கல்வி வணிகம்

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் “Pre-KG interview” விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி முதல்வராக நடிப்பவள் தங்கள் பள்ளி நீச்சல், மொழி வகுப்புகள், மற்ற பல வசதிகள் செய்து தருவதால் ஆண்டுக்கு எத்தனை ஆயிரம் கூடுதல் கட்டணம், முன்பணமாக சில இலட்சம் கட்ட வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருக்கிறாள்.

கொஞ்ச நாள் முன்பு “மானாட மயிலாட” விளையாட்டில் ஒருத்தி Namitha Mamஆக நடித்துக் கொண்டிருந்தாள்.

**
எனக்கு சிறு வயதில் கொட்டாங்குச்சி வைத்து அண்ணாச்சி கடை விளையாட்டு விளையாடியது நினைவில் வந்து சென்றது.