Story Reviews: Vettippayal
கதை அருமை. வாசகனை உள்ளே இழுத்து, யோசிக்க வைத்து, கனக்கவும் வைக்கிறது.
நன்றி கலந்த வாழ்த்து.
ஆனால்,
—-நான் அதிக மதிப்பெண் எடுக்காமல் இங்கேயே படித்து, இங்கேயே வேலை பார்த்து, இங்கேயே உங்களை பார்த்து கொண்டிருந்திருக்கலாம்.
—-
குற்றவுணர்ச்சியா அல்லது தகப்பன் மீது பழிபோட்டு தப்பிக்கும் குணமா என்று குழப்பாதபடிக்கு இந்த மாதிரி ‘எண்ணங்களை’, அபிப்ராயங்களை வேறு மாதிரி சொல்லலாம்.
கதாசிரியர் பார்வை, ‘கதையில் வரும் நான்’ சொல்லும் கருத்து – ஆகிய இரண்டும் வேறுபட்டிருக்கலாம்.
‘கதையில் வரும் நான்’ சொல்ல நினைப்பது – நான் செய்த பழிபாவம் என் பெற்றோரையே சேரும்.
‘கதாசிரியர் பார்வை’ – வினோத்துக்கு குற்ற உணர்ச்சி.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களைத் தவிர வேறு எதுவும் குற்றங்குறை கண்ணில்படவில்லை.
தந்தையுடன் வாழுபவருக்கும் பிரச்சினை, தந்தையை தூர வைத்திருப்பவருக்கும் மனக்கிலேசம் என்னும் இரு தூண்டிலையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
—-இப்ப காசு கொடுக்கறோம், சோறு மட்டும் கேட்காதனு சொல்றாங்க. இதான் கால மாற்றம் போலிருக்கு—-
தூள்