ஈறு கெட்ட எதிர் மறை பெயரெச்சம்
ஈறு கெட்ட எதிர் மறை பெயரெச்சம் பற்றி யாராவது விளக்க முடியுமா?
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் “நெல் ஆடிய நிலம் எங்கே?” என்ற பாட்டை கேட்டதால் இதை பற்றி அறிந்து கொள்ள விழைகிறேன்.
நெட்டில் தேடினால் இந்த பதிவு மட்டும் கிட்டியது
சந்தோஷ் குரு 11:09 am on October 8, 2009 Permalink |
பெயரெச்சம்- உண்ட குதிரை
எதிர்மறை(Opposite)-உண்ணாத குதிரை
ஈறு கெட்ட – கடைசி எழுத்து போன
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்- உண்ணா குதிரை
நன்றி: http://tamilkkalvi.blogspot.com/2008/01/blog-post_08.html
கார்த்திக் 1:36 pm on October 8, 2009 Permalink |
நன்றி.
நான் கூகுளில் ஈறு கெட்ட எதிர் மறை பெயரெச்சம் தேடினேன், ஒன்றும் சிக்க வில்லை. ஆனால் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று தேடினால் நிறைய வருகிறது. ஒரு விக்கி பக்கம் கூட உள்ளது
ரவி 2:00 pm on October 8, 2009 Permalink |
இந்தப் பாட்டுக்கும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்துக்கும் என்ன தொடர்பு?
பாடல் வரிகள் – http://thenkinnam.blogspot.com/2009/07/blog-post_7370.html
கார்த்திக் 2:24 pm on October 8, 2009 Permalink |
பாட்டின் தொடக்கத்தில் இப்படி வருகிறது:
பாடுவீரோ தேவரே ? பரணி, கலம்பகம், உலா ஏதேனும்? ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமேனும் அறிவீரோ? (சிரிப்பு)
பிறகு தான் பாடல் தொடக்கம். பாடல் ஒரு தாக்கத்தை தருகிறது. படம் பற்றிய எதிர்ப் பார்ப்பை கூட்டுகிறது.
கார்த்திக் 2:28 pm on October 8, 2009 Permalink |
நான் குறிப்பிட்ட பாடல் விசய் ஜேசுதாசு மற்றும் நித்தியசிறி பாடியது
TBCD 6:02 pm on January 16, 2010 Permalink |
http://twitter.com/TBCD/status/7826424411
நெல்லாடிய பாடலில் வரும் “ஈறுகெட்ட பெயரெச்சமறிவீரோ” என்று கேட்பது, தமிழ் கற்றியிருக்கின்றீர்களா என்ற தொனியில் கேட்கப்படுவது
#1001
ஆஷ் 6:45 am on January 18, 2010 Permalink |
ஐயா நண்பரே,
http://bit.ly/5wQJ8t
http://www.pudhucherry.com/pages/gram6.html