இரண்டாவது கற்பனை கதை
இரண்டாவது கற்பனை கதை
அது ஒரு சிறு கிராமம்
அங்குள்ள மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கும் அருகில் உள்ள நகரங்களுக்கு செல்வதற்கும் பல வருடங்களாக நடந்தே சென்று வந்தனர்.
அதன் பிற்கு மாட்டுவண்டியும், குதிரை வண்டியும் வந்தது
பிறகு மிதிவண்டி, TVS 50, Spendour, அவசரத்திற்கு டாக்ஸி என்று வந்த காலக்கட்டதில் அந்த ஊருக்கு பேருந்து சேவை (பஸ் சர்வீஸ்) வந்தது
அதை ஆரம்பித்தவர் ஜிம்மி என்பதால் அதை நாம் ஜிம்மி பஸ் என்றே அழைப்போம்
ஆரம்பத்தில் யாரும் ஜிம்மி பஸ்ஸை கண்டுகொள்ளவில்லை.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக அதில் பலரும் ஏறி செல்ல ஆரம்பித்தார்கள்
அந்த பேரூந்தை பயன்படுத்து ஆட்கள் கூட கூட அந்த பேருந்தில் விதிகள் உருவாக்கப்பட்டன. அதில் பல விதிகளை உருவாக்கியவர்கள் ஏற்கனவே அதில் செல்லபவர்கள்தான்
அந்த பேரூந்தில் நெடுநாட்களாக செல்பவர்கள் மற்றும் அடிக்கடி செல்பவர்கள் தங்களுக்கு என்று சிறப்பு வசதிகளை உருவாக்கி கொண்டனர்
உதாரணமாக சில இடங்களில் “துண்டு போட” ஆரம்பித்தனர். அதாவது நீங்களோ நானோ ஜிம்மி பஸ்ஸில் முதலில் ஏறினாலும் அந்த இடத்தில் உட்கார முடியாது. அப்படியான சிறப்பு சலுகைகள் அடிக்கடி பயணிப்பவர்கள் மற்றும் முதலிருந்தே பயணிப்பவர்களுக்கு வழங்கப்பட்டன
அந்த அடிக்கடி பயனிப்பவர்களிலேயே மிகவும் அதிகம் முறை பயணிப்பவர்களுக்கு மேலும் சில சலுகைகள் உருவாக்கப்பட்டன. ஆதாவது அவர்கள் பேரூந்து நிலையத்திற்கே வரவேண்டாம் அவர்களது வீட்டு வாசலிலேயே பேருந்து நிற்கும் ஏறிக்கொள்ளலாம்
அதே போல் நகரிலும் அவர்களது அலுவலகத்திற்கு முன்னாலேயே இறங்கிக்கொள்ளலாம்
ஆனால் சாதாரண பயணிகளோ பேரூந்தி நிலையத்தில் தான் வந்து ஏற வேண்டும். பேருந்து நிலையத்தில் தான் வந்து இறங்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் ஏறினாலும் துண்டு போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர முடியாது. நின்று கொண்டு தான் செல்லுமிடம் கடைசி வரை பிரயாணம் செய்ய வேண்டும் ஆனால் சலுகை உள்ளவர்களோ கடைசி நேரத்தில் வந்தாலும் “ராயலாக” அமர்ந்து கொள்ளலாம்
முதலில் ஒரிரு முறையே ஜிம்மி பஸ்ஸில் சென்றவர்கள் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவர்களும் அடிக்கடி பயணம் செய்ய ஆரம்பிக்கவும், இது போல் சிலருக்கு தனி சலுகை வழங்கப்படுவதை கண்டு மனதிற்குள் குமுறினார்கள்
அதன் பிறகு தான் அவர்களுக்கே ஒரு விஷயம் புரிந்தது. 40 – 50 பேர் ஏறினால் தான் இந்த பேருந்து தொடர்ந்து ஓடும். அதாவது இந்த பேரூந்து சேவை தொடர்ந்து நடப்பதற்கு அனைவரின் பங்களிப்பும் தேவை. மற்றவர்கள் பயன் படுத்த வில்லை என்றால் பேரூந்து நிர்வாகம் அந்த சேவையை இழுத்து மூடி விட்டு சென்று விடும். இந்த நிலையில் ஒரு சிலர் மட்டும் முதலிலேயே பயணம் செய்தனர் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு அளவிற்கு அதிகமான சலுகைகளை அனுபவிப்பது ஏன், அது நியாயமா என்ற கேள்விகள் எழுந்தன.
அந்த நேரம் தான் அந்த ஊரில் உள்ள களத்துமேட்டுக்காரர் “ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள ஜிம்மி பஸ்ஸை ஏன் நான் ஆதரிப்பதில்லை” என்றூ ஒரு பிரச்சனையை கிளப்பினார்
–தொடரும்
பின்குறிப்பு : மற்றொரு கற்பனை கதை http://www.ularal.com/ஒரு-கற்பனை-கதை/ உள்ளது
K.S.Nagarajan 5:45 am on June 27, 2009 Permalink |
ஆமாம் சார்.. சுவிசங்கர்னு ஒருத்தன் ஒரு பெரிய துண்டை போட்டுட்டு.. பஸ்’னு சொல்லக்கூடாது.. இதை பசு’ன்னுதான் சொல்லணும்னு ரொம்போ படுத்துறான் சார்.. கொஞ்சம் கவனிங்களேன்!
யாத்ரீகன் 6:03 am on June 27, 2009 Permalink |
டாக்டர், நீங்கள் சொல்ல வந்ததை விளக்க எடுத்துக்கொள்ளும் முறை எப்பவும் அருமை.. மேலும் தொடர்வதற்கு காத்திருக்கிறேன்
புருனோ 11:24 am on June 27, 2009 Permalink |
தல பாராட்டுக்கு நன்றி
அடுத்த பாகம் எப்படி என்று இனிதான் தெரியும்
Pot"tea"kadai 2:00 am on June 28, 2009 Permalink |
//அந்த நேரம் தான் அந்த ஊரில் உள்ள களத்துமேட்டுக்காரர் “ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள ஜிம்மி பஸ்ஸை ஏன் நான் ஆதரிப்பதில்லை” என்றூ ஒரு பிரச்சனையை கிளப்பினார்//
மருத்துவரய்யா, கரீட்டா பாயிண்டுக்கு வந்துட்டீங்க!!!
ஆரம்பத்துல இந்த கதய ரீஜண்டா எங்கியோ பட்ச்சா மாரிக்கீதேன்னு ரோசன பண்ணேன். கட்ச்சியா அம்டுக்கிச்சி.
good stuff hey…
புருனோ 2:18 am on June 28, 2009 Permalink |
உரையாடல் போட்டிக்கு இந்த் கதையெல்லாம் அனுப்பலாமா
ரவி 11:38 am on September 28, 2009 Permalink |
தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்