Examples of Analogy
ப்ரூனோவிற்கு பதில்:
இது தத்துவப் பேட்டை. நான் தத்துவம் முறையாக படித்ததில்லை என்னும் உரிமைத் துறப்புடன்:
வகுத்தல் சொல்லிக் கொடுக்கிறோம்.
உதாரணம்: 221/13 எப்படி செய்வது? –> 22/13 : 1; அப்புறமாக பாக்கி 8#1/13 ==> 7; எனவே: 17 என சொல்லிக் கொடுப்பது.
பொதுமையாக்கல்: 13 எழுதிக் கொண்டே போவோம் –> பதினேழு தடவை எழுதினால் 221 வருகிறதே! என்று புரிய வைப்பது.
பால் வீதி, சூரியன், பூமி, நிலவு:
எடுத்துக்காட்டு: தன்னைத் தானே சுற்றிக் கொண்டே இன்னொருத்தரை நடுவில் வைத்து சுற்றிவருவது; நேரடியாக செய்து காட்டுவது.
கொஞ்சம் மேலோட்டமாக மாடல் செய்து, கணினித் திரை மூலமாக விளக்கினால் அனலாஜி.
கணினி ப்ராஜெக்ட்:
எடுத்துக்காட்டு: நூலகத்தின் நிரலி பயன்பாடு; வலையகத்தில் எவ்வாறு சாஃப்ட்வேர் எழுதப்படுகிறது என்று உதாரணம் சொல்லி, நேரடியாக விளக்குவது.
Analogy: கட்டிடம் எவ்வாறு பலவற்றுக்கு உபயோகமாகிறது? திருமணக் கூடமும் கட்டிடம்; நெற்கூடம், வீடு, மருத்துவமனை என்று உதாரணம் சொல்லி அனைத்தும் வேறுபட்டாலும், எல்லாமே எழுந்து நிற்பதையும், கலையின் பல பரிமாணமாக இருப்பதையும் விளக்கி, அவ்வாறே கம்ப்யூட்டரும் பல விசயத்திற்கு உபயோகமாவதை சொல்வது.
புருனோ 7:25 pm on March 13, 2009 Permalink |
//எடுத்துக்காட்டு: தன்னைத் தானே சுற்றிக் கொண்டே இன்னொருத்தரை நடுவில் வைத்து சுற்றிவருவது; நேரடியாக செய்து காட்டுவது.//
இது அனலாஜி இல்லையா !!
பூமியை சூரியன் சுத்துவதற்கு எடுத்துக்காட்டு நிலா பூமியை சுற்றுவது இல்லையா
புதசெவி
bsubra 8:15 am on March 16, 2009 Permalink |
இருக்கலாம்! பெயரில் என்ன இருக்கு
புரிய வைத்தால் சரி?!