உன்னைப்போல் ஒருவன் பார்த்தேன் என் கருத்…
உன்னைப்போல் ஒருவன் பார்த்தேன்
என் கருத்துக்கள்
மிகச்சிறந்த இந்துத்வா பிரச்சார படம்
எப்படி அன்பே சிவம் பொதுவுடமை பிரச்சார படமோ அது போல் இது இந்துத்வா பிரச்சார படம்
இரா.முருகன் தனது வேலையை தெளிவாகவே செய்துள்ளார். வாழ்த்துக்கள்
–
பொதுவுடமை படம் எடுப்பதற்கு கமலுக்கு இருக்கும் உரிமை இந்துத்வா படம் எடுப்பதற்கும் உள்ளது. இதற்காக கமலை குற்றவாளியாக்குவது முதிர்ச்சியின்மை
அதே நேரம் ஏற்கனவே அவர் பொதுவுடமை படம் எடுத்துள்ளதால் இந்த படம் இந்துத்வா படம் இல்லை என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம்
இந்த விஷயத்தில் பலர் முதிர்ச்சி யில்லாமலும், வேறு பலர் சிறுபிள்ளைத்தனமாகவும் எழுதுகிறார்கள் என்பது என் கருத்து
–
manikandan 4:35 am on October 9, 2009 Permalink |
அப்ப அன்பே சிவம் கிறித்துவ மிஷனரி பிரசார படம் இல்லையா ?
-
புருனோ 7:04 am on October 10, 2009 Permalink |
அது பொதுவுடமை படம் என்பது எனது கருத்து. அது கிறித்துவ மிஷனரி பிரசார படம் என்று நீங்கள் கருத உங்களுக்கு முழு உரிமை உள்ளது
அது கிருத்துவ மிஷனரி பிரச்சார படம் என்று நீங்கள் கருதும் பட்சத்தில் கூட இந்துத்வா படம் எடுப்பதற்கு கமலுக்கு இருக்கும் உரிமை படம் கிருத்துவ படம் எடுப்பதற்கும் உள்ளது.
இதற்காக கமலை குற்றவாளியாக்குவது முதிர்ச்சியின்மை
அதே நேரம் அவர் உன்னைப்போல் போல் ஒருவன் எடுத்துள்ள ஒரே காரணத்தால் அன்பே சிவம் கிருத்துவ படம் இல்லை என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம்
கார்த்திக் 9:07 am on October 10, 2009 Permalink |
ஒண்ணும் புரியல. கமல் பேட்டி படிச்சாப்ல இருக்கு
manikandan 8:40 pm on October 10, 2009 Permalink |
கார்த்திக், ரொம்ப நாள் ஆச்சு ப்ருனோவும் நானும் இப்படி பேசி
- நீங்க லூஸ்ல விடுங்க.
புருனோ 8:47 pm on October 10, 2009 Permalink
சரி உங்களுக்கு புரிந்ததா… புரியவில்லை என்றால் மூக்கில் குத்தி விடாதீர்கள் !!
manikandan 9:03 pm on October 10, 2009 Permalink
ப்ருனோ, நீங்கள் செய்தி / கருத்து போன்றவைகளுக்கான வித்தியாசத்தை மறுபடியும் சொன்னால் தான் இந்த ஆட்டம் முடிவடையும்.
-
(கமலுக்கு எதையும் சொல்லும் உரிமை இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை வைத்து விமர்சனம் செய்யும் உரிமையும் அனைவருக்கும் இருக்கிறது
- கமல் மட்டும் அல்ல. அனைத்திலும் இதுவே பொது..)
நானே பயத்தில் இருக்கிறேன். உன்னைப்போல்ஒருவன் வாதத்தில் கலந்து கொண்டதால்
-
விமர்சனங்கள் குறித்தான எனது கருத்து http://thodar.blogspot.com/2009/09/blog-post_24.html
புருனோ 5:48 am on October 15, 2009 Permalink
//(கமலுக்கு எதையும் சொல்லும் உரிமை இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை வைத்து விமர்சனம் செய்யும் உரிமையும் அனைவருக்கும் இருக்கிறது – கமல் மட்டும் அல்ல. அனைத்திலும் இதுவே பொது..)
//
வழிமொழிகிறேன்