http://twitter.com/rajamanohar/status/23…
http://twitter.com/rajamanohar/status/2327921983
@spinesurgeon one question. what is the impact of globalization on healthcare sector? positive or negative ?
http://twitter.com/rajamanohar/status/2327921983
@spinesurgeon one question. what is the impact of globalization on healthcare sector? positive or negative ?
புருனோ 9:52 am on June 25, 2009 Permalink |
My Reply
Globalisation in Health Care – Positive for Hospital Owners, Pharmacy, Diag Equip Manufactures and Negative for patients
யாத்ரீகன் 5:49 pm on June 25, 2009 Permalink |
ரவி 9:35 pm on June 25, 2009 Permalink |
மருத்துவர்களுக்கு நன்மையா தீமையா?
அப்புறம், கல்வி, வேளாண்மை, உணவுத் துறையிலும் இதே போல் உலகமயமாக்கம் மக்களுக்குத் தீமையாய் முடியும் அல்லவா? வேறு என்னென்ன துறைகள்?
புருனோ 11:07 pm on June 25, 2009 Permalink |
//மருத்துவர்களுக்கு நன்மையா தீமையா?//
மேலே கூறியபடி மருத்துவமனை முதலாளியாக இருக்கும் மருத்துவர்களுக்கு லாபம்
தனியாக கிளினிக் வைத்து பிராக்டிஸ் செய்யும் மருத்துவர்களுக்கு பாதிப்புதான்
ரவி 9:56 pm on June 27, 2009 Permalink |
புருனோ, தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். reliance fresh வந்தால் உள்ளூர் காய்கறி விற்பனையாளர்களுக்கு கேடு என்பது போல் உங்கள் பதில் இருக்கிறது. என் ஐயங்களை வரிசைப்படுத்துகிறேன். இதைப் பற்றி நீங்கள் உங்கள் வலைப்பதிவில் ஒரு கட்டுரை எழுதினால் நன்று.
1. மருத்துவத்துறையில் உலகமயமாக்கம் என்பது எதைக் குறிக்கிறது? பெரிய மருத்துவமனை நிறுவனங்களில் வெளிநாடு முதலீடு மட்டுமா அல்லது இன்னும் பலவா? இந்தியாவில் ஏற்கனவே இத்துறையில் உலகமயமாக்கம் வந்துவிட்டதா?
2. மருத்துவமுறையில் ஏற்கனவே நிறுவனமயமாக்கம் வந்துவிட்டது. நிறுவனமயமாக்கத்தினைக் காட்டிலும் உலகமயமாக்கம் எத்தகைய தீமைகள் விளைவிக்கக்கூடியது?
3. சொந்தமாக சிறிய மருத்துவமனைகள் அமைத்துக் கொள்ள இயலாத மருத்துவர்கள், பிற மருத்துவப் பணியாளர்களுக்கு உலகமயமாக்கம் நன்மை இல்லையா? இதனால் மருத்துவ வேலைவாய்ப்புகள் கூடாதா?
4. மருத்துவச் சுற்றுலா பற்றி உங்கள் கருத்து என்ன? இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டு மருத்துவமனைகளை நாடி வருகிறார்கள். இதனால் வரும் பணப் புழக்கம், வெளிநாட்டுச் செலவாணி தவிர, வேறு என்ன நன்மைகள்? உள்ளூர் மக்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு இதனால் நன்மையா தீமையா?
5. உங்களை நான் புரிந்து கொண்டது சரியென்றால் இங்கிலாந்தில் உள்ளது போல் முழுக்க அரசு சார் மருத்துவச் சேவை வருவதை வரவேற்பீர்கள் என்று நினைக்கிறேன். அது இல்லா நிலையில் எந்த வகையான மாதிரியை நம் நாடு பின்பற்றலாம்?
6. sicko படம் பார்த்தீர்களா? அதைப் பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.
