தமிழரும் திரைப்படங்களும்

எந்த தமிழ் நண்பருக்கு அழைத்தாலும் என்ன படம் பார்த்தேன்னு கேட்காமல் பேச்சு முடிவதில்லை. (வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் கூட இப்படி பேசியதில்லை!) வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அதை இடம் சுட்டி பொருள் விளக்க ஏதாவது ஒரு தமிழ்த் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. திரைப்படம் தான் தற்காலத் தமிழனின் “இலக்கியமோ”?!