ராமு : ஏண்டா அந்த மருந்து கடைக்காரரை எல்…

ராமு : ஏண்டா அந்த மருந்து கடைக்காரரை எல்லாரும் போட்டு கும்முறாங்க

சோமு : அவர் என்ன மருந்து வித்தாலும் சூப்பரா இருக்குடா. பாராசிட்டமாலும் சூப்பரா இருக்கும், அமாக்சியும் சூப்பரா இருக்கு, சயனைடும் சூப்பரா இருக்கு,

ராமு : இதுல என்னடா பிரச்சனை

சோமு : ஆனா என்ன, என்ன மருந்துன்னு லேபிளில இருக்காது, கொஞ்சம் சாப்பிட்டு தான் தெரிஞ்சுக்கனும்

ராமு : இப்ப வித்துட்டிருக்கிறது என்ன

சோமு : நான் சாப்பிட்டு பாக்கல, ஆனா எல்லாரும் சொல்றத வைச்சு பாத்த, சயனைட் போலிருக்கு. அதான் இந்த அளவு அடி விழுகுது…

ராமு : சயனைட் விக்குறது தப்பா ??

சோமு : நிறைய பேர் சயனை விக்கிறாங்க…. ஆனா அதெல்லாம் நல்லா இல்ல…. இங்க சயனைட் நல்லா இருக்கிறது தான் பிரச்சனைன்னு நினைக்கிறேன். அது தவிர..

ராமு : அது தவிர

சோமு : இவர் வாழைப்பழத்துக்கு நடுவுல சயனைட் வைச்சு விக்காருன்னு வேற சொல்றாங்க…..

ராமு : ??

Related posts