குழலி மாணிக்கவேல்
கடந்த இரண்டு நாட்களாக என் நண்பன் மூலம் (அவனுக்கு தெஹல்கா வழியாக) அறிமுகமான, குழலி மாணிக்கவேல் என்ற எழுத்தாளரின் எழுத்துக்கு அடிமையாகியிருக்கிறேன். வழக்கமான பாணி சிறுகதை அல்ல இவருடையது, இருந்தும் மறுபடி மறுபடி வாசிக்கவைக்கும் வசீகரம் கொண்டிருக்கிறது இவர் எழுத்து. இவருடைய இரு சிறுகதைகளும் (1,2), வலைப்பதிவு மட்டுமே எனக்கு அறிமுகம். ஆனால் கண்டிப்பாக இவருடைய முதல் சிறுகதை தொகுப்பினை படித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கேன்..
ரவி 10:02 pm on January 11, 2010 Permalink |
பேரிலேயே ஒரு ஈர்ப்பு இருக்கே ! இன்னும் ஆங்கிலச் சிறுகதைகள் படிக்கத் தொடங்கல. நல்லா புரியுற மாதிரி எழுதுற நாலு பேர் சொல்லுங்க
புருனோ 2:30 am on January 12, 2010 Permalink |
O.Henry
Conan Doyle
Jeffrey Archer
Fredrick Forysth
என்று ஆரம்பிக்கலாம்