பெங்களூரில் நடக்கும் பிள்ளையார் சதுர்த்த…
பெங்களூரில் நடக்கும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்கள் எனக்கு எப்போதுமே அந்நியமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் கொழுக்கட்டை, விடுமுறை என்று வீட்டிலே கொண்டாடிவிட்டு இங்கே பந்தல், பண வசூல், தோட்டாதரணி செட் போன்ற தற்காலிக கோவில்கள் என்று இருப்பதை பார்த்தால் விந்தையாக உள்ளது. இது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை
ரவி 4:34 am on August 24, 2009 Permalink |
பிள்ளையார் பிறந்த நாள் உட்பட பல திருநாள்களைத் தமிழர்கள் கொண்டாடும் விதத்தில் ஏற்கனவே அண்டை மாநில, வட நாட்டுத் தாக்கம் நிறைய வரத் தொடங்கி விட்டது. முக்கிய காரணம் செயற்கைக்கோள் தொலைக்காட்சி. உண்மையில், இதன் வரவுக்குப் பிறகு எல்லா கொண்டாட்டங்களுமே “முழு நாள் தொலைக்காட்சி காணும் விடுமுறை” நாட்களாக மாறி வருகின்றன