தமிழ் செய்தி இணையத் தளங்கள்
தமிழ் செய்தித்தாள் இணையத்தளங்களாகட்டும், தமிழ் செய்தி தளங்களாகட்டும் – பெண்கள்/நடிகைகள் பட கேலரி இல்லாத தளம் ஏதாவது இருக்கிறதா? சில தளங்களில் அந்த மாதிரி பக்கங்களில் விளம்பரங்கள் கூட இல்லை. தமிழர்கள் அவ்வளவு ஜொல்லு பார்ட்டிகளா?
ரவி 10:39 am on January 9, 2009 Permalink |
//தமிழர்கள் அவ்வளவு ஜொல்லு பார்ட்டிகளா?//
சந்தேகமா
இந்த ஆண்டு கூகுளில் ஐசுவர்யா ராயை விட நமிதாவைத் தான் கூடுதலா தேடி இருக்காங்க.ஆனா, எனக்கு என்ன கடுப்புன்னா, இந்த மாதிரி படம் போடுற இதழ்கள், பட விமர்சனம் வரும்போது மட்டும் உத்தமர்கள் மாதிரி தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள்.
புருனோ 2:03 pm on January 9, 2009 Permalink |
உண்மை
பாய்ஸ் படத்தை பற்றி ஒரு வரியில் விமர்சித்த அந்த விகடன் இதழின் பிற பக்க படங்கள் “தூ” என்று தான் கூறும்படி இருந்தது
ரவி 11:59 am on January 10, 2009 Permalink |
பல கருத்துகணிப்புகளில் சென்னை தான் காமப் படங்கள் பார்க்கும் இந்திய நகரங்களில் முன்னணியில் இருப்பதாக வேறு சொல்கிறார்கள். செய்தித் தளங்களில் படங்கள் இருப்பதற்கு வாசகர்களை மட்டும் குறை சொல்ல இயலாது. ஒரு பிபிசி போல தரமான செய்திச் சேவையை மட்டும் நம்பி இயங்கும் நிறுவனங்களையும் நாம் உருவாக்க முனையவில்லை.