm (length) x cm (length) = cm^2 (area வோ) அதே போல் rsxrs என்றால் அது rs ^ 2
ரவி 4:16 pm on August 3, 2010 Permalink |
புருனோ, டோண்டு: உங்கள் இருவரும் விடைகளும் சரி