• சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்டதினால் “ஆன் லைனில் “ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ். பிளீஸ் என்று தொலைபேசியிலேயே தொடர்ந்துக் கேட்டு கொண்டிருந்தார்
  • —————-
  • ” முதல் மரியாதை” படம் எனது ” கவுண்டர் கிளப் ” குறுநாவலன் மையத்தை ஒத்திருந்தது
  • —————–
  • கோவையில் ஒரு விழாவிற்கு வந்த நடிகை ரேவதியிடம் அந்த ஒளிப்பதிவாளர் என்னை அறிமுகப்படுத்திய போது பட்டு திரைக்கதையை எழுதியவன் என்றார் .ரேவதியும் அதை எடுக்கலாமே. எனக்கு தாருங்கள் என்றார். ஒளிப்பதிவாளர் அதை தான் தொடரப்போவதாக சொன்னார்.
  • —————
  • சென்ற‌ டிச‌ம்ப‌ரில் திருவ‌ன‌ந்த‌புர‌த்திற்கு சென்ற‌ போது காஞ்சீவ‌ரம் திரையிடல் இருப்பது திகில் அனுபவமாக இருந்தது.திரையிடப்பட்ட அன்று‌ பார்த்தேன். அதிர்ச்சியாக‌ இருந்தது….. நான் எழுதிய திரைக்கதை பலரிடம் பரிசீலனைக்காக சென்றதை ஒளிப்பதிவாளர் சொன்னது ஞாபகம் வந்தது.

  • Source: http://rpsubrabharathimanian.blogspot.com/

    நாலு வரி, காப்பி பேசுட் பண்ணிய எனக்கே “Source” என்று தொடுப்பு வைக்க தோன்றும் போது, இப்படி ஒரு நாவலையே அடித்து பணம், புகழ் சம்பாதிப்பவர்களுக்கு மூலக்கதை படைத்தவருக்கு ஒரு நன்றி சொல்ல கூடவா முடியவில்லை?