அட்டகாசமான திரைப்படம் ஒன்று சமீபத்தில் பார்த்தேன், The girl with the dragon tattoo. கலக்கலாக இருந்தது. துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் தொய்வில்லாமல் சென்ற படம் இது. சுவீடன் சமூகத்தின் மீதான விம்ர்சனத்தை நம்மீது திணிக்காமல், அதன் பிரச்சினையினை ஒரு துப்பறியும் கதையின் வழியாகக் காட்டி அசத்தியது இந்த திரைக்கதையின் சிறப்பு. இந்த படத்தைப் பார்த்துவிட்டு Steig Larsson எழுதிய மற்ற நாவல்களின் திரையாக்கத்தினை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.