”ஸ்பெல்லிங் பீ…
”ஸ்பெல்லிங் பீ” என்ற போட்டியில் இந்திய-அமெரிக்க சிறுமி முதலிடம் பெற்றுள்ளார். அமெரிக்கர்கள் ஆங்கிலத்தினை வளர்க்க இது மாதிரியான நிகழ்ச்சியினை நடத்துகிறார்கள். தமிழில் இந்த மாதிரியான நிகழ்ச்சி எந்த ஒரு தொலைக்காட்சி நடத்தினால் எவ்வாறு இருக்கும்?
1. சிறுவர் / சிறுமிகள் தமிழ் சொற்களை நன்கு கற்பார்கள்.
2. சிறுவர் / சிறுமிகளிடம் தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வம் மென்மேலும் வளரும்.
3. தமிழ் தெரிந்தால் பேரும் புகழும் வாங்கலாம் என்ற என்ற எண்ணம் அவர்களுக்கு வரும்.
yemkay 12:01 am on May 29, 2009 Permalink |
விசய் டிவியில் ”தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு” என்று ஒரு நிகழ்ச்சி வருகிறது.
ulagam 6:48 am on May 29, 2009 Permalink |
எம்கே,
அது பேச்சுப்போட்டி. சொற்போட்டி அல்ல. ஸ்பெல்லிங் பீ என்பது ஆங்கில சொற்போட்டி.
ரவி 7:19 am on May 29, 2009 Permalink |
எனக்கு இந்த நிகழ்ச்சியில் விருப்பம் இல்லை. தமிழ் என்றாலே இலக்கியம், மேடைப்பேச்சு என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்குவது போல இருக்கிறது.
ரவி 7:18 am on May 29, 2009 Permalink |
நல்ல யோசனை பாலா.
http://freerice.com போல ஒரு தளம் இருந்தா நல்லா இருக்கும்.
தமிழ் சொற்கள் பழகுவதற்கான ஒரு விளையாட்டு முயற்சி –
http://www.thiruthamizh.com/index_files/Page545.htm
http://koodal1.blogspot.com/2007/05/blog-post_03.html
http://www.hindu.com/2006/05/10/stories/2006051011240400.htm