////உங்களின் கண்மூடித்தனமான ‘சாரு’பாசத…
////உங்களின் கண்மூடித்தனமான ‘சாரு’பாசத்தை இந்த ஒரு முறையாவது கைவிட தருணமிது. இது போல் பல முறை சாரு தன்னுடைய அதிதீவிர காழ்ப்புணர்ச்சியை ஜெமோவிற்கு எதிராக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதற்கான தடயங்களை அவரின் பதிவிலேயே காணலாம். (மம்மி ரிடர்ன்ஸ் கட்டுரையே போதும்) ஆனால் அதெல்லாம் உங்களுக்கு வெறும் நகைச்சுவையாகத் தெரிந்தால் துரதிர்ஷ்டம்தான். //
சு.க.
நிஜமாகவே சொல்கிறேன். எனக்கு பார்வை குறைபாடா தெரியவில்லை. அது எனக்கு நகைச்சுவையாகவே பட்டது. அதுபோலவே ஜெமோவின் தொப்பி கட்டுரையும் எனக்கு மிகப்பெரிய நகைச்சுவை உணர்வை தந்தது. அதற்காக சினிமாக்காரர்கள் நடத்திய போராட்டம் அபத்தமென்று அச்சந்தர்ப்பத்திலும் நினைத்தேன்.
பாசத்தை திடீரென கைவிட அதென்ன கள்ளக் காதலா? //
http://naayakan.blogspot.com/2009/06/blog-post_27.html
லக்கி,
அது நகைச்சுவையா, காழ்ப்புணர்ச்சியா என்பது நபருக்கு நபர் மாறுபடும்.
தயிர் சாதத்தை பிரியாணி என்று ஊரை ஏமாற்றி விற்ற மோசடி பேர்வழியை வைத்து நான் கதையெழுதினால் பலருக்கு காமெடி, சிலருக்கு காழ்ப்புணர்ச்சி
பண்பலை வானொலி நிலையத்தில் விளம்பரம் செய்து விட்டு காசு கொடுக்காத மோசடி பேர்வழியை பற்றி நீங்கள் எழுதும் இடுகை பலருக்கும் காமெடி தான், ஆனால் சிலருக்கு காழ்ப்புணர்ச்சியாக தோன்றுகிறதல்லவா
இரண்டுமே மோசடிகள் தான். எழுதியது நகைச்சுவைக்காகத்தான். ஆனால் அனைவருக்கும் சிரிப்பு வர வேண்டும் என்று இல்லை. சிலருக்கு எரிச்சல் வரும்
சாருவின் கட்டுரையை வாசித்து உங்களுக்கு சிரிப்பு வரலாம். மற்றொருவருக்கு எரிச்சல் வரலாம். அது போல் ஜெமோவின் கட்டுரையை படித்து ஒருவர் சிரிக்கிறார் என்பதால் அனைவரும் சிரிக்க வேண்டும் என்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து
புருனோ 2:15 am on June 28, 2009 Permalink |
http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_28.html இடுகையில் வெண்பூ
//மொத்தத்தில் இந்த கருத்துப் பரிமாற்றங்களில் நான் உணர்வது ஒன்றே ஒன்றுதான். திரையில் தெரியும் பிம்பம்தான் நிஜ ரஜினி என்று நினைத்து அவரைத் தொடரும் ரசிக கண்மணிகள் (உங்கள் மொழியிலேயே சொன்னால் விசிலடிச்சான் குஞ்சுகள்) மற்றும் தன் தலைவன் எவ்வளவு தவறு செய்தாலும் அதற்கு சப்பைக்கட்டு கட்டும் அரசியல் கட்சித் தொண்டர்கள், இவர்களை ஒத்த அடிமைப்பட்டவர்கள் மனநிலையிலேயே தீவிர இலக்கிய வாசகர்களும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.//