புருனோ 3:46 am on June 28, 2009 Permalink |
// reliance fresh வந்தால் உள்ளூர் காய்கறி விற்பனையாளர்களுக்கு கேடு என்பது போல் உங்கள் பதில் இருக்கிறது.//
ரவி ரிலையன்சு பிரசு (!!) வந்தால் காய்கறி வியாபாரிகளுக்கு கேடு இல்லாமல் இருக்கலாம்
ஆனால் கோக்கினாலும் பெப்சியினாலும் போவோன்டோவிற்கு கேடு இல்லை என்று உங்களால் கூற முடியுமா
வித்தியாசம் (அல்லது ஒற்றுமை) புரிகிறதா
புருனோ 3:48 am on June 28, 2009 Permalink |
//5. உங்களை நான் புரிந்து கொண்டது சரியென்றால் இங்கிலாந்தில் உள்ளது போல் முழுக்க அரசு சார் மருத்துவச் சேவை வருவதை வரவேற்பீர்கள் என்று நினைக்கிறேன். அது இல்லா நிலையில் எந்த வகையான மாதிரியை நம் நாடு பின்பற்றலாம்?//
சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள்
அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்
//6. sicko படம் பார்த்தீர்களா? அதைப் பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.//
இல்லை. இது வரை பார்க்க வில்லை
புருனோ 3:55 am on June 28, 2009 Permalink |
//4. மருத்துவச் சுற்றுலா பற்றி உங்கள் கருத்து என்ன? இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டு மருத்துவமனைகளை நாடி வருகிறார்கள். இதனால் வரும் பணப் புழக்கம், வெளிநாட்டுச் செலவாணி தவிர, வேறு என்ன நன்மைகள்? உள்ளூர் மக்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு இதனால் நன்மையா தீமையா?//
அதிர்ஷ்டவசமாக இங்கு (தமிழகத்தில்) ஆரம்ப சுகாதார நிலையங்களின் உள்கட்டமைப்பு அபாரமாக உள்ளது
எனவே 75 சதவித மக்களின் அன்றாட (காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு) போன்ற நோய்களுக்கு அவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சை கிடைக்கிறது
அது போல் இரண்டாம் கட்ட மருத்துவவசதிகளும் (சிசேரியன், குடலிறக்க அறுவை சிகிச்சை) போன்றவற்றிலும் குறையில்லை
இந்த நிலையில், தமிழகத்தில் “மருத்துவ சுற்றுலாவினால்” பாதிப்பு இல்லை
ஆனால்
இது போல் (கேரளம் குஜராத் தவிர ) வேறு எதாவது மாநிலம் முயன்றால் ஆப்பு தான் என்பது என் கருத்து
// உள்ளூர் மக்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு இதனால் நன்மையா தீமையா?//
மருத்துவ சுற்றுலா என்பது பெரும்பாலும் அவசர உயிர் காக்கும் சிகிச்சைக்கு கடைபிடிக்கப்படுவது (உதாரணமாக விபத்து , சிசேரியன், பேறுகாலம்)
எனவே இங்கு ஒரு இந்திய பெண்ணின் பேறுகாலத்தை கவனிக்காமல் அமெரிக்க பெண்ணின் பேறுகாலத்தை கவனிக்கும் நிலை வரவில்லை (புரியவில்லை என்றால் கூறவும்)
அல்லது
இங்கு சாலை விபத்தில் அடிபட்டவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர் அந்த நேரம் ஒரு ஐரோப்பியருக்கு சிகிச்சை அளிப்பதால் சாலை விபத்து நோயாளியை கவனிக்காத நிலை வரவில்லை
ஆனால்
அடிப்படை கட்டமைப்பு இல்லாத வேறு ஏதாவது மாநிலம் இது போல் முயன்றால் மக்கள் கதி அதோ கதி தான்
புருனோ 3:57 am on June 28, 2009 Permalink |
//3. சொந்தமாக சிறிய மருத்துவமனைகள் அமைத்துக் கொள்ள இயலாத மருத்துவர்கள், பிற மருத்துவப் பணியாளர்களுக்கு உலகமயமாக்கம் நன்மை இல்லையா? இதனால் மருத்துவ வேலைவாய்ப்புகள் கூடாதா?//
(சொந்தமாக சோடா கம்பெனி ஆரம்பிக்க முடியாமல் போனதற்கு காரணம் பெப்சி என்பது போல்) சொந்தமாக சிறிய மருத்துவமனைகள் அமைத்துக் கொள்ள இயலாமல் போவதே உலகமயமாக்கலினால் தான் என்ற கருத்திற்கு உங்கள் பதில் என்ன
புருனோ 4:09 am on June 28, 2009 Permalink |
