தேர்தலுக்கு விடுமுறை தேவையா ?
விடுமுறையை பயன்படுத்தி மக்கள் பிக்னிக் செல்வது போல், தேர்தல் தினம் வேலைநாள் என்றால் தேர்தலை பிக்னிக் போன்று கருதி மக்கள் வாக்களிக்க வருவார்களா ? மும்பையில் 44 சதவீத வாக்குப்பதிவு.
விடுமுறையை பயன்படுத்தி மக்கள் பிக்னிக் செல்வது போல், தேர்தல் தினம் வேலைநாள் என்றால் தேர்தலை பிக்னிக் போன்று கருதி மக்கள் வாக்களிக்க வருவார்களா ? மும்பையில் 44 சதவீத வாக்குப்பதிவு.
ரவி 12:52 am on May 3, 2009 Permalink |
தனியாரில் பணி புரியும் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களைக் கருத்தில் கொண்டாவது விடுமுறை தேவை தான்.
ulagam 9:42 pm on May 3, 2009 Permalink |
ஓட்டு போடுவதற்கு எதற்கு விடுமுறை? எல்லோரும் ஓட்டு போட்ட பின் வேலைக்கு செல்லலாமே? செல்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை. அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர்களும் வாக்களித்து தங்களது வேலையை செய்கிறார்களே!….
ரவி 9:55 pm on May 3, 2009 Permalink |
பேருந்துகள் அவசியச் சேவையின் கீழ் வரும். அவை மற்ற விடுமுறை நாட்களிலும் கூட இயங்குகின்றன. வாக்குச் சாவடியில் எப்ப எவ்வளவு கூட்டம் இருக்கும்னு தெரியாது. அதற்கேற்ப தனியாரில் நேர அனுமதி பெற்று வந்து வேலைக்குத் திரும்பச் செல்வது சிரமம். ஒருவர் வாக்களிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவது முக்கியம்.
மணிகண்டன் 6:31 am on May 4, 2009 Permalink |
ரவி, நீங்கள் சொல்லுவது எல்லாம் பேச்சளவில் (theoretically!!!) சரி தான். ஆனால் வாக்கு சதவீதம் பார்த்தால் அப்படி தெரியவில்லையே. அலுவலகம் வைத்தால் மக்கள் இதை ஒரு பொழுதுபோக்காக செய்வார்கள் என்ற என் நம்பிக்கை தான் இந்த உளறல். அதை தவிர, தனியாரில் வேலை பார்க்கும் பலரும் சொந்த ஊரிலேயே தனது வாக்குரிமை வைத்துள்ளனர். அவர்கள் ஒரு நாள் விடுமுறைக்காக செல்வார்கள் என்பது சந்தேகம். சனி, ஞாயிறுகளில் தேர்தல் வைக்கலாம். வாக்களிப்பவருக்கு குங்குமம் வார இதழ் பரிசாக தரலாம்.