அங்காடித் தெரு
அங்காடித் தெரு பார்த்தேன். அருமை. தமிழ்த் திரையில் இருந்து உண்மையிலேயே ஒரு உலகத் திரைப்படம். Baran, எரியும் பனிக்காடு நினைவு வந்தது.
அங்காடித் தெரு பார்த்தேன். அருமை. தமிழ்த் திரையில் இருந்து உண்மையிலேயே ஒரு உலகத் திரைப்படம். Baran, எரியும் பனிக்காடு நினைவு வந்தது.
கார்த்திக் 10:40 pm on April 2, 2010 Permalink |
படம் அருமை. நம்ம சுத்தி உள்ளவங்களை பத்தி படம் எடுத்தா தான் படம், ஓடுங்கிறது நல்ல சூழல். ஆனா, tragedy இல்லாம இந்த மாதிரி படங்கள எடுக்கவே முடியாதா?
கார்த்திக் 10:45 pm on April 2, 2010 Permalink |
கடைசியா நான் பாத்த மூணு படங்களும் அகரத்தில் தொடங்குபவை
அபியும் நானும்
அவதார்
அங்காடி தெரு
ரவி 11:13 am on April 5, 2010 Permalink |
பரவால்லியே.. திரையரங்குக்கு எல்லாம் போய் படம் பார்க்கிற
அங்காடித் தெரு படம் முழுக்க கொஞ்சம் சோகம் கூடத் தான். பலருக்கும் தனித்தனியா நேரக்கூடிய சோகச் செய்திகளை ஒரே பாத்திரத்தின் மேல போட்டுட்டார். ஆனால், வேலை நிலவரத்தைப் பொறுத்த வரை, என் உறவினர்களிலேயே இப்படி கொத்தடிமையாக மாட்டிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்ள்
முதலிலேயே மொத்தமாகப் பணம் கொடுத்துக் கூட்டிப் போய் விடுவார்கள். அந்தக் கடனைக் கழிக்கும் வரை வேலையை விட முடியாது.
இறுதிக் காட்சி tragedyன்னு தோணல. படம் முழுக்க எல்லாரும் ஏதாச்சும் ஒரு காரணம் கிடைச்சா உறவுகளைக் கை கழுவ தயாரா இருக்காங்க. அதனால் அவங்க காதலின் வலுவைக் காட்ட இப்படி ஒரு முடிவு தேவை தான். திருமணம் முடிந்த அடுத்த நாள் கால் போயிருந்தா விட்டுப் போக முடியுமா என்ன?
kanummc 5:45 pm on April 5, 2010 Permalink |
இறுதிக் காட்சி tragedyன்னு தோணல. படம் முழுக்க எல்லாரும் ஏதாச்சும் ஒரு காரணம் கிடைச்சா உறவுகளைக் கை கழுவ தயாரா இருக்காங்க. அதனால் அவங்க காதலின் வலுவைக் காட்ட இப்படி ஒரு முடிவு தேவை தான். திருமணம் முடிந்த அடுத்த நாள் கால் போயிருந்தா விட்டுப் போக முடியுமா என்ன? what a positive thinking? nalla ennam unaku
புருனோ 12:38 am on April 6, 2010 Permalink |
இந்த படம் குறித்த என் கருத்துக்கள் அங்காடி தெரு பணியாளர்களும், அசிஸ்டெண்ட் டைரக்டர்களும், ஜூனியர் லாயர்களும் !!
mayooresan 12:03 am on April 8, 2010 Permalink |
திரைப்படம் பார்த்தேன். சமூகத்தில் இல்லாததைக் காட்டியதாக சில அறிவுஜீவிகள் பேசிக் கொண்டார்கள்.
ஜதார்த்தமான திரைப்படம் இரசித்தேன். திரையரங்கில் இருந்து வெளியே வரும் போது மனம் கனத்துப் போய் இருந்தது!