//1. மருத்துவத்துறையில் உலகமயமாக்கம் என்பது எதைக் குறிக்கிறது? பெரிய மருத்துவமனை நிறுவனங்களில் வெளிநாடு முதலீடு மட்டுமா அல்லது இன்னும் பலவா? இந்தியாவில் ஏற்கனவே இத்துறையில் உலகமயமாக்கம் வந்துவிட்டதா?//
வந்து கொண்டு இருக்கிறது
உதாரணம் – கருவிகள்
//2. மருத்துவமுறையில் ஏற்கனவே நிறுவனமயமாக்கம் வந்துவிட்டது. நிறுவனமயமாக்கத்தினைக் காட்டிலும் உலகமயமாக்கம் எத்தகைய தீமைகள் விளைவிக்கக்கூடியது?//
ஒரு உதாரணம்
விட்டமின் சி மாத்திரைகள் குறைந்த விலையில் சீனாவில் இருந்து வந்தவுடன், அந்த விலைக்கு தயாரிக்க முடியாது என்பதால் நமது நிறுவனங்கள் அந்த தயாரிப்பை நிறுத்தி விட்டார்கள்
ஒலிம்பிக்ஸ் சமயம் சீனாவும் அந்த தயாரிப்பை நிறுத்திய உடன் மருந்து தட்டுப்பாடு
–
நம் நிறுவனங்கள் அந்த தயாரிப்பை நிறுத்தி சில காலமே ஆனபடியால் மீண்டும் அவர்களால் தயாரிக்க முடிந்தது. அதே நேரம் ஒரு பத்து வருடம் தயாரிக்காத மருந்து உடனடியாக தயார் செய்ய முடியாது. (நீங்கள் ஐந்து வருடமாக பயன்படுத்தாத fortranல் திடீரென நிரல் எழுத சொன்னால் என்னவாகும்)
–
இது விட்டமின் மாத்திரை
இதை சாப்பிடாவிட்டால் உயிர் போகாது. ஒரு எலுமிச்சையில் அந்த சத்து உள்ளது
–
இதே போல் உயிர் காக்கும் மருந்துக்களுக்கும் இந்த நிலை வந்தால் எனனவாகும் என்று யோசித்து பாருங்கள்
புருனோ 4:15 am on June 28, 2009 Permalink |
http://daseindia.blogspot.com/2007/06/dase-press-release.html
http://daseindia.blogspot.com/2007/06/dase-press-release-regarding-corporate.html
http://daseindia.blogspot.com/2007/05/small-clinics-by-corporate-hospitals.html
http://1.bp.blogspot.com/_QXXe1KDxmhE/Rmrox8YR-TI/AAAAAAAAAGU/mVITp2okVpg/s1600-h/IMAGE0075.JPG
http://1.bp.blogspot.com/_QXXe1KDxmhE/Rmrow8YR-QI/AAAAAAAAAF8/MA_TD2tWW10/s1600-h/IMAGE0072.JPG
புருனோ 4:03 am on June 28, 2009 Permalink |
ரவி
இதில் ஒரு vicious cycle உள்ளது
Increase the quality of the product or service manyfold and many times over what is needed –> increase the demand artificially (when there is no demand) –> eliminate the competitors by legal (both legal and ethical and legal and unethical) means –> slowly increase the cost –> This in long run will decrease the number of beneficiaries -> further cost –> an elite section using this –> Rest of the society (majority) resorting to “some other means”
இதற்கு ஒரு உதாரணமாக
குளிர்சாதன வசதி உள்ள திரையரங்கு –> அதிக கட்டணம் –> பலரால் செலுத்த முடியாமல் அவர்கள் திருட்டு விசிடியில் படம் பார்ப்பது என்பதை நீங்க்ள் அறிவீர்கள்
–
இதே போல்
நாளை மருத்துவமும் ஆகி விடும் வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா
–
ரவி 4:56 am on June 28, 2009 Permalink |
புருனோ, விரிவான பதில்களுக்கு நன்றி. கண்டிப்பாக வாதம் செய்யும் எண்ணத்துடன் கேட்கவில்லை. உலகமயமாக்கலுக்கு சார்பான எண்ணங்களும் இல்லை. அறிந்து கொள்ளும் நோக்கிலேயே கேட்டேன். நன்றி.
புருனோ 9:15 am on June 28, 2009 Permalink |
தெரியும் ரவி
உலகமயமாக்கல் என்று இவர்கள் தொழிற்நுட்பத்தை எடுத்துக்கொண்டால் அதை வரவேற்கலாம்
ஆனால் ஏற்கனவே தோல்வியடைந்த நிர்வாக நடைமுறைகளை புகுத்துவது தான் எரிச்சல்
மு. மயூரன் 12:39 pm on June 28, 2009 Permalink |
இப்போதைக்கு எனது பதிவொன்றுக்குத் தொடுப்பு:
http://mauran.blogspot.com/2007/06/sicko.html
மேலும் உரையாடலாம்.