அண்மையில் ஒசாமு டெசுகா (Osamu Tezuka) எழுதிய புத்தா என்ற எட்டு பாகம் கொண்ட நூலை படித்தேன். எட்டு பாகம் என்றதும் முழிக்கவேண்டாம்
. அது ஒரு கிராஃபிக் நாவல். நம்மூர் மொழியில் காமிக்ஸ். ஆகையால் மின்னல் வேகத்தில் படித்துமுடிக்க முடிந்தது. அட்டகாசமான படைப்பு இது. புத்தர் பிறந்த காலகட்டத்தினை அருமையாக விவரித்து அவருடைய வளர்ச்சி, கொள்கைகளை மிக எளிதாக, ஒரு பள்ளி செல்லும் மாணக்கன் கூட புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட புத்தகம். காமிக்ஸ் மூலம் இலக்கியம் கூட படைக்கமுடியும் என்பதை இப்போது தான் தெரிந்துகொள்கிறேன். புத்தர் பற்றியும் பவுத்தம் பற்றியும் சிறுவர்களுக்கு (பெரியவர்களும் கூட தான்)அறிமுகம் செய்ய ஏற்ற புத்தகம் இது. கண்டிப்பாக must-read என்று கூறுவேன்.
-
சந்தோஷ் குரு
Reply
mayooresan 10:19 pm on June 2, 2010 Permalink |
எங்க வாங்கினீங்க??
சந்தோஷ் குரு 6:54 pm on June 3, 2010 Permalink |
http://flipkart.com ல் வாங்கினேன். http://ebay.in இன்னும் நல்ல குறைவான விலையில் கிடைக்கிறது.