http://jeyamohan.in/?p=3020 ல் //அனைத்…
http://jeyamohan.in/?p=3020 ல்
//அனைத்துக்கும் மேலாக காற்றில் தென்னை ஓலையின் மெல்லிய சிறகடிப்பொலி போல் எனக்கு அந்தரங்கமான ஒலி பிறிதொன்றில்லை. இருத்தலின் பேரின்பத்தை எனக்கு நினைவுறுத்தும் ஒலி அது. சன்னல் வழியாக கண்தூக்கிப் பார்க்கையில் கொல்லைப்பக்கத் தென்னை நெடுநாள் காதலிபோல நின்று கொண்டிருக்கிறது. தென்னையும் வாழையும்தான் குமரிமாவட்ட மரங்கள். இரண்டுமே ஈரத்துக்குரியவை. நீர் நிறைந்தவை.
குறிப்பாக இரவு நேரத்தில் தென்னை மிக நெருங்கி வந்துவிடுகிறது. //
படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்த வரிகள்
கண் தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்கானா தூரத்தில் சுதி சேறும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
சிட் சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
சிறகுளர்த்தும் ஓசை சங்கீதம்
கரைக்கொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
கைத்தட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
சிருங்கார சங்கீதம்
முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம்