ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பகுதி எனக்கு பிடித்திருந்தது. அனைவரும் பொன்னியின் செல்வன் தரும் படிமத்தை வைத்துக்கொண்டு சோழர்களை (செல்வாவின் பாணியில் ச்ச்சோளர்கள்
) இழிவுபடுத்திவிட்டனர் என்று காட்டுகத்தல் கத்திக்கொண்டு இருக்கின்றனர். கல்கி சோழர்களை, திரைப்பட இயக்குநர் விக்கிரமனின் படத்திலுள்ள நல்லவர்கள் போல படைக்க creative liberty இருக்கும் போது, செல்வா அவருடைய பாணியில் செய்தால் மட்டும் பொங்குவது எதற்காக?. நம் காலத்து தமிழ்த் தாத்தாவான சுஜாதா கூட கணையாழியின் கடைசிப்பக்கங்களில், சோழர்கள் பற்றிய நம் படிமம் சரியா என்று பல ஆண்டுகளுக்கு முன்னே எழுதியிருக்கிறார், Burton Stein என்பவரின் புத்தகத்தினை பற்றி விவரிக்கும் போது. நம் மனத்தில் உள்ள கற்பனையான சோழர் பிம்பத்தினை வேறு ஒருவர், தன் கற்பனையால் மாற்றினால், வெகுண்டு எழுபவர்களுக்கும் , சத்ரபதி சிவாஜி-வரலாற்று ஆய்வு-வன்முறை-கலகம் என்று இறங்கும் சிவசேனைகளுக்கும் என்ன வேறுபாடு?
-
சந்தோஷ் குரு
Reply
புருனோ 5:06 pm on January 25, 2010 Permalink |
சுஜாதாவின் நடுநிலைமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது !!
அதாவது அவர் எந்த நிலை என்பது அயோத்தியா மண்டபம் போன்ற கதைகளின் மூலம் தெளிவானது தானே
இந்த கட்டுரையிலும் கடைசிவரியில் அவர் என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்.
லெமூரியா சரடு !!
ஏன் இந்த அவசரம். இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார்
லெமூரியா என்பது உண்மையில்லை என்று வலிந்து நிருபிக்க அவருக்கு என்ன அவசரம்
என்ன ஆத்திரம்
புருனோ 5:10 pm on January 25, 2010 Permalink |
அடுத்தாக, சோழர்கள் ” விக்ரமன் பட நல்லவர்கள்” என்று கல்கியும் கூறியதில்லை, அகிலனும் கூறியதில்லை, பாலகுமாரனும் கூறியதில்லை.
சொல்லப்போனால் சோழர்களை பற்றி சுஜாதா கூட ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில் கூட அவர்களை விக்ரமன் பட நல்லவர்களாக காட்ட வில்லை
புருனோ 5:17 pm on January 25, 2010 Permalink |
தேவதை என்று ஒரு படம் வந்தது. அது கூட வரலாறும் சமகாலமும் சார்ந்த படம் தான்.. அதை யாரும் இந்த அளவு போட்டு தாக்க வில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
அருந்ததி என்று ஒரு படம் வந்தது..அது கூட பேண்டசி தான். முதுகெலும்பை வைத்து தான் கொல்ல முடியும் என்று கதை இருந்த போது கூட யாரும் லாஜிக் கேள்வி கேட்க வில்லை
ஆனால் இந்த படத்தை ஏன் போட்டு பிராண்டுகிறார்கள் என்றால், இங்கு ஒன்றுமே புரியவில்லை
புதை குழியை ஹெலிகாப்டர் வைத்து தாண்ட முடியாதா போன்ற கேள்விகளை வேண்டுமானால் பேண்டசி என்று ஒதுக்கி விடலாம். ஆனால் அதை விட பல அடிப்படை அபத்தங்கள் உள்ளன
முடிந்தால் யாராவது விளக்கவும்
1. ஆண்ட்ரியாவை ஏன் அழைக்கிறார்கள்
2. ரிமா ஏன் பார்த்திபனுடன் உடலுறவு வைக்க விரும்புகிறாள் (எப்படியும் படை வைத்து தானே அழிக்க போகிறார்கள்)
3. ஏன் மேஜர் ரவி மட்டும் சேட்டலைட் போன் வைத்துள்ளார். அனைவரும் ஆளுக்கொன்று வைத்திருக்கலாமே
இது போன்ற பல அபத்தங்கள் உள்ளன
சந்தோஷ் குரு 10:03 pm on January 25, 2010 Permalink |
// 1. ஆண்ட்ரியாவை ஏன் அழைக்கிறார்கள் // – ஏன்னா அவருக்குத்தான் அந்த பாண்டிய தளபதி எழுதிய குறிப்பினை interpret பண்ணும் திறமை உள்ளது.
// 2. ரிமா ஏன் பார்த்திபனுடன் உடலுறவு வைக்க விரும்புகிறாள் // – Why not? பார்த்திபனின் நம்பிக்கையினை பெறுவதற்காக இருக்கலாம் இல்லையா? 300 என்ற படத்தில் கன்னி ஒருத்தியை நிர்வாணமாக்கி, அவள் மூலம் வருங்காலத்தை பற்றி அறிவார்கள் Spartanஇன பெருசுகள். அப்போது ஏன் நிர்வாணம் என்று கேட்பதில்லை. ஏன் என்றால் அது ஒரு கற்பனையோ அல்லது எதோ ஒரு தொன்மமோ அல்லது ஒரு எழவோ.
3. சாட்டிலைட் போன் என்று explicitஆக சொல்லலையே. அவர் போன் (ஐபோன் போல உள்ளது) செய்கிறார், சாட்டிலைட்டினைக் காட்டுகின்றார்கள், simple GPSஆக கூட இருக்கலாமே. மற்ற மூவர், பாம்பினில் இருந்து தப்பிக்கும் போது எடுத்தவர மறந்துவிட்டார்களோ என்னவோ
புருனோ 5:56 am on January 26, 2010 Permalink |
ரிமா, பார்த்திபனின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு ராணுவம் மூலம் தான் போரிடுகிறார்கள்
அப்படி இருக்க ஏன் உடலுறவிற்கு அழைக்க வேண்டும்
வெறுமனே தூது என்று சொன்னால் போதுமே
புருனோ 5:18 pm on January 25, 2010 Permalink |
படம் வெளிவந்தபின்னர் இது தான் இந்த என் படத்தின் கதை என்று சமீபத்தில் எந்த இயக்குனராவது கூறியதாக நினைவுள்ளதா
–
அந்த அளவு ஜெர்க் அடிக்கும் திரைக்கதை இது
ரவி 5:24 pm on January 25, 2010 Permalink |
சோழர்களை எப்படி காட்டுகிறார்கள் என்பது எனக்குப் பிரச்சினை இல்லை. twist வைக்கிறேன் பேர்வழி என்று தொடர்பே இல்லாமல் இருக்கும் இரண்டாம் பாதி, இரண்டாம் பாதியின் சொதப்பலான திரைக்கதை, கதைக்குத் தேவையில்லாத வன்முறை / காமம் தான் எரிச்சல் அடைய வைத்தது.
சோழர்கள் – பாண்டியர்கள் – கார்த்தி என்று எவர் பக்கமும் மனம் சாயாமல் போனதே இயக்குநரின் தோல்வி.
முதல் 20 நிமிடத்தில் சோழர்களை அறிமுகம் செய்து, கார்த்தியை அவர்கள் அணியில் சேர்த்து, சோழர்களை வளமானவர்களாகவும் காட்டி இருந்தால் படம் ஓடி இருக்கும். The Last Samurai போல. எப்படி வேண்டிமானாலும் எடுக்க செல்வாவுக்கு உரிமை உண்டு. ஆனால், எதை எடுத்தாலும் ஒழுங்கா எடுத்தா தான் படம் ஓடும்
புருனோ 6:29 pm on January 25, 2010 Permalink |
//. எப்படி வேண்டிமானாலும் எடுக்க செல்வாவுக்கு உரிமை உண்டு. ஆனால், எதை எடுத்தாலும் ஒழுங்கா எடுத்தா தான் படம் ஓடும்//
கண்ணாபின்னாவென்று வழிமொழிகிறேன்
படம் வெளிவந்தபின்னர் இது தான் இந்த என் படத்தின் கதை என்று சமீபத்தில் எந்த இயக்குனராவது கூறியதாக நினைவுள்ளதா
அது தான் செல்வராகவன் தன் படத்திற்கு தானே தந்த விமர்சணம் !!!