Nokia 2730 Classic
மயூரேசனின் பரிந்துரையில் Nokia 2370 Classic வாங்கினேன். தானாகவே இணையம், குறுஞ்செய்தியில் தமிழைக் காண, எழுத இயல்வது மகிழ்ச்சி. தமிழ் ஆதரவு இருந்தால் தான் வாங்குவேன் என்று ஒற்றைக் காலில் நின்றதில் கடைக்காரர் மண்டை காய்ந்து விட்டார்
பிறகு, அருகில் உள்ள Nokia care போய் இலவசமாக தமிழ் ஆதரவுள்ள மென்பொருளுக்கு இற்றைப்படுத்திக் கொண்டேன்.
mayooresan 11:37 pm on May 20, 2010 Permalink |
ஹி…ஹி.. பாவம் கடைக்காரர். எனக்கு இயல்பிருப்பாக தமிழ் இருந்தது தொலைபேசியில். நொக்கியா கேயாரில் மற்றய ஆதரவற்ற தொலைபேசிகளிலும் தமிழ் ஆதரவு பெற வழி சமைக்க முடியுமா???
ரவி 1:34 pm on May 27, 2010 Permalink |
இலங்கையில் சிங்களமும் தமிழும் மட்டும் தான் என்பதால் இயல்பிருப்பாக இருந்திருக்கலாம். இங்கு இந்தி, தெலுங்கு, மராத்தி போல சில மொழிகளை மட்டும் இட்டு வைத்திருந்தார்கள். ஒரு சில கருவிகளில் மட்டும் தான் தமிழ் போட்டு அனுப்புவார்களாம். அதுவும் இந்த வகை பேசிக்கு இல்லை. ஏற்கனவே ஏதேனும் ஒரு இந்திய மொழிக்கு ஆதரவு இருந்தால் தமிழ் ஆதரவும் போட்டுத் தருவோம் என்று கடையில் இருந்த பெண் கூறினாள். சீனா, பிற நாடுகளில் உற்பத்தியான நோக்கியா பேசிகளைத் தந்துச் சோதித்துப் பார்க்க வேண்டும